»   »  யுஎஸ்-செட்டிலாகும் ரேணுகா மேனன்

யுஎஸ்-செட்டிலாகும் ரேணுகா மேனன்

Subscribe to Oneindia Tamil

நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டு புதுசா கல்யாணம் கட்டிக்கிட்ட ரேணுகா மேனன், இன்னும் 2 ஆண்டுகள்கழித்துத்தான் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறாராம்.

மலையாளத்திலிருந்து வந்த வரவுகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் ரேணுகா மேனன். கிளாமராக நடித்துப்பார்த்தும் கூட வாய்ப்புகள் குதிராததால், அட போங்கப்பா என்று அலுத்துக் கொண்டு தாயகம் திரும்பியரேணுகா, சூரஜ் என்ற அமெரிக்க பொறியாளரைக் கட்டிக் கொண்டு செட்டிலாகி விட்டார்.

கல்யாணத்திற்குப் பின் கேரளாவில் கொஞ்ச நாள் இருந்த ரேணுகா 18ம் தேதி இந்தியாவுக்கு தற்காலிகமாககுட்பை சொல்லி விட்டு கணவருடன் அமெரிக்காவுக்குப் பறக்கிறார்.

அங்கு 3 வருடங்கள் தங்குவதற்கு விசா வாங்கி விட்டாராம். கலிபோர்னியாவில் ஃபேஷன் டிசைனிங் படிக்கப்போகிறாராம். 3 வருடமும் படு ஜாலியாக கணவருடன் அமெரிக்க வாழ்க்கையை என்ஜாய் பண்ணப் போகும்ரேணுகா அதுவரை குழந்தை கிழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லையாம்.

கொஞ்ச காலம் கணவரோடு ஜாலியாக லைஃபை அனுபவிக்கப் போகிறேன். அப்படியே படிப்பையும் முடிக்கப்போகிறேன். அதன் பிறகுதான் பேபி என்கிறார் வெட்கச் சி>ப்புடன்.

18ம் தேதி சிங்கப்பூருக்கு கணவருடன் பறக்கும் ரேணுகா அங்குதான் ஹனிமூனையும் கொண்டாடப்போகிறாராம். அப்படியே மலேசியாவுக்கும் போகிறாராம்.

தேனிலவை திருப்தியாக முடித்து விட்டு கலிபோர்னியாவுக்குக் கிளம்புகிறார். அங்கு 3 வருடங்கள் ஃபேஷன்டிசைனிங் படிக்கிறார்.

சினிமாவை விட்டு விட்டது ஏமாற்றமாக இல்லையா என்று ரேணுகாவிடம் கேட்டால், வருத்தமாகத்தான்இருக்கிறது. ஆனால் திருப்திகரமான வாய்ப்பு வரவில்லையே? அப்படி இருக்கும்போது ரொம்பப் பெரியவருத்தமாக இல்லை என்கிறார்.

Read more about: renuga menon moves to us

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil