»   »  "செட்டிலாகிறார்" அபிதா!

"செட்டிலாகிறார்" அபிதா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேது நாயகி அபிதா சிங்கப்பூர் சீமான் ஒருவரை செமத்தியாகப் பிடித்துக் கொண்டுவிட்டாரர்.

விரைவில் அவருக்கும், அபிக்கும் கெட்டி மேளம் கொட்டப் போகிறதாம்.

கேரளத்தைச் சேர்ந்த அபிதா, சேது மூலம் அறிமுகமானபோது தமிழ் சினிமாவுக்கு சூப்பர் நடிகை ஒருவர் கிடைத்து விட்டார் என்றநம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால், அவரது நேரமோ, தலையெழுத்தோ தெரியவில்லை, மலையாளத்தில் முன்பு அவர் நடித்த பச்சை பலான படமானதேவதாசி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. அதைச் செய்தது சேட்டன்கள் தான்.

சேது மூலம் அபிதாவுக்கு தமிழகத்தில் கிடைத்த கிரேஸை வைத்து காசு பார்க்கத் திட்டமிட்டு, அந்தப் படத்தை தமிழில்எடுத்துவிட்டனர். அது அவரது எதிர்காலத்தை பணால் பண்ணிவிட்டது.

அபிக்கு கிடைத்த குடும்பப் பாங்கான பொண்ணு என்ற இமேஜை தேவதாசி உடைத்தெறிந்ததோடு, அந்த மாதிரி நடிகை என்றபெயரை வாங்கித் தந்தது.

சேது மூலம் சீயான் விக்ரம் எங்கேயோ போய் விட, அபிதாவோ எங்குமே வாய்ப்பு கிடைக்காமல் முடங்கிப் போனார்.

இடையில் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார். டிவி சீரியலிலும் தலை காட்டினார். ஆனாலும் எடுபட முடியவில்லை.

கடும் பிரயச்சித்தம் செய்து சமீபத்தில் தான் காதலோடு கலந்துவிடு என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒரு வழியாக சான்ஸ்பிடித்தார் அபிதா. விமல் என்பவர் புதுமுகமாக நடிக்க இருக்கும் அந்தப் படத்தில் அபிநயஸ்ரீ, சுவாதிகா, மன்சூர் அலிகான்எல்லாம் நடித்து வருகின்றனர்.

படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வருவது ஏ.பி.ஷேகர் (எல்லாம் நியூமராலஜி உபயம்). இதில் தேவதாசிபடத்துக்கு கொஞ்சம் குறைவாக கிளாமர் காட்டி கலக்கிக் கொண்டிருக்கிறார் அபிதா.

இந் நிலையில்தான் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும், அபிதாவுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

கலை ஆர்வத்துடன் நடிகைகளைத் தேடி இங்கு வந்தவராம் அந்த சிங்கப்பூர் பணக்காரர். அவரை அபிதா கபால் எனவளைத்துவிட்டாராம்.

அது காதலாகி, கசிந்துருகி, இப்போது கல்யாணம் வரைக்கும் போய்விட்டதாம். இதுவரை ஆலப்பாக்கத்தில் ஜன சந்தடியில்இருந்த அபிதாவுக்கு, இந்த சிங்கப்பூர் மச்சான் ராமாவரம் பகுதியில் நல்ல வீட்டை பிடித்துத் தந்துள்ளார்.

இதனால் அந்தப் பகுதிக்கு ஜாகையை மாற்றி விட்டார் அபிதா.

விரைவில் அவருடன் தனக்கு கல்யாணம் நடக்கப் போவதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம் அபிதா.

கல்யாணத்திற்கு முன்பே, இருவரும் சேர்ந்து குடித்தனம் செய்வது எப்படி என்று இப்போது பயிற்சி எடுத்துக்கொண்டுள்ளார்களாம்.

அது முடிந்தவுடன் கல்யாணமாம்!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil