twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் உதயநிதி ஸ்டாலினை தொடர்ந்து திட்டி உள்ளேன்...அப்படிப்பட்ட காரணம் அது !ஜீவா ரவி பேட்டி

    |

    சென்னை: வக்கீல், போலீஸ் கதாபாத்திரம் என்றால் இன்றளவும் தமிழ்த்திரையுலகில் உள்ளோருக்கு ஞாபகத்திற்கு வருபவர் ஜீவா ரவி தான். இவர் நடிகர் கமல்ஹாசனின் நம்பிக்கைகுரியவரான மகேந்திரனின் சகோதரர் ஆவார் என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மை .

    தான் நடித்த படங்களை எண்ணுவதில்லை என்றும், எண்ணிக்கையில் நம்பிக்கை இல்லையென்றும், தான் நடித்த கதாபாத்திரங்கள் மீதே நம்பிக்கை வைத்துள்ளதாகவும் கூறுகிறார் ஜீவா ரவி.

    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சன். டி.வி.யில் ஒளிப்பரப்பாகும் திருமகள் சீரியலில் நடித்து கொண்டிருந்த ஜீவா ரவி, நமது பிலிம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

     ஆடுகளம் படத்தில் நடித்த 83 வயது பாட்டி நிஜமாகவே அங்கு வாழ்ந்தவர்.. இயக்குநர் வெற்றிமாறன்! ஆடுகளம் படத்தில் நடித்த 83 வயது பாட்டி நிஜமாகவே அங்கு வாழ்ந்தவர்.. இயக்குநர் வெற்றிமாறன்!

     'ப' வரிசையில் படங்கள்

    'ப' வரிசையில் படங்கள்

    கேள்வி: நீங்கள் எப்படி திரைத்துறைக்கு வந்தீர்கள்?

    பதில்: சரவணா பிலிம்ஸ் என்ற பெயரில் எனது தாத்தா ஜி.என்.வேலுமணி, 'ப' வரிசையில் அதாவது படகோட்டி, பாகப்பிரிவினை, பாதகாணிக்கை போன்ற தலைப்பில் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரை வைத்து பல படங்களை தயாரித்துள்ளார். அவரது வழியில் நான் இன்று சிறு நடிகனாக நடித்து வருவதில் எனக்கு சந்தோஷம்.

     நெஞ்சுக்கு நீதி

    நெஞ்சுக்கு நீதி

    கேள்வி: நீங்கள் நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் தொடர்ந்து நடிப்பது எப்படி?

    பதில்: உதயநிதி ஸ்டாலினுடன் தொடர்ந்து மூன்று படங்கள் நடித்து வருகிறேன். முதல் படம் கண்ணை நம்பாதே. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங்கும் முடித்து விட்டேன். இரண்டாவதாக மகிழ்திருமேனி இயக்கத்தில் ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் "தடம்" படத்திலும் நடித்து வருகிறேன். மேலும் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திலும் நடித்துள்ளேன். மேற்கண்ட இரண்டு படங்களிலும் உதயநிதி ஸ்டாலினை திட்டுவது போன்ற கதாபாத்திரமே எனக்கு அமைந்துள்ளது. அவரை திட்டும் சூழ்நிலையை ஏற்படுத்திய காட்சிகள் மற்றும் இயக்குனர்களின் படைப்பு தான் இப்படி ஒரு கட்டத்திற்கு கொண்டு வர காரணம். இந்த படத்தின் படப்பிடிப்பை எங்களால் மறக்க முடியாது. நடிகர் விவேக் மற்றும் சுபா வெங்கட் ஆகியோர் இந்த தருணத்தில் காலமானார்கள். ஏனெனில் கொரோனா தீவிரமாக பரவி வந்த நேரத்தில் மிகவும் கட்டுப்பாடுகளுடன் பொள்ளாச்சியில் படப்பிடிப்பை நடத்தினோம். நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்காக உழைத்து அனைத்து உள்ளங்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

     அனல் மேலே பனித்துளி

    அனல் மேலே பனித்துளி

    கேள்வி: தற்போது நீங்கள் நடித்து வரும் படங்கள் குறித்து...

    பதில்: இயக்குனர் பா.ரஞ்சித்தின் "பட்டறை" படத்திலும், யோகிபாபு நாயகனாக நடிக்கும் "பொம்மை நாயகி" படத்தில் நல்ல வக்கீலாக நடித்துள்ளேன். இந்த படத்தின் கதை அனைவரது மனதை தொடும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமில்லை என்றார். மேலும் அவர் கூறுகையில், வெற்றிமாறன் இயக்கும் படங்களில் நடிக்கவேண்டும் என்பது எல்லோரும் விரும்புவார்கள். நானும் அப்படித்தான். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரது தயாரிப்பில், ஆன்ட்ரியா நடிக்கும் "அனல் மேலே பனித்துளி" திரைப்படத்தில் நடித்துள்ளேன். பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். சினிமாத்துறைக்கு த்ரி (3) படம் மூலம் என்னை அறிமுகப்படுத்திய நடிகர் தனுஷ் இத்திரைப்படத்தை வெளியிடுகிறார்.

     காண்டம்ஸ் படத்திற்கு 1 மில்லியன் வ்யூஸ்

    காண்டம்ஸ் படத்திற்கு 1 மில்லியன் வ்யூஸ்

    கேள்வி: உங்களை குறும்பட இயக்குனர்கள் எளிதாக அணுகுவதற்கு என்ன காரணம்?

    பதில்: எனது மகன் குறும்பட இயக்குனர். ஏனென்றால் எனது மகன் அந்த குறும்படத்திற்காக என்ன கஷ்டப்படுகிறான் என்பதை என்னால் உணர முடியும். அதனால் தான் யார் என்னை வந்து அழைத்தாலும் உடனடியாக நடித்து கொடுத்து விடுவேன். 25ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை செலவாகும் குறும்படத்திற்கு பெற்றோர்களிடம் பணம் வாங்கி அவர்கள் குறும்படத்தை எடுக்கிறார்கள். என்னை நடிக்க அழைக்கும் குறும்பட இயக்குனர்கள் சிலர் நடித்ததற்கு பணம் கொடுப்பார்கள், ஒரு சிலருக்கு இலவசமாகவே நடித்துக் கொடுத்து வருகிறேன்.தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்த காண்டம்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தலைப்பு மட்டுமே தவறாக இருப்பது போலே தெரியும் . ஆனால் அதில் கருத்து ஆழமானது. ஒரு பள்ளிக்கூட பெண்ணின் பையில் காண்டம்ஸ் இருக்கும். அதை வைத்து தான் படத்தின் கதை செல்லும். படத்தை பார்த்தால் அந்த குறும்படம் அனைவருக்கும் பிடிக்கும். மேலும் அவர் கூறுகையில், சினிமாவில் கிடைக்காத திருப்தி, குறும்படத்தில் கிடைக்கிறது என்றார்.

     கமலை மறக்க முடியாது

    கமலை மறக்க முடியாது

    கேள்வி: உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?

    பதில்: ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் நான். ஆனால் கமலை பிடிக்காது என்பது கிடையாது. எனது தம்பி மகேந்திரனை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பாராட்டியது எங்களால் மறக்க முடியாது. மகேந்திரன் முன்னால் வர மாட்டார். பின்னால் இருந்து அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பவர் என்றார். மேலும் தனது அண்ணன் சந்திரஹாசன் இடத்தை நிரப்ப மகேந்திரன் தான் சரியான நபர் என்று கூறியதை எங்கள் குடும்பத்தினர் அனைவரும் பெருமைக் கொண்டனர்.

    மறக்க முடியாத கதாபாத்திரங்கள்

    கேள்வி: நீங்கள் எத்தனை படங்களில் நடித்துள்ளீர்கள்?

    பதில்: நான் நடிக்கும் படங்களை எண்ணுவதில்லை. என்னை பொறுத்துவரை, எண்ணிக்கையில் நம்பிக்கை இல்லை. நடிக்கும் கதாபாத்திரங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். குறிப்பாக சொல்லப்போனால் ஜீவா படத்தில் கோச்சாகவும், சாட்டை படத்தில் அப்பாவாகவும், த்ரி(3) படத்தில் ஜனனி அப்பாவாக நடித்தது என்னால் மறக்க முடியாது. அதுபோன்ற 2022ம் ஆண்டு வெளிவருகின்ற படங்களில் எனது கதாபாத்திரங்கள் மக்களால் மறக்க முடியாத கதாபாத்திரமாக அமையும் என நம்புகிறேன்

    கேள்வி: உங்களது ஆசை என்ன?

    பதில்: நடிகர் ரஜினிகாந்த, கமல்ஹாசன் ஆகியோருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் ஆசை என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/_sFUxvLMF_k இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத், நடிகர் ஜீவா ரவி இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

    English summary
    Reasons Why I scolded Udhayanidhi Stalin Continuously , Jeeva Ravi Exclusive Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X