Robert Master: அம்மா இறுதி ஊர்வலம்.. உடைந்த காலுடன் ஆடிய ராபர்ட் மாஸ்டர்.. கதறி அழுத வனிதா!

சென்னை: நடன இயக்குநரும், நடிகருமான ராபர்ட் மாஸ்டர் அவர்களின் அம்மா உயிரிழந்த நிலையில், இறுதி ஊர்வலத்தில் உடைந்த காலுடன் கதறி அழுதபடி நடன மாடினார். இது பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய ராபர்ட், மம்முட்டியின் மகனாக அழகன் படத்தில் நடித்தார். பின், சத்யராஜின் மாறன் படத்திலும், டான்சர் ஆகிய படத்தில் நடித்தார். டான்சர் படத்தில், ஊனமுற்ற நடனக் கலைஞராக நடித்து இருந்தார். இந்த படம் அவருக்கு பெயரை பெற்றுத்தந்தது. பிரபு தேவாவின் டான்ஸ் குரூப்பில் இருந்து வந்த ராபர்ட் மாஸ்டர். பிரபுதேவா நடித்த படங்களில் பிரபுதேவாவுக்கு பின் நடனம் ஆடினார். போடா போடி படத்தில் பணியாற்றியதற்காக ராபர்ட் சிறந்த நடன இயக்குனருக்கான விஜய் விருதை வென்றார்.

Robert Master mother funeral vanitha
Photo Credit:

ராபர்ட் மாஸ்டர்: இதைத்தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில், பார்ப்பவர்கள் அனைவரையும் டார்லிங் டார்லிங் என அழைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதோடு மட்டுமில்லாமல், நடிகை ரட்சிதாவை இவர் சுற்றி சுற்றி வந்ததை அனைவரும் ரசித்து பார்த்தார்கள். இருந்த போதும், ராபர்ட் மாஸ்டரால், இறுதி வரை தாக்கு பிடிக்க முடியாமல் போனது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ராபர்ட் மாஸ்டர், வனிதாவுடன் இணைந்து மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். 40 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளும் கதைக்களத்தை கொண்ட இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதையடுத்த, இந்த படத்தை வனிதா தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார்.

கதறி அழுத ராபர்ட்: இந்நிலையில், ராபர்ட் மாஸ்டரின் அம்மா அண்மையில் உயிரிழந்தார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் ராபர்ட் மாஸ்டரே அழுதபடி நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி உள்ளது. ராபர்ட்டின் கால்களில் காயம் பட்டு இருந்த போதும், தனது அம்மாவிற்காக ஊர்வலத்தில் நடனமாடி வந்தார். தாயின் உடலை பார்த்து கதறி அழுதது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது. இந்த இறுதிச்சடங்கில் வனிதா, வனிதாவின் மகள் ஜோவிகா, ஷகிலா மற்றும் பல நடிகர்கள், நடன இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X