என்னை நல்லா காட்டுவதற்கு விக்னேஷ் சிவன் படம் பண்ணவில்லை.. நேரடியாக போட்டு உடைத்த RJ பாலாஜி
சென்னை: நடிகரும் இயக்குனருமான RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள கருப்பு. சாய் அபயங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் மே மாதம் 14ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனை படத்தின் இயக்குனர் RJ பாலாஜி தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் குறித்து தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி இரண்டு படங்களில் நடித்துள்ளார். நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதியின் நண்பனாக படம் முழுக்க நல்ல காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் ஏற்கனவே விக்னேஷ் சிவன், RJ பாலாஜியின் நண்பர்கள் என்பதால் அவர்களின் நட்பு இந்த படத்தில் மேலும் அதிகரித்தது. அதன் பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படத்தில் RJ பாலாஜியை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்று விக்னேஷ் சிவன் எடுத்த முயற்சியால் படத்தில், ஒரு சில காட்சிகள் மட்டும் வந்து செல்வார் RJ பாலாஜி. தானா சேர்ந்த கூட்டம் படத்தின் கதாநாயகன் சூர்யா. தற்போது சூர்யாவை வைத்து படம் இயக்கும் அளவிற்கு தனது திறமையில் தகுதியை வளர்த்துக் கொண்டுள்ளார் RJ பாலாஜி.

விக்னேஷ் சிவன்: அந்த பேட்டியில் விக்னேஷ் சிவன் குறித்து," நான் விக்னேஷ் சிவனின் நானும் ரவுடி தான் படத்தில் முழுவதும் நடித்திருந்தேன். அதன் பின்னர் என்னை எப்படியாவது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று விக்னேஷ் சிவன் முயற்சித்துக் கொண்டே இருந்தார் அதனால் தான் அந்த படத்தில் சில காட்சியில் ஆன் த ஸ்பாட்டில் நடித்திருப்பேன்.
என்னை நன்றாக காட்ட: அந்தப் படத்தில் நடிக்கும் போது கூட எனக்கு இயக்குனராக வேண்டும் என்ற எண்ணம் இல்லை. நான் இயக்குனர் ஆனதற்கு மிக முக்கியமான காரணம், எனக்கு வந்த கதாபாத்திரங்கள் சரியில்லை, மேலும் நானும் சரியாக அப்போது நடிக்கவில்லை, இப்போது எனது நடிப்பில் கொஞ்சம் முன்னேற்றம் இருப்பதாக கருதுகிறேன். அதனால் தான் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் வர வேண்டும் என எனக்கு நானே செய்து கொண்டது தான், இந்த இயக்குனர் அவதாரம்.
இயக்குநர் அவதாரம்: தானா சேர்ந்த கூட்டம் படத்தில் விக்னேஷ் சிவன் என்னை நன்றாக காட்ட வேண்டும் என்று நினைக்கவே மாட்டார், காரணம் அது சூர்யா சாரின் படம். அதில் அவரைத்தான் நன்றாக காட்ட வேண்டும் என்ற எண்ணம் விக்னேஷ் சிவனுக்கு இருக்கும். அதனால் தான் நான் என்ன நன்றாக காட்டிக் கொள்ள இயக்குனர் அவதாரம் எடுத்தேன் என்று அந்த பேட்டியில் RJ பாலாஜி தெரிவித்துள்ளார். இவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications