RK Selvamani: மனோபாலா மரணம்.. அவரு நெம்பரை டெலிட் செய்யாம வெச்சுருக்கேன்.. ஆர்.கே. செல்வமணி ஷேரிங்ஸ்
சென்னை: நடிகர் தனுஷ் , 5 ஸ்டார் கதிரேசன் மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோருக்கு இடையிலான பிரச்னைக்கு பின்னர் மூத்த இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தமிழ் சினிமா வட்டாரத்தில் டாக் ஆஃப் த டவுன் -ஆக மாறிவிட்டார். இப்படியான நிலையில் அவர் நமது பிலிமி பீட் யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, மறைந்த நடிகர் மனோபாலா குறித்து மனம் திறந்து பேசினார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பேட்டியில், " நடிகர் தனுஷ் பிரச்னையைப் பொறுத்தவரையில். 5 ஸ்டார் கதிரேசனை தனுஷ்க்கு அறிமுகம் செய்து வைத்தது, இயக்குநர் வெற்றி மாறன். வெற்றிமாறன் சொல்லிவிட்டதால் 5 ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து படம் பண்ண சரி எனக் கூறியுள்ளார் தனுஷ். இதற்காக ரூபாய் 5 கோடிகள் தனுஷ் தரப்பில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. ஆனால் 5 ஸ்டார் கதிரேசன் தரப்பில் இருந்து ரூபாய் 3 கோடிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு மாதங்கள் காத்திருந்து பார்த்த தனுஷ், அட்வான்ஸ் கொடுப்பதிலேயே இவ்வளவு சிக்கல் என்றால், நாம் இவருடன் இணைந்து படம் செய்து, முழு சம்பளத்தையும் வாங்குவது சிரமம் என்பதால், அட்வான்ஸ் தொகையை திருப்பித் தர முடிவெடுத்துள்ளார்.

ஆனால் 5 ஸ்டார் கதிரேசன் தரப்பில் அட்வான்ஸை திருப்பி வாங்க மறுத்துள்ளனர். இது மட்டும் இல்லாமல், தனுஷ் கால் ஷீட் கேட்டுக்கொண்டும் இருந்துள்ளனர். இது பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. தற்போது இந்த பிரச்னையில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், ஃபெப்சி என பல அமைப்புகள் இணைந்து சுமூக முடிவு எட்ட ஆலோசனை வழங்கினோம். அதற்கு 5 ஸ்டார் கதிரேசன் தரப்பில் ஒத்துவராததால், தனுஷ் இந்த பிரச்னையை நீதிமன்றத்தில் சந்திக்க தயார் என்றும், கூறிவிட்டார்" என ஆர்.கே. செல்வமணி பேட்டியில் கூறியுள்ளார். அதன் பின்னர்தான் இந்த பிரச்னை பெரும் பூதாகரமாக மாற்றப்பட்டுள்ளது.
கடிதம்: இது தொடர்பாக ஃபெப்சி அமைப்பின் தலைவர், மூத்த இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, 5 ஸ்டார் கதிரேசனின் மனைவி கலைச்செல்விக்கு எழுதிய கடிதத்தில், " 3 கோடி அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, 16 கோடி கேட்பது நியாயம் இல்லை என நடிகர் சங்கத்தின் சார்பில் தெரிவித்த போது, நாங்கள் வட்டிக்கு வாங்கி, பணம் கொடுத்துள்ளோம். எனவே வட்டி எல்லாம் சேர்த்து இந்த நாள் வரை 16 கோடி ஆகிறது. எனவே தனுஷ்ஷிடம் ரூபாய் 16 கோடி வாங்கி தர வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை. நாம் வட்டி கடை நடத்தவில்லை, சங்கம் நடத்துகிறோம். எனவே இது சரியல்ல என நடிகர் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் கணவர் கதிரேசன் நிலையை சம்மேளனமும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் அவர்களுக்கு ( தனுஷ்) எடுத்து கூறி 3 கோடிக்கு மேலாக ஒரு தொகையை பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்தோம்.

நஷ்டம்: நடிகர் சங்கம் நிர்வாகிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனை செய்து அதிகபட்சம் 3 கோடிக்கு இரண்டு மடங்காக 6 கோடி வரை பெற்று தர முடியும் என தெரிவித்தனர். அதை Five Star நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராகிய கதிரேசன் ஏற்கவில்லை. கதிரேசன் என்னுடைய நெடுநாள் நண்பர் என்பதாலும், தனுஷ் அவர்கள் என்னுடைய நண்பரின் மகன் என்ற முறையிலும், எனக்கும் நன்கு நட்புள்ளது என்பதின் அடிப்படையிலும், தனிப்பட்ட முறையில் இதற்கு மேல் ஏதாவது பெற்று தர முடியுமா என முயற்சிக்கிறேன் என தெரிவித்தேன். மேலும் படப்பிடிப்பு குழுவினர் இரண்டு நாட்களுக்கு மேலாக தேனியில் காத்திருக்கின்றனர். படப்பிப்பு நடத்தாமல்,சம்மேளன தொழிலாளர்கள் காத்திருப்பதாலும், தயாரிப்பாளருக்கும் நஷ்டம், எங்கள் சம்மேளன உறுப்பினர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்பதை சம்மேளன தலைவராக நான் தெரிவித்தேன்.
அதிக தொகை: பிரச்சனை முடியாமல் படப்பிடிப்பை தொடங்க கூடாது என உங்கள் கணவர் தெரிவித்தார்.இனிமேல் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்றால் அந்த படத்தின் தயாரிப்பாளரான உங்கள் உறுப்பினரை அழைத்துப் பேசி, நிறுத்திக் கொள்ளுங்கள். சம்மேளனம் ஆகிய நாங்கள் இனியும் படப்பிடிப்பை நிறுத்த இயலாது என்று தெரிவித்தேன். நடிகர் சங்கத்தின் சார்பில் வந்திருந்த நாசர் மற்றும் பூச்சி முருகன் உட்பட நடிகர் சங்க நிர்வாகிகள், இரண்டு மடங்குக்கு மேல் கேட்பது நியாயம் இல்லை என்றாலும், சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி இதற்கு மேல் ஏதாவது அதிக தொகை பெற்று தர முடியுமா என பேசி பார்க்கிறோம் என்று சொல்லி சென்றார்கள்.

வேதனை: இதை நான் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் என அனைவரும் இருக்கும் போது நாங்கள் தெரிவித்தோம்.ஆனால் அப்போது தங்கள் கணவர் கதிரேசன் இதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியாக 15 கோடி தந்தால் மட்டுமே ஒப்புக் கொள்வேன் என்று கூறிவிட்டார். இதில் நியாயம் இல்லை என்று நாங்களும், நடிகர் சங்கமும் நினைத்ததால் இனி இந்த பிரச்சனையில் தலையிட இயலாது என்று தங்கள் கணவரிடமும், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளிடமும் தெரிவித்துவிட்டோம். தங்களை போல தங்கள் கணவரின் வேதனைக்கு சாட்சி கூற நீங்கள் வந்ததை போல நீங்கள் படும் மன உளைச்சலுக்கு சாட்சியம் சொல்ல உங்கள் பக்கத்து வீட்டு அம்மாவை அழைத்து வந்ததை போல, மேற்கண்ட கடிதத்திற்கு புதிதாக சாட்சியம் சொல்ல நான் யாரையும் அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை.

நாகரிகம்: ஏனெனில் நான் மேலே கூறிய அனைத்தும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருக்கும் போது நடந்த உண்மை ஆகும். எனவே நடந்த அனைத்திற்கும் அவர்களே சாட்சியம். அன்புள்ள சகோதரியே! நடந்ததில் சிறு பகுதியை மட்டுமே தங்களுக்கு, கடிதமாக எழுதி உள்ளேன். நட்பு கருதியும், நாகரிகம் கருதியும் பல விஷயங்களை நான் எழுத விரும்பவில்லை என்றும் எப்போதும் நட்புடனே இருக்க விரும்புகிறேன். எங்களை துண்டாதீர்கள்" என குறிப்பிட்டிருந்தார். இது பலருக்கும் பகீர் கிளப்பியது.

மனோபாலா: அதேபோல் இந்த பேட்டியில், மனோபாலா குறித்து பேசும்போது, நடிகர் மனோபாலாவுடன் நான் இணைந்து படங்களில் பணியாற்றியது கிடையாது. ஆனால் அவருடன் இந்த சங்கப் பணிகளில் பலமுறை இணைந்து வேலை செய்த அனுபவம் உள்ளது. நல்ல மனிதர். அவரது மரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போதும் அவர் இருக்கிறார், இன்னும் மரணிக்கவில்லை என்ற உணர்வோடு தான் இருக்கிறேன். அவர் எண்ணை நான் இன்னும் மொபைலில் அப்படியே வைத்துள்ளேன், டெலிட் செய்யவே இல்லை அதற்கு மனம் வரவில்லை" என பேசியுள்ளார். மனோபாலா குறித்து மூத்த இயக்குநர் ஆர்.கே செல்வமணியின் இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











