2வது திருமணம் செய்வதில் என் மகனுக்கு கோபம் தான், எதற்கு என்றால்..: நடிகை விளக்கம்
Recommended Video

ஹைதராபாத்: தான் 2வது திருமணம் செய்வதில் மகனுக்கு கோபம் என்று எழுந்த பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகை ரேணு தேசாய்.
தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய்க்கும், புனேவை சேர்ந்த தொழில் அதிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
ரேணு தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

கோபம்
ரேணு தேசாய் இரண்டாவது திருமணம் செய்வது அவரின் மகன் அகிராவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து ரேணு விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு முறையே
இந்த திருமணம் பெரியவர்கள் பார்த்து நடத்துவது. காதல் ஒரு முறை தான் வரும். மீண்டும் மீண்டும் வராது. நான் கடந்த 7 ஆண்டுகளாக சிங்கிளாக இருந்தேன். தற்போது மகிழ்ச்சியாக உள்ளது. என் வருங்கால கணவர் மிகவும் நல்லவர் என்கிறார் ரேணு.

மகிழ்ச்சி
நான் மீண்டும் திருமணம் செய்து கொள்வதில் என் மகனுக்கு மகிழ்ச்சியே தவிர கோபம் கிடையாது. அவனுக்கு கோபம் தான் மெனுவில் பன்னீர் பட்டர் மசாாலா இல்லை என்ற கோபம் என்று ரேணு தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை
விவாகரத்து ஆன பிறகும் எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை உள்ளது. இந்திய முறைப்படி திருமணம் செய்து வாழவே விரும்புகிறேன். லிவ் இன் முறைப்படி வாழ்வதில் விருப்பம் இல்லை என்று ரேணு கூறியுள்ளார்.

முடியாது
முன்பு ஒரு முறை வேறு வழி இல்லாமல் லிவ் இன் முறைப்படி வாழ வேண்டியதாகிவிட்டது. ஆனால் அதை மீண்டும் செய்ய மாட்டேன். எனக்கு 37 வயதாகிறது. நான் பாரம்பரிய முறைப்படி வாழ விரும்புகிறேன் என்கிறார் ரேணு.


Click it and Unblock the Notifications











