யாரை காதலிக்கிறார் நடிகை ரெபா மோனிகா ஜான்...கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டான அந்த நடிகர் யார் ?
சென்னை: எனக்கு கருப்பு கலர் ரொம்ப பிடிக்கும் என்று நடிகை ரெபா மோனிகா ஜான் தெரிவித்தார். ரெபா ரசிகர்கள் நிறைய பேர் ரெபாவின் போட்டோஷூட்ஸ் அனைத்திற்கும் நிறையவே ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
Recommended Video
மேலும் எப்.ஐ.ஆர். படத்தில் எனக்கும், விஷ்ணு விஷாலுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக அமைந்திருந்ததாகவும், எப்.ஐ.ஆர். படத்தில் எனக்கு அழுத்தமான கேரக்டர் அமைந்தது சந்தோஷம் என்றும் தெரிவித்தார்.
பின்னர் காதலர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.ஆஹா ஒடிடி தளத்தில் வெளியாகிய ஆகாஷ் வாணி திரைப்படத்தின் நடிகையும், பிகில் படத்தில் நடித்த நடிகை ரெபா மோனிகா ஜான் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி:

கவலைப்படாதீர்கள்
கேள்வி: காதல் குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: காதலன், காதலி இல்லை என்று கவலைப்படாதீர்கள். முதலில் நமது குடும்பத்தை காதலிக்க வேண்டும். எனக்கும் எனது குடும்பம் தான் முக்கியம். நான் எனது குடும்பத்தையும், நண்பர்களையும் காதலிக்கிறேன்.காதல் பொதுவானது, அன்பை கொடுப்பவர்களும் பெறுபவர்களும் பாக்கியசாலிகள்.

குட்டி பட்டாசு
கேள்வி: உங்கள் திரைப்பட பயணம் எப்படியிருக்கிறது.?
பதில்: நான் மலையாள படத்தில் அறிமுகம் ஆனேன். பின்னர் 2018ம் ஆண்டு ஜருகண்டி படத்தில் நடிகர் ஜெய் உடன் நடித்தேன். பின்னர் நான் எதிர்பார்க்காத விதமாக நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தில் அனிதா என்ற கேரக்டரில் நடித்திருந்தேன். இந்த கேரக்டர் எல்லோருக்கும் பிடித்திருந்தது. பிகில் படம் எனக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுடன் தனுசு ராசி நேயர்களே படத்திலும், சந்தோஷ் தயாநிதி மியூசிக்கில் குட்டி பட்டாசு என்ற ஆல்பம் பாடலில் நடித்தேன். தற்போது எப்.ஐ.ஆர். படத்திலும், ஆகாஷ் வாணி படத்திலும் நடித்துள்ளேன்.

பேவரைட் கலர்
கேள்வி: எப்ஐஆர் படம் குறித்து:
பதில்: எப்ஐஆர் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. என்னுடைய நடிப்பை அனைவரும் பாராட்டியுள்ளார்கள் படம் பார்த்தவர்கள் முதல் பாதியில் ஒரு சில சீன்களில் வந்தாலும், பிற்பாதியில் நன்றாக நடித்துள்ளீர்கள் என்று பாராட்டினார்கள். இதை கேட்கும்பொழுது எனக்கு ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இந்த படத்தில் அழுத்தமான கேரக்டர் எனக்கு அமைந்தது. என்னுடைய பேவரைட் கலரான கருப்பு கலரில் உடையணிந்து சண்டை காட்சியில் ஈடுபடுவேன். இந்தப்படத்தில் எனக்கும் விஷ்ணு விஷாலுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது என்றார்.

நிஜக்கதை
கேள்வி: ஆகாஷவாணி படம் ஆஹா ஒடிடி தளத்தில் வெளியாவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: இந்த படத்தின் மீதான ஆர்வம் எனக்கு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படம் நிஜக்கதையை அடிப்படையாக கொண்டு தயாரிப்பட்டுள்ளது. நடிகர் கவினுடன் இந்த படத்தில் நடித்துள்ளேன். காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி ஆஹா ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த திரைபடத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொண்டார்.
வித்தியாசமான கதை
கேள்வி: உங்களது லட்சியம் என்ன?
பதில்: நான் தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். தமிழ், தெலுங்கில் வெளியாகவுள்ள October 31st Ladies Night படத்திலும் நடித்து வருகின்றேன். எனக்கு வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்றார். மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் ரெபா. இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/9KTcm0rnlYY இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.


Click it and Unblock the Notifications











