அந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்தும் ஸ்ரீகாந்தும் சந்திக்கவே இல்லை.. வைரலாகும் ரீவைண்ட் ராஜா வீடியோ
சென்னை: ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி உள்ள ரீவைண்ட் ராஜா லேட்டஸ்ட் வீடியோவில் சமீபத்தில் மறைந்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் குறித்த சிறப்பு பதிவு உள்ளது.
ஜெயலலிதாவின் முதல் ஹீரோ, ரஜினிகாந்தின் முதல் வில்லன், தங்கபதக்கம் படத்தில் சிவாஜியின் மகன் என ஏகப்பட்ட சிறப்பு அம்சங்களுக்கு சொந்தக்காரர் ஆன ஸ்ரீகாந்த் கடந்த மாதம் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.
ஹீரோவாகவும், வில்லனாகவும், குணசித்ர நடிகராகவும் தமிழ்த் திரையுலகில் ஏகப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர் ஸ்ரீகாந்த்.

சந்திக்கவே இல்லை
நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக அறிமுகமான பைரவி திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக அசத்தல் நடிப்பை வெளிப்படுத்திய ஸ்ரீகாந்த் அதன் பிறகு ஒருமுறை கூட நடிகர் ரஜினிகாந்தை சந்திக்கவே இல்லை என்கிற சுவாரஸ்ய தகவல் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

குறைந்தது வாய்ப்பு
காந்த் என்று பெயர் வைத்தாலே சினிமா உலகில் கொடி கட்டி பறக்கலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் கோடம்பாக்கத்தில் ரஜினிக்கு முன்பாகவே காந்த் எனும் பெயர் கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த் பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் வறுமையில் வாடியது தான் நிதர்சனமான உண்மை.

பிரபலங்களுக்கு உதவி
கே. பாலசந்தர், வாலி, நாகேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் வறுமையில் வாடிய போது அவர்களின் பசியை ஆற்றி பெரும் உதவியை செய்தவர் நடிகர் ஸ்ரீகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவருடைய திரை வாழ்க்கை ஆரம்ப காலகட்டத்தில் இருந்தது போல அதன் பின்னர் இல்லாதது தான் உண்மைகள் நிறைந்த சோகமான சினிமா கலைஞனின் கதையாக உள்ளதை இந்த ரீவைண்ட் ராஜா வீடியோவில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.
ஜெயலலிதா ஜோடி
1965ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெண்ணிற ஆடை படத்தில் ஹீரோவாக நடித்த ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்து இருந்தார். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், சிவகுமார், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் துணை கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து வைத்திருந்த ஸ்ரீகாந்த்தின் சொல்ல மறந்த கதை போன்ற ஏகப்பட்ட சுவாரஸ்யமான விஷயங்கள் எக்கச்சக்கமாக உள்ளன.


Click it and Unblock the Notifications











