RJ Balaji: கருப்பு படத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய அஜித் படம்.. அப்படி என்ன ஆச்சுன்னு தெரியுமா?

சென்னை: சூர்யா நடித்து வெளியாகி வசூல் வேட்டை நடத்திக் கொண்டு இருக்கும் படம் கருப்பு. இந்த படத்தை RJ பாலாஜி மற்றும் அவரது குழுவினர் எழுதி இயக்கி உள்ளனர். படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. சாய் அபயங்கர் படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் கோடிகளில் லாபங்களை குவித்து வரும் நிலையில், படத்தில் இருந்த சில காட்சிகளை நீக்க அஜித்தின் குட் பேட் அக்லி படம் மிக முக்கியமான காரணம் என்று அண்மையில் அளித்த பேட்டியில் RJ பாலாஜி தெரிவித்துள்ளார்.

கருப்பு படத்தை பொறுத்தவரையில் கடந்த 15ஆம் தேதி வெளியாகி மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக தியேட்டரில் ஓடிக் கொண்டு உள்ளது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. அதுவும் தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 150 கோடிகளுக்கு மேல் வசூலித்து விட்டதாக கூறப்படுகிறது.

RJ Balaji Reveals How Ajith s Good Bad Ugly Influenced Changes in Suriya s Karuppu

இப்படி இருக்கையில் படத்தின் இயக்குநர் RJ பாலாஜி அண்மையில் அளித்த பேட்டியில், " நாங்கள் படத்தில் லியோ ரெஃபரன்ஸ் மட்டும் இல்லாமல், கோட் படத்தின் ரெஃபரன்ஸ் மெட்ரோ காட்சி ஒன்றில் வைத்திருந்தோம். ஆனால் இறுதியாக அந்த ரெஃபரன்ஸை நீக்கிவிட்டோம். படத்தில் இது போல பல ரெஃபரன்ஸ்களை நீக்கிவிட்டோம். அதற்கு காரணம், அஜித்தின் குட் பேட் அக்லி படம் தான்.

குட் பேட் அக்லி: கருப்பு படத்தின் இடைவேளை காட்சி சண்டையை படமாக்கிக் கொண்டு இருக்கும் போது தான், அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. அதில் ஏகப்பட்ட ரெஃபரன்ஸ் காட்சிகள் இருந்தது. இதனால் நாங்கள் படத்தில் வைத்திருந்த பல ரெஃபரன்ஸ் காட்சிகளை நீக்கி விட்டோம். மேலும் படத்தில் இரண்டே ரெஃபரன்ஸ் காட்சிகள் தான் இருக்கும், ஒன்று லியோ ரெஃபரன்ஸ் மற்றொன்று சிங்கம் ரெஃபரன்ஸ். இவை இரண்டும் கதை போகும் போக்கில் செல்கிறது. அதனால் அந்த இரண்டையும் நாங்கள் நீக்கவில்லை.

RJ Balaji Reveals How Ajith s Good Bad Ugly Influenced Changes in Suriya s Karuppu

மூக்குத்தி அம்மன்: அதேபோல் படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் போன் செய்த சூர்யா சார், மூக்குத்தி அம்மன் படத்துக்கு மூன்று டிக்கெட் இருக்கிறது என்ற டயலாக்கை நீக்கச் சொன்னார். அந்த காட்சியில் அவர் நடிக்கவே சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும் மூக்குத்தி அம்மன் படம் நான் எடுத்த படம் என்று சொல்லி, அந்த டயலாக்கை சொல்ல வைத்தேன். ஆனாலும் அவருக்கு அதில் உடன்பாடே இல்லாமல் தான் நடித்தார். ஆனால் மூக்குத்தி அம்மன் படம் தியேட்டரில் வெளியாகவில்லை. அது நேரடியாக ஓடிடியில் வெளியான படம்" என்று அந்த பேட்டியில் RJ பாலாஜி பேசி உள்ளார். விகடனுக்கு அளித்த இவரது இந்த பேட்டி குறித்த பல துணுக்கு வீடியோக்கள் இணையத்தில் பரவலாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X