விஜய் சாருக்கு செட் ஆகாது.. கருப்பு கதையை சூர்யாவுக்காக மாற்றினேன்.. ஆர்ஜே பாலாஜி ஓபன் டாக்!
சென்னை: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா,த்ரிஷா நடித்த திரைப்படம் மே 15ந் தேதி தியேட்டரில் வெளியாகி நல்ல வசூலை அள்ளி வருகிறது. சூர்யாவுக்கு கம்பேக் கொடுத்து இருக்கும் கருப்பு படத்தை ரசிகர்கள் தியேட்டரில் பார்த்து கொண்டாடி வரும் நிலையில், படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கருப்பு வெற்றி: அப்போது நடிகர் விஜய் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, அனைத்து துறைகளும் பெரிய அளவில் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு. அது என்னுடைய எதிர்பார்ப்பு மட்டுமல்ல, மக்களின் எதிர்பார்ப்பும் அதுதான். அதற்காகத்தான் மக்கள் வாக்கு போட்டு அவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நானும் அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என நம்புகிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் விஜய் சாரை நன்றாக தெரியும். அவரை எனக்கும் மிகவும் பிடிக்கும். அதனால் அனைவரைப் போல நானும் அவர் மீது நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்றார்.

ஆர்.ஜே.பாலாஜி பேட்டி: தொடர்ந்து 'ஜனநாயகன்' படம் திரைப்படம் வெளியாகாதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஆர்.ஜே.பாலாஜி, என் படம் வெளியாகாத போது, நான் அழுதது போலதான் அந்த தயாரிப்பாளரும் அழுது இருப்பார். எனக்கும் அது மிகவும் கஷ்டமாக இருந்தது என்று மனவேதனையுடன் பதிலளித்தார். மேலும் நடிகை திரிஷா பேசிய அவர், திரிஷா எங்கள் டீமிற்கே மிகவும் பிடித்த நடிகை. 23 வருடங்களாக தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருப்பது சாதாரண விஷயம் கிடையாது. அது மிகவும் கஷ்டம். அப்படிப்பட்டவர் எங்கள் படத்தில் வேலை செய்தது பெருமையான விஷயம் என்றார்.
விஜய் சாரால் பண்ணமுடியாது: தொடர்ந்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி, 'கருப்பு' படத்தின் கதையை தயார் செய்து வைத்திருந்தேன். அந்த கதையை நான் முதலில் சொன்னது விஜய் சாரிடம் தான். அதன் பிறகு சூரியா சாருக்கு கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தபோது, அந்த கதையை அப்படியே மாற்றி சூரியாவுக்கு ஏற்ற மாதிரி சொன்னேன். அந்த திரைப்படம் தான் தற்போது 'கருப்பு' ஆக வெளியாகியுள்ளது. விஜய் சாரால் சிங்கம் பாதி ஒரு படத்தில் நடிக்க முடியாது, இதனால், சூர்யாவிற்காக கதையை மாற்றினேன் என ஆர்ஜே பாலாஜி அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, விஜய்க்கு சொல்லப்பட்ட கதையே பின்னர் மாற்றப்பட்டு 'கருப்பு' திரைப்படமாக உருவானது என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications