10 ஆயிரம் முறை விவாகரத்து.. பாபி சிம்ஹாவுடனான வாழ்க்கை.. கம்பேக் குயின் ரேஷ்மி மேனன் ஓபன் டாக்!

சென்னை: நடிகை ரேஷ்மி மேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில், "கல்யாணம் பண்ணி வெச்ச கடவுளுக்கு பிரிக்கவும் தெரியும்" என்று பாபி சிம்ஹாவுடனான திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாகப் பேசியது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது.

2002ம் ஆண்டு வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான ஆல்பம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் ரேஷ்மி மேனன். ஜெயம், செல்லமே உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்த அவர், இனிது இனிது படத்தின் மூலம் ஹீரோயினாக மாறினார். பர்மா, மாயா, கிருமி, பயமா இருக்கு உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், 2016ம் ஆண்டு பாபி சிம்ஹாவை திருமணம் செய்துக் கொண்டு சினிமாவில் இருந்து பெரிய பிரேக் எடுத்தார்.

Photo Credit:

ரேஷ்மி மேனனுக்கும், நடிகர் பாபி சிம்ஹாவுக்கும் விவாகரத்து நடக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, "நாங்கள் சண்டை போட்டாலும், ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்க மாட்டோம்" என்று ஜாலியாக கூறினார். குறைந்த பட்சம் 10 ஆயிரம் தடவை எங்களுக்கு டைவர்ஸ் பண்ணி வச்சிட்டாங்க என்றார்.

சினிமாவில் சைல்ட் ஆர்டிஸ்டாக அறிமுகமானது எப்படி என்று கேட்டதற்கு, "காலேஜ் போகும் போது ஒரு புரொடக்ஷன் கம்பெனியில் இன்டெர்ன்ஷிப் பண்ணினேன். அது நல்ல அனுபவமாக இருந்தது. அறுபது வயதில் திரும்பிப் பார்க்கும்போது, என் அம்மா அப்பா எனக்காக நிறைய பண்ணியிருக்காங்க என்று பெருமைப்படுவேன்" என்றார்.

பாபி சிம்ஹா கம்பேக் கொடுக்கும்போது என்ன சொன்னார் என்ற கேள்விக்கு, "ஒரு ரோல் நல்லா இருந்தா பண்ணு. கேரக்டர் பேசப்படணும்" என்று பாபி சொன்னதாக தெரிவித்தார். மேலும், "சினிமாவுல நடிக்க கூடாதுன்னு அவர் சொன்னதா நிறைய பேர் சொன்னாங்க. ஆனா அது உண்மை இல்ல" என்றும் கூறினார்.

பாபி சிம்ஹாவிற்கு எந்த அளவுக்கு சப்போர்ட் பண்றீங்க என்ற கேள்விக்கு, "அவர் வெளியில எவ்வளவு ஸ்ட்ராங்கா இருந்தாலும், வீட்டுல ரொம்ப சாஃப்டான ஆள்தான்" என்று தன்னுடைய கணவர் பற்றி பெருமையாக கூறினார் ரேஷ்மி.

சமூக வலைத்தளங்களில் வரும் விமர்சனங்கள் பற்றி கேட்டபோது, "நம்மள பத்தி நம்ம ஃப்ரெண்ட்ஸ் பேசலாம், சொந்தக்காரங்க பேசலாம். ஆனா அத பெருசா எடுத்துக்க கூடாது. சோசியல் மீடியாவுல இப்ப எல்லாரும் நிறைய பேசுறாங்க" என்று கவலை தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு சோசியல் மீடியா பயன்படுத்துவது குறித்து, "என்னோட குழந்தைகளுக்கு இப்போதைக்கு போன் கொடுக்க மாட்டேன். கொஞ்சம் வளர்ந்த பிறகு யோசிக்கலாம்" என்று தன்னுடைய கருத்தை திட்டவட்டமாக தெரிவித்தார் ரேஷ்மி மேனன்.

விஜய் சேதுபதிபதியுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, "கண்டிப்பாக நடிப்பேன். ஒரு Great Actor-ஓட சேர்ந்து நடிக்க யார் தான் வேண்டாம்னு சொல்லுவாங்க?" என்று உற்சாகமாக பதிலளித்தார் ரேஷ்மி. பாபி சிம்ஹாவுடன் மீண்டும் நடிப்பீங்களா என்கிற கேள்விக்கு, மீண்டும் நடிக்க வந்திருக்கேன், மற்ற ஹீரோக்களுடன் நடிக்க விடுங்களேன்ப்பா என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

கடைசியாக, பாபி சிம்ஹா படங்களில் எந்த படம் பிடிக்கும் என்ற கேள்விக்கு, "மகான் படத்தில் நான் நிறைய நேரம் ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்தேன். அந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்று கூறினார். மேலும், "அவர் வெளியில புலியா இருந்தாலும் வீட்டுல எலி மாதிரி தான்" என்று ஜாலியாக முடித்தார் ரேஷ்மி மேனன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X