தாராளம் தப்பில்லை: ரீமா சென் அத்திப் பூ மாதிரி அவ்வப்போது வந்து செல்வபவர் ரீமா சென். மின்னலே வந்தபோது அடடா, கலக்கப் போகுதுய்யா இந்தப்பொண்ணு என ஏகப்பட்ட பேர் பாராட்டித் தள்ளினர். ஆனால் தடாலடியாக கிளாமர் ஹோதாவில் குதித்தார் ரீமா சென். அதற்குப் பிறகு அவரைத் தேடி வந்தது எல்லாம் கிளாமர் கலக்கல்கள்தான். அவரும் டிராக் மாறி, கவர்ச்சி களியாட்டத்தில்குதித்தார். மே மாசம் தொன்னுத்தெட்டில் மேஜர் ஆனேனே என்று ஜேஜே படத்தில் அவர் போட்ட பாட்டு சூப்பர் ஹிட். அதைத்தொடர்ந்து அர்ஜூனுடன் ஏய் கையை வச்சிக்கிட்டு சும்மா இருடா என்று செல்லமாக அதட்டியபோது, இளசுகளின் இதயம்கனகனவென்று பற்றி எரிந்தது. திடீரென செல்லமே படத்தில் அட்டகாசமான கேரக்டரில் அவர் நடித்தபோது ரீமாவின் மீதான ரசிகர்கள் பார்வையில் மாற்றம்தெரிந்தது. ஆனாலும் ரீமா தொடர்ந்து கிளாமரிலேயே உழன்று வந்தார். உரிச்ச கோழி போலவே வந்து போக ஆரம்பித்தார்.இப்படியாக போய்க் கொண்டிருந்த ரீமாவுக்கு திடீரென வாய்ப்புகள் மங்கிப் போயின. தெலுங்குப் பக்கம் போய்ப் பார்த்தார்.ஆனால் அங்கே த்ரிஷா அலை பலமாக வீசியதால் தூக்கி வீசப்பட்டு பெங்களூருக்குப் போனார்.முகம், பேர் தெரியாத ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு ஆடி முடித்துவிட்டு மும்பைக்கே திரும்பிப் போனார்.போனவரை தனது வல்லவன் படத்திற்காக கூட்டிவந்துள்ளார் சிம்பு. இதில் 3 நாயகிகளில் ஒருவராக, வில்லத்தனம் செய்யும்அதிரடி நாயகியாக கலக்கி வருகிறார் ரீமா சென். மூன்று ஹீரோயின்களில் ஒருவராக இறங்கி வந்துவிட்டீர்களே என்று ரீமாவிடம் கேட்டால், மூணு என்ன முன்னூறு ஹீரோயின்நடித்தாலும் அதில் நான் நடிக்க ரெடி. நாம நம்ம வேலையை கரெக்டா செய்தா போதும். நம்ம ரோல் பவர்ஃபுல்லா இருந்தால்போதும்.கிளாமர் ரோல்களிலேயே நடிக்கிறீர்களே என்று என்னிடம் சிலர் கேட்பார்கள். அதுதான் எனக்கு வசதியாக உள்ளது,பொருத்தமாகவும் உள்ளது. நான் சேலை கட்டி சமையல் கட்டில் நின்று நடித்தால் எப்படி இருக்கும்?தாராளம் காட்டி நடிப்பதில் தப்பே கிடையாது. யாருக்கு எது பொருத்தமாக இருக்குமோ அப்படித்தான் நடிக்க முடியும்.ரண்பட்டால் மார்க்கெட் போய் விடும். வல்லவன் படத்தில் அட்டகாசமான கேரக்டர் இதில். கிடைத்ததை அடையாமல் விட மாட்டேன் என்ற திமிர்வாதம், பிடிவாதம்பிடித்த பெண்ணாக நடிக்கிறேன். ஒரு சூப்பர் பாட்டும் கிடைத்தது, ஆடிக் கலக்கிட்டேன்.அடுத்து ராம்கோபால் வர்மா படத்தில் நடிக்கிறேன். விதவிதமான கேரக்டர்களில் நடிக்க எனக்கு ஆசை. சைக்கோ பெண்ணாகநடிக்க வேண்டும், அடங்காப்பிடாரியாக நடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசை உண்டு என்று குண்டைப் போட்டுவிட்டுப்போனார்.இன்னொரு விஷயம், திருமணம் செய்து கொண்டால் நல்ல வாட்ட, சாட்டமான ஆளாகப் பார்த்துத் தான் கல்யாணம் செய்வாராம்ரீமா. ஏழை, பணக்காரன் என்ற கவலையெல்லாம் இல்லையாம். இதை ரீமா சொன்னதாக கோலிவுட்டில் சில பேர் சொல்லித்திரிகிறார்கள்.

By Staff

அத்திப் பூ மாதிரி அவ்வப்போது வந்து செல்வபவர் ரீமா சென். மின்னலே வந்தபோது அடடா, கலக்கப் போகுதுய்யா இந்தப்பொண்ணு என ஏகப்பட்ட பேர் பாராட்டித் தள்ளினர். ஆனால் தடாலடியாக கிளாமர் ஹோதாவில் குதித்தார் ரீமா சென்.

அதற்குப் பிறகு அவரைத் தேடி வந்தது எல்லாம் கிளாமர் கலக்கல்கள்தான். அவரும் டிராக் மாறி, கவர்ச்சி களியாட்டத்தில்குதித்தார். மே மாசம் தொன்னுத்தெட்டில் மேஜர் ஆனேனே என்று ஜேஜே படத்தில் அவர் போட்ட பாட்டு சூப்பர் ஹிட். அதைத்தொடர்ந்து அர்ஜூனுடன் ஏய் கையை வச்சிக்கிட்டு சும்மா இருடா என்று செல்லமாக அதட்டியபோது, இளசுகளின் இதயம்கனகனவென்று பற்றி எரிந்தது.


திடீரென செல்லமே படத்தில் அட்டகாசமான கேரக்டரில் அவர் நடித்தபோது ரீமாவின் மீதான ரசிகர்கள் பார்வையில் மாற்றம்தெரிந்தது. ஆனாலும் ரீமா தொடர்ந்து கிளாமரிலேயே உழன்று வந்தார். உரிச்ச கோழி போலவே வந்து போக ஆரம்பித்தார்.

இப்படியாக போய்க் கொண்டிருந்த ரீமாவுக்கு திடீரென வாய்ப்புகள் மங்கிப் போயின. தெலுங்குப் பக்கம் போய்ப் பார்த்தார்.ஆனால் அங்கே த்ரிஷா அலை பலமாக வீசியதால் தூக்கி வீசப்பட்டு பெங்களூருக்குப் போனார்.

முகம், பேர் தெரியாத ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு ஆடி முடித்துவிட்டு மும்பைக்கே திரும்பிப் போனார்.

போனவரை தனது வல்லவன் படத்திற்காக கூட்டிவந்துள்ளார் சிம்பு. இதில் 3 நாயகிகளில் ஒருவராக, வில்லத்தனம் செய்யும்அதிரடி நாயகியாக கலக்கி வருகிறார் ரீமா சென்.


மூன்று ஹீரோயின்களில் ஒருவராக இறங்கி வந்துவிட்டீர்களே என்று ரீமாவிடம் கேட்டால், மூணு என்ன முன்னூறு ஹீரோயின்நடித்தாலும் அதில் நான் நடிக்க ரெடி. நாம நம்ம வேலையை கரெக்டா செய்தா போதும். நம்ம ரோல் பவர்ஃபுல்லா இருந்தால்போதும்.

கிளாமர் ரோல்களிலேயே நடிக்கிறீர்களே என்று என்னிடம் சிலர் கேட்பார்கள். அதுதான் எனக்கு வசதியாக உள்ளது,பொருத்தமாகவும் உள்ளது. நான் சேலை கட்டி சமையல் கட்டில் நின்று நடித்தால் எப்படி இருக்கும்?

தாராளம் காட்டி நடிப்பதில் தப்பே கிடையாது. யாருக்கு எது பொருத்தமாக இருக்குமோ அப்படித்தான் நடிக்க முடியும்.ரண்பட்டால் மார்க்கெட் போய் விடும்.


வல்லவன் படத்தில் அட்டகாசமான கேரக்டர் இதில். கிடைத்ததை அடையாமல் விட மாட்டேன் என்ற திமிர்வாதம், பிடிவாதம்பிடித்த பெண்ணாக நடிக்கிறேன். ஒரு சூப்பர் பாட்டும் கிடைத்தது, ஆடிக் கலக்கிட்டேன்.

அடுத்து ராம்கோபால் வர்மா படத்தில் நடிக்கிறேன். விதவிதமான கேரக்டர்களில் நடிக்க எனக்கு ஆசை. சைக்கோ பெண்ணாகநடிக்க வேண்டும், அடங்காப்பிடாரியாக நடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசை உண்டு என்று குண்டைப் போட்டுவிட்டுப்போனார்.

இன்னொரு விஷயம், திருமணம் செய்து கொண்டால் நல்ல வாட்ட, சாட்டமான ஆளாகப் பார்த்துத் தான் கல்யாணம் செய்வாராம்ரீமா. ஏழை, பணக்காரன் என்ற கவலையெல்லாம் இல்லையாம். இதை ரீமா சொன்னதாக கோலிவுட்டில் சில பேர் சொல்லித்திரிகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X