விலங்கு வெப்சீரிஸில் அப்படியொரு ரோலில் நடிக்க எப்படி ஓகே சொன்னீங்க.. ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!

சென்னை: நடிகர் விமல் நடிப்பில் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியான விலங்கு வெப்சீரிஸ் மிகபெரிய வெற்றியை பெற்றுள்ளது.

கிச்சான்னாலே இளிச்சவாயன் தானே என வசனம் பேசி அப்பாவியாக இருந்து வில்லனாக பல கொலைகளை செய்யும் கிச்சாவின் மனைவியாக இந்த படத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்துள்ளார்.

கணவர் பால் வாங்க கடைக்கு போகும் நேரத்தில் எல்லாம் மற்ற ஆண்களுடன் உல்லாசமாக இருப்பது போல நடித்து ஏமாற்றும் போல்டான கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து அசத்தி இருந்தார்.

விலங்கு வெப்சீரிஸ்

விலங்கு வெப்சீரிஸ்

நடிகர் விமலுக்கு ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல கம்பேக்காக நடிப்புக்கு தீனிப் போடும் அளவுக்கு கதையம்சம் கொண்ட படைப்பாக இந்த விலங்கு வெப்சீரிஸ் வெளியானது. ஜி5 ஓடிடி தளத்தில் வெளியான விலங்கு வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. யாருமே எதிர்பார்க்காத ஒரு அப்பாவி எப்படி வில்லன் ஆகிறான் அவனை அப்படி ஆக்குவது யார் அதை ஹீரோ கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் விலங்கு வெப்சீரிஸின் கதை.

டிரெண்டான கிச்சா

டிரெண்டான கிச்சா

கிச்சானாலே இளிச்சவாயன் தான் என ஊர் முழுக்க எந்தவொரு பிரச்சனை வந்தாலும், பெட்ரோல் விலை ஏறினாலும் மீம்ஸ் பறக்க காரணமாக அமைந்தது இந்த வெப்சீரிஸின் மிகப்பெரிய வெற்றிக்கு வித்திட்டது. விமல் நடிப்பை மிஞ்சும் அளவுக்கு கிச்சாவாக நடித்த நடிகர் ரவி அந்த கதாபாத்திரத்தில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

கிச்சா மனைவி பேட்டி

கிச்சா மனைவி பேட்டி

விலங்கு வெப்சீரிஸில் கிச்சாவின் மனைவி கதாபாத்திரத்தில் கவர்ச்சி நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி செம போல்டான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டி வைரலாகி வருகிறது.

சீரியலில் செம பிஸி

சீரியலில் செம பிஸி

சினிமாவில் எப்போதாவது தலை காட்டும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சீரியலில் செம பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். பாக்கியலட்சுமி, அபி டெய்லர் என முக்கிய கதாபாத்திரங்களில் தனது வெரைட்டியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார். இந்நிலையில், அவரிடம் கேட்கப்பட்ட ஏகப்பட்ட கேள்விகளுக்கு செம ஓப்பனாக அவர் அளித்த பதில்கள் பேட்டியில் இடம்பெற்றுள்ளன.

காமெடி பீஸ்

சீரியலில் டெரர் வில்லியா நடிக்கிறீங்களே, நிஜ வாழ்க்கையில் எப்படி என கேட்கப்பட்ட கேள்விக்கு, பேசிக்காவே நான் ஒரு காமெடி பீஸ். நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கத் தான் ஆர்வம். ஆனால், என்னை பார்க்கும் இயக்குநர்கள் என்னை டெரர் ஆக காட்டுகின்றனர். நடிகைன்னா எப்படி வேண்டுமானாலும் நடித்துத் தானே ஆக வேண்டும் என புன்னகையுடன் பதிலளித்தார்.

அந்த ரோலுக்கு எப்படி

அந்த ரோலுக்கு எப்படி

விலங்கு வெப் தொடரில் கிச்சாவின் மனைவியாக நடித்திருப்பார் ரேஷ்மா பசுபுலேட்டி. வீட்டிற்கு ஊரில் உள்ள ஆண்களை வலுக்கட்டாயமாக டீ குடிக்க அழைத்து வந்து பால் வாங்க கிளம்புவதாக கிச்சா சொல்லி விட்டு வெளியே போகும் நேரத்தில், வந்தவர்களை தனது கவர்ச்சியால் கிறங்கடித்து கசமுசா செய்யும் கதாபாத்திரத்தில் செம போல்டாக நடித்திருப்பார் ரேஷ்மா பசுபுலேட்டி. இருவரும் இணைந்து ஏமாற்றி பணம் பறிக்கும் காட்சிகள் பதற வைத்திருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X