காரில் மோதிரம் போட்டு ப்ரொபோஸ்.. இனி மேல் ஆண்களையே நம்ப மாட்டேன்.. நடிகை ரிஹானா கதறல்!

சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ரிஹானா பேகம் மீது தொழிலதிபர் ராஜ் கண்ணன் பூந்தமல்லி காவல் நிலையத்தில் திருமண மோசடி புகார் அளித்துள்ளார். மேலும், தன்னை ஏமாற்றி 20 லட்சத்தை ஏமாற்றிவிட்டதாக தொழிலதிபர் கூறியிருந்த நிலையில், இதுகுறித்து நடிகை ரிஹானா Puthiya Sinthanai யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், நான் தொழில் அதிபர் ராஜ் கண்ணனை முதல் முதலில் சந்தித்தது என்னுடைய தோழியின் மூலமாகத்தான் என்னுடைய தோழியுடன் தான், அவர் உறவில் இருந்தார். இருவருக்கும் சண்டை ஏற்பட்டபோது நான், அவர்களின் சண்டையை சமாதானம் செய்வதற்காகத்தான் தொழில் அதிபரை சந்தித்து பேசினேன். அப்போது, தொழில் அதிபரின் வளர்ப்பு மகள் தியா என்பவள் என்னுடைய போன் நம்பரை வாங்கி, தொழில் அதிபரிடம் கொடுத்தார்.

Reehana Pandian Stores interview
Photo Credit:

நடிகை ரிஹானா: அப்போது அவர், NGO தொழில் தொடங்க இருப்பதாகவும், அதில் பெண்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று என்னிடம் கூறினார். அது பற்றி பேசுவதற்காக நாங்கள் இருவரும் காரில் சென்று கொண்டிருந்த போது, காரின் முன் பகுதியில் அமர்ந்து இருந்தேன். எனக்குப் பின்னால் அவருடைய வளர்ப்பு மகள் தியா இருந்தால். காரில் நான் இருந்தபோது தான் எனக்கு மோதிரத்தை போட்டு ப்ரொபோஸ் செய்தார். அதை தியா வீடியோவாக எடுத்தார். மேலும், இந்த மோதிரத்தை கழட்டி விடக்கூடாது, உன்னை போன்ற பெண் எனக்கு தேவை, நான் தனி ஆளாக எத்தனை ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன், உன்னை போன்ற ஒரு பெண்ணுடன் வாழ வேண்டும், குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன் நன்றாக யோசித்து உன்னுடைய முடிவை என்னிடம் சொல்லு என்றார். அப்போது கூட, நான் ஆறு மாதம் டைம் வேண்டும் என்று கேட்டேன். அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது.

நான் சம்பாதித்த பணம்: இந்த நேரத்தில் தான் என்னுடைய வீட்டிற்கு அருகில் ஒரு வீடு விற்பனைக்கு வந்தது, அந்த வீட்டை வாங்குவதற்காக நான் பேங்கில் என்னுடைய நகைகள் அனைத்தையும் அடமானம் வைக்கச் சென்றேன். அப்போது, நான் ராஜ் கண்ணன் பேங்க்கிற்கு வந்தார். என்னுடைய நகைகளை பார்த்ததும் அவரின் எண்ணம் மாறவிட்டது. பேங்க் வேலை முடிந்ததும், இருவரும் ஒரு மீட்டிங்கிற்கு சென்றோம். அந்த மீட்டிங்கில் 20 லட்சம் ரூபாயை இன்வெஸ்ட்மென்ட் செய்தால் பெரிய தொகையை எடுக்கலாம் என்று ஒருவருடன் அவர் பேசிக்கொண்டு இருந்தார். எனக்கும், சினிமாவை மட்டும் நம்பி இருக்க முடியாது என்பதால், சிறுக சிறுக நான் சேர்ந்து வைத்த அனைத்து நகைகளை அடகு வைத்து பணமாக அவரிடம் கொடுத்தேன். அதற்காக அனைத்து ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது. அவர் என்னை ப்ரொபோஸ் செய்து இருப்பதால், நிச்சயமாக அவர் என்னை ஏமாற்ற மாட்டார் என்று அவர் மீது நான் பெரிய அளவில் நம்பிக்கை வைத்தேன். கடைசியில் என்னை அவர் ஏமாற்றி விட்டார். அதற்கான அத்தனை ஆதாரமும் என்னிடம் உள்ளது. பயில்வான் ரங்கநாதன் பேசுவது போல, நான் பெரிய பங்களாவில் இல்லை, ஒரு சிறிய வீட்டில் தான்,நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாழ்க்கையை நடத்தி வருகிறேன் என்று நடிகை ரிஹானா அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X