»   »  ரீமாவுக்கு கல்யாணம்?

ரீமாவுக்கு கல்யாணம்?

Subscribe to Oneindia Tamil

எனக்குக் கல்யாணம் என்று சிலர் தேவையில்லாமல் வதந்தி கிளப்பி விட்டுள்ளனர். இப்போதைக்கு அதுக்கு சான்ஸே இல்லை என்கிறார் ரீமா சென்.

மின்னல் என மின்னலே மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த ரீமா சென், ஜில்லென்ற கவர்ச்சியால், சில்லுன்னு ஒரு ரவுண்டு அடித்துக் கொண்டிருக்கிறார்.

வல்லவனில் நடித்தபோது சிம்புவுடன் வம்பு ஏற்பட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பினார் ரீமா. திமிரு படத்தில் நடித்தபோது விஷாலுடன் காதல்என்று ரீமாவைப் பற்றி வதந்தி கிளம்பியது.

இந்த நிலையில் ரீமாவுக்கு கல்யாணம் முடிவாகி விட்டதாகவும், விரைவில் டும் டும் என்றும் புதுச் செய்தி கிளம்பியுள்ளது. அப்படீங்களா ரீமா என்றுபதவிசாக பக்கத்தில் உட்கார வைத்துக் கேட்டோம்.

அய்யோ, அப்படியெல்லாம் இல்லை. யாரோ சிலர் வதந்தி கிளப்பி விட்டுள்ளனர். இப்போதைக்கு கல்யாணம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

நான் இப்போதுதான் நடிக்கவே ஆரம்பித்திருக்கிறேன். சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. கவர்ச்சியை மட்டும் நம்பி நடித்துக் கொண்டிருக்கமுடியாது. விதம் விதமான கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்.

எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில்தான் நடிக்க ஒப்புக் கொள்கிறேன். அதனால்தான் வல்லவனுக்குப் பிறகு சின்ன கேப் விழுந்துவிட்டது.

எனக்குப் பிடிக்காத படங்களை நான் நிராகரித்து விட்டேன். அதை வைத்து திருமணம் அது, இது என்று கிளப்பி விட்டு விட்டார்கள்.

அதேபோல நான் யாரையும் காதலிக்கவும் இல்லை. எனக்குப் பிடித்த பார்ட்டி யாரும் கண்ணில் சிக்கவில்லை, சிக்கினால் காதலிக்கலாம் என்று உதடுசுளித்து சிரித்தார் ரீமா.

சர்தாம்மா!

Read more about: rumours about reema sen
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil