விஜய், சங்கீதா இடையே சமரச பேச்சுவார்த்தை.. எஸ்.ஏ.சியின் அதிரடி நடவடிக்கை என்ன?
சென்னை: விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு இருக்கும் நிலையில், நேற்று தயாரிப்பாளர் கல்பாதி சுரேஷ் இல்ல திருமண விழாவில் விஜய் பட்டி வேட்டி, பட்டு சட்டை அணிந்தும், திரிஷா அதே நிறத்தில் சேலை அணிந்தும் ஒரே காரில் வந்து கலந்து கொண்டார்கள். இருவரும் ஜோடியாக திருமண விழாவில் கலந்து கொண்டது வீடியோ வெளியாகி காட்டுத்தீ போல பற்றி எரிந்து கொண்டு இருந்த நிலை இருக்கிறது. இது குறித்து சினிமா பிரபலம் திண்டுக்கல் வெங்கடேசன் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், இந்த விஷயத்தில் தேர்தலுக்கு விஜய் இந்த விஷயத்திற்கு ஒரு முற்றிப்புள்ளி வைப்பார். அதுவரையில் விஜய் குறித்தும் வாய் திறக்க மாட்டார்.
விஜய், திரிஷாவுடன் திருமணவிழாவில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததை அவரின் ரசிகர்கள் இரண்டு விதமாக பார்க்கிறார்கள். ஒரு சிலர் அது தனிப்பட்ட விஷயம் என்கின்றனர். ஒரு சிலர், அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என இரண்டு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு விஜய் இப்படி செய்து இருக்கவே கூடாது இது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் குறித்து அவரது மனைவி சங்கீதா பலவிதமான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். அது இணையத்தில் பற்றி எரிந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் விஜய் இப்படி செய்யலாமா?

சிக்கலாக மாறும்: வழக்கமாக விஜய் மிகவும் அமைதியானவர்? எதை பற்றியும் அவ்வளவு சீக்கிரமாக பேசமாட்டார். ஆனால். அதை செய்கையில் காட்டி விடுவார், அதைத்தான் நேற்று விஜய் செய்கையில் செய்து இருக்கிறார். ஆனால், அவரின் நிலைப்பாடு என்ன என்பதை அவரின் குடும்பத்திற்கும், நாட்டு மக்களுக்கும், அரசியல்வாதிக்கும் ஒரு முடிவை சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு எதுவுமே பேசாமல் விஜய் அமைதியாக இருந்தால், பிரச்சனை மேலும் சிக்கலாக தான் மாறும்.

பேச்சுவார்த்தை: எனக்கு வந்த தகவலின் படி தேர்தல் வரை விஜய் இது குறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க மாட்டார். தேர்தலுக்குப் பின் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பார். அதேபோல இந்த விவாகரத்து விஷயம் பூதாகரமான நிலையில் விஜயின் பெற்றோரும் சங்கீதாவின் பெற்றோரும் இது குறித்து அதிரடியான முடிவு எடுக்க தயாராகி விட்டார்கள். இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சுமுகமாக சேர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. குழந்தைகளுக்காக சங்கீதாவும் சேர்ந்து வாழலாம் என்கின்ற முடிவில் தான் இருந்துள்ளார். ஆனால், நேற்று விஜய் இப்படி ஒரு விஷயத்தை செய்துவிட்டதால், இனிய அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை. ஆனால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது விஜய் தான் என திண்டுக்கல் வெங்கடேஷன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











