சிவாஜி சார் காலடி மண்ணை எடுத்து பூசிக்கிட்டேன்.. வாழும் சிவாஜி அந்தோனியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

சென்னை: ரீவைண்ட் ராஜா எபிசோட் 2ல் வாழும் சிவாஜி என போற்றப்படும் சிவாஜி அந்தோனியின் பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

வாழும் சிவாஜி | Sivaji Anthony | Rewind Raja EP-02 | FILMIBEAT TAMIL

எம்.ஜி.ஆர் போலவும், சிவாஜி போலவும், ரஜினி, கமல் போலவும் ஏகப்பட்ட நாடக நடிகர்கள் வேடமிட்டு, தங்கள் வாழ்க்கையை அவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

கோயில் திருவிழாக்களில், திருமண நிகழ்ச்சிகள் என இவர்களது ஷோக்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும்.

Rewind Raja: Sivaji Anthony exclusive interview!

மறைந்த நடிகர்களை இன்னமும் நம் கண் முன் கொண்டு வருவதில் இதுபோன்ற கலைஞர்கள் ரொம்பவே கில்லாடிகள்.

சிவாஜியாகவே வாழ்ந்து வரும் நடிகர் அந்தோனியின் சிறப்பு பேட்டி நமது தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி உள்ளது.

சிவாஜியாக என்ட்ரி கொடுத்ததில் இருந்து எண்ட் கார்டு போடும் வரையில் சிவாஜியாக அத்தனை பாவங்களிலும் நடித்து காட்டி பேட்டியையே ஒரு குட்டி டிராமா நிகழ்ச்சியாக மாற்றி விட்டார்.

இயக்குநர் பாலாவின் நான் கடவுள் படத்தில் இதுபோன்ற லுக் அ லைக் கலைஞர்கள் பலர் நடித்திருப்பார்கள். அதில், சிவாஜியாக நடிக்க பல பேர் வந்த நிலையில், பாலாவையே ஈர்த்து தேர்வானவர் இவர் தான்.

மேலும், அந்த படத்தின் ஷூட்டிங்கில் இயக்குநர் பாலாவிடம் திட்டு வாங்காத ஒரே நபரும் தான் தான் என்ற சுவாரஸ்ய தகவலையும் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஒரு சமயம் சிவாஜி சாரை பார்க்க காத்திருந்தபோது, நிகழ்ச்சி முடித்து சிங்க நடை போட்டு அவர் இறங்கி வந்தார். அப்போது அவருக்கு வணக்கம் வைத்தேன். அவரும் பதிலுக்கு வணக்கம் வைத்து விட்டு காரில் ஏறி சென்றார். அவர் நடந்து வந்த இடத்தில் இருந்த காலடி மண்ணை எடுத்து திருநீராய் பூசிக் கொண்டேன். அவர் மீது அந்தளவுக்கு தனக்கு பக்தி என்று கூறினார்.

மேலும், நிகழ்ச்சி ஒன்றில் தெய்வமகன் சிவாஜியாக நடித்து விட்டு கீழே இறங்கினேன். அங்கே நிகழ்ச்சியை பார்த்து ரசித்த சிவாஜி கணேசனின் மகன்களான ராம் குமார் மற்றும் பிரபுவுடன் இணைந்து ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டபோது, அவர்கள் உடனே எழுந்து நின்றதாகவும், உட்கார்ந்தே இருங்கள் நான் எடுத்துக்கிறேன் என இவர் கூற, அப்பாவே நிற்கும் போது, நாங்க எப்படி உட்காருவது என ராம் குமார் கூறிய கூஸ் பம்ப்ஸ் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.

லாக்டவுனில் தன்னை போன்ற பல நாடக கலைஞர்களும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அரசு உரிய உதவிகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.

இவரை போன்ற பல லுக் அ லைக் கலைஞர்கள் இணைந்து நடிக்கும் டம்மி ராஜா படம் குறித்தும் இவர் கூறியுள்ள விஷயங்களை பேட்டியில் கண்டு மகிழுங்கள்.. ஏகப்பட்ட சிவாஜி டிக்டாக் வீடியோக்களும் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X