கருணாஸ் மகன் திமிரு பிடிச்சவன்.. சூர்யாவின் கருப்பு பட ப்ரோமோஷனில் RJ பாலாஜி சொன்ன அந்த விஷயம்

சென்னை: நடிகரும் இயக்குனருமான RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து உருவாகியுள்ள கருப்பு. சாய் அபயங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் மே மாதம் 14ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனை படத்தின் இயக்குனர் RJ பாலாஜி தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் குறித்து தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நான் சொர்க்கவாசல் படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது கருணாஸ் பார்க்க அவரது மகன் கென் கருணாஸ் வந்திருந்தான். என்னுடன் இரண்டு நாட்கள் தங்கி இருந்தாம். அப்போது பெரிய பெரிய இயக்குனர்களின் பெயர்களைச் சொல்லி, பெரிய பெரிய நடிகர்களின் பெயர்களைச் சொல்லி அவர்களுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்று எல்லாம் கூறிக் கொண்டிருந்தான். இரண்டு நாள் கழித்து புறப்படும் போது கென் கருணாஸ் இடம் நான் ஒரு கேள்வி கேட்டேன், நீ சொன்ன பெரிய பெரிய பிரபலங்கள் எல்லாம் உன்னுடன் படம் பண்ணுவதற்கு காலதாமதம் ஆகிவிட்டாலோம் அல்லது படம் பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டாலோ என்ன செய்வாய் என்று கேள்வி கேட்டேன். அதற்கு கென் கருணாஸ் இடம் பதில் இல்லை.

உடனே என்ன செய்வது என்று என்னை திருப்பி கேட்டான். அதற்கு நான் கென் கருணாஸ்க்கு சொன்ன பதில், 'உனக்கு நீயே படம் செய்துகொள்' என்று கூறினேன். அதன் பின்னர் நான் அவனைப் பார்க்கவில்லை. சுமார் 6 முதல் 8 மாதங்களுக்குப் பிறகு கென் கருணாஸ் எனக்கு போன் செய்து என்னை சந்திக்க வேண்டும் என்று கூறினான். நானும் உடனே அலுவலகத்திற்கு வா என்று கூறிவிட்டேன்.

RJ Balaji Calls Ken Karunas Arrogant Viral Story from Karuppu Promotions Explained
Photo Credit:

கென் கருணாஸ்: அலுவலகத்திற்கு வந்தவன், யூத் படத்தின் கதையை கூறினான். அந்தப் படத்தின் கதையை கேட்கும் போதே எனக்கு படம் ஹிட்டு என்று நான் நம்பி விட்டேன், ஆனால் நான் இதுவரை படம் பார்க்கவில்லை. கதையைக் கேட்டதும் அப்படியான நம்பிக்கை ஏற்பட காரணம், அந்த கதையை சொல்லும்போது, பத்து கதாபாத்திரங்களையும் அவன் நடித்துக் காட்டினான். மேலும் அந்த கதையை அவன் அவனுக்காக சிறப்பாக செய்து கொண்டான் என்பதுதான். கதை ரொம்பவும் நன்றாக இருக்கிறது, என்று கூறிவிட்டு சில தயாரிப்பாளர்களிடம் கதையைச் சொல்ல சொன்னேன்.

திமிரு பிடிச்சவன் போல: அந்த தயாரிப்பாளர்களும் படம் செய்ய முன் வந்தார்கள். கதை நன்றாக இருக்கிறது, படம் ஹிட் ஆகும் படத்தை நானே தயாரிக்கிறேன் என்று கூறினார்கள் ஆனால் கென் கருணாஸ் அந்த தயாரிப்பாளர்களை நிராகரித்து விட்டான். முதல் படத்திற்கு தயாரிப்பாளர்கள் அவர்களாகவே தேடி வந்து சரி சரி என்று கூறுகிறார்கள், ஆனால் இவன் வேண்டாம் என்கிறானே, கொஞ்சம் திமிர் பிடித்தவன் தான் போல, என்று நினைத்துக் கொண்டேன்.

சரியான முடிவு: அதன் பின்னர் சரியான தயாரிப்பாளரிடம் சென்று, மிகவும் அழகாக அந்த படத்தை எடுத்து முடித்து விட்டான். கென் கருணாஸ் எடுத்த முடிவு தான் சரி, இதற்கு காரணம் அவரவர்கள் அவரவர்களுக்கு செய்து கொள்ளுகிற கதை மிகவும் நன்றாக இருக்கும். அப்படித்தான் நானும், எனக்கு நான் செய்து கொள்கிற கதை, நன்றாக வருகிறது என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X