நடிகை ரம்யா நம்பீசன் சத்தம் போடாமல் இயக்கிய படம்... காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆகிறது

By

சென்னை: சத்தம் போடாமல் படம் ஒன்றை இயக்கி இருக்கிறார் நடிகை ரம்யா நம்பீசன். விசாரித்தால் கொஞ்சம் ஆச்சரியம் தருகிறார்.

பாசில் இயக்கிய, ஒரு நாள் ஒரு கனவு படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், இவர். தொடர்ந்து சேரன் நடித்த ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், இளைஞன், குள்ளநரிக்கூட்டம், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், சேதுபதி உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்துவருகிறார். அந்த நடிப்பு அனுபவத்தில் படம் இயக்கி இருக்கிறாரா?

 ரொம்ப ரொம்ப சின்னப் படம்

ரொம்ப ரொம்ப சின்னப் படம்

''ஐயையோ அது படம்லாம் இல்லைங்க. ரொம்ப ரொம்ப சின்னப் படம். அதை குறும்படம்னு கூட சொல்ல முடியாது. வெறும் 3 நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய படம். அதுக்கு 'அன்ஹைட்'னு டைட்டில் வச்சிருக்கேன். வரும் 14 ஆம் தேதி காதலர் தினத்தன்னைக்கு ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கேன். என் மனசுல இருந்த சின்ன கருவை, காட்சிப்படுத்த முயற்சி பண்ணியிருக்கேன்' என்கிறார் ரம்யா நம்பீசன்.

 விஜய் ஆண்டனி ஜோடி

விஜய் ஆண்டனி ஜோடி

'தமிழரசன்'ல என்ன கேரக்டர்?

அதுல விஜய் ஆண்டனி ஜோடியா வர்றேன். வித்தியாசமான திரைக்கதை. கண்டிப்பாக இந்தப் படம் பேசப்படும். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கு. அடுத்து சிபிராஜோட ரேஞ்சர்ல நடிக்கிறேன். பிறகு காமெடி படமான, பிளான் பண்ணி பண்ணணும். பிரபுதேவாவோட ஒரு படம். மலையாளத்துல ஒரு படம் கமிட் ஆகி இருக்கேன்.

 மொழி பிரச்னை இல்லை

மொழி பிரச்னை இல்லை

மலையாளத்தை விட தமிழ்ல அதிகமா நடிக்கிறீங்க போல..?

உண்மைதான். சேதுபதி படத்துக்குப் பிறகு தமிழ்ல நல்ல வாய்ப்புகள் வருது. நடிக்கிறேன். நடிகையா மொழி எனக்குப் பிரச்னை இல்லை. கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக்கணும். அதனால நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். மலையாளத்துலயும் சில படங்கள் வந்துட்டுதான் இருக்கு. மலையாளம் தாய்மொழிங்கறதால, அதுல நடிக்கும்போது கிடைக்கிற உணர்வு வேற. அங்கயும் நடிச்சுட்டுதான் இருக்கேன்.

 தபாங் 3

தபாங் 3

உங்க இசை மற்றும் நடனம்..?

என் வாழ்க்கையில் இந்த ரெண்டுக்கும் எப்பவும் முக்கியத்துவம் உண்டு. சல்மான் கானின் தபாங் 3 தமிழ்ப் பதிப்பில் ஒரு பாடலை பாடியிருந்தேன். அடுத்து யுவன் சங்கர்ராஜா இசையில ஒரு பாடலை பாடியிருக்கேன். டிவியில நடக்கிற இசை நிகழ்ச்சிகள்ல பங்கேற்கிறேன். மேடை நிகழ்ச்சிகள்லயும் பங்கேற்கிறேன். இப்படியே தொடருது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X