»   »  கத்துக்க மறுக்கும் ரீமா!

கத்துக்க மறுக்கும் ரீமா!

Subscribe to Oneindia Tamil

தமிழ் கற்றுக் கொண்டும், தெரிந்த தமிழை அரைகுறையாக குத்திக் குதறிக் கொண்டும்தமிழில் பல நடிகைகள் கோவிந்தா போட்டு வரும் நிலையில் ஒரு வார்த்தை கூடதமிழில் கற்றுக் கொள்ளாமல் படு பிடிவாதமாக இருக்கிறார் ரீமா சென்.

மும்பையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தபோது ரீமா சென் சுத்தமாக தமிழ்தெரியாத பெண்ணாகத்தான் இருந்தார். மின்னலே ஹிட் ஆனவுடன் தொடர்ந்துபடங்கள் கிடைக்க ஆரம்பித்ததால் சரி இனிமேல் தமிழ் கற்றுக் கொண்டு கலக்குவார்என எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால் இந்த நிமிஷம் வரைக்கும், அதாவது கிட்டத்தட்ட 10 படங்கள் வரை நடித்துமுடித்தும் கூட இதுவரை ஒரு தமிழ் வார்த்தையைக் கூட ரீமா பேசியதில்லையாம்.ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட ஆங்கிலத்தில்தான் அளவளவாவுகிறார். அவருக்கானவசனங்களையும் ஹிந்தியில் அல்லது ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டுதான்உதடசைக்கிறாராம்.

ஏன் இப்படி தமிழ் தெரியாத தமிழ் நடிகையாக தொடருகிறீர்கள் என்று ரீமாவிடம்யாராவது கேட்டால், தமிழ் மீது வெறுப்பு எல்லாம் இல்லை. நான் தமிழ் சூழலில்வளர்ந்த பெண் இல்லை, எனது தாய்மொழி வேறு அதன் கலாச்சாரப் பின்னணி வேறு.

இப்படிப்பட்ட நான், தமிழில் அரைகுறையாகப் பேசி அது தப்பாகி விட்டால் என்னசெய்வது? அது மொழிக்கும் அவமரியாதை தமிழ் நாட்டு மக்களுக்கும் மனசுக்குகஷ்டமாகி விடும். அதனால்தான் நான் தமிழில் பேசுவதை தவிர்க்கிறேன்.

எனக்கு யாராவது தமிழில் பேசினால் ஓரளவுக்குப் புரியும். அதை வைத்துக் கொண்டுநான் ஆங்கிலத்தில் பதிலளிக்கிறேன். அவர்களுக்கு அது புரிகிறது. எனவே மொழிப்பிரச்சினை வரவில்லை என்கிறார் ரீமா.

சமீபத்தில் மும்பையில் மாளவிகாவுக்கு பெட்ரோத்தல் நடந்தபோது மணமகளின்தோழியாக ரீமாதான் இருந்தாராம். அந்தளவுக்கு இருவரும் நல்ல தோழிகளாம்.கல்யாணத்திற்கும் நான் தான் மாளவிகா கூட இருப்பேன் (முடிஞ்ச பிறகு இருக்கமாட்டீங்கள்ள??) என்கிறார் ரீமா.

தமிழில் கலக்கி வரும் ரீமா அடுத்து தெலுங்கில் ஒரு புதுப் படத்தில் புக்ஆகியுள்ளாராம். அதிலும் கவர்ச்சிதான் பிரதானமாம். கவர்ச்சி மட்டும்தான்பிடித்திருக்கிறதா என்றால், என்னை எந்த உடையில் பார்த்தால் சிறப்பாக இருக்குமோ,அந்த உடையில் நடிக்கிறேன். தட்ஸ் ஆல் என்று முறுவலுடன் முடித்துக் கொண்டார்.

வாவ்மா!

Read more about: reema sen and tamil

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil