லவ் பண்ணி ஓடிட்டான்.. பெத்த பொண்ணே அங்கிள்னு கூப்பிடுது.. ராபர்ட் படாத கஷ்டம் இல்ல!

சென்னை: மம்முட்டி நடித்த அழகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ராபர்ட், அதன் பின் ஒரு சில படத்தில் நடித்து வந்தார். டான்சர் படத்தில் ஊனமுற்றவராக நடித்து பெயர் எடுத்த ராபர்ட், பிரபு தேவாவின் டான்ஸ் குரூப்பில் சேர்ந்து பணியாற்றி வந்த நிவையில், போடா போடி படத்தில் நடன இயக்குநராக பணியாற்றினார். அதன் பின் ஒரு சில படத்தில் பணியாற்றிய இவர், விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

நடிகை வனிதாவுடன் சில ஆண்டுகள் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ராபர்ட் மாஸ்டர், அவரின் உதவியால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் டார்லிங்... டார்லிங் என அனைவரையும் அழைத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ராபர்ட் மாஸ்டரின் தாயார் அண்மையில் காலமானார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் உயிரிழந்தது பலரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

லவ் பண்ணி ஓடிட்டான்: அம்மாவின் மறைவு குறித்து, youtube சேனலில் பேசிய ராபர்ட் மாஸ்டர், நான் தான் இந்த வீட்டின் கடைகுட்டி, என்கூடத்தான் அம்மா இருந்தார்கள். என்னோட எல்லா ஆசையையும் அம்மா செய்துவிட்டார்கள். ஆனால், என் அம்மாவின் கடைசி ஆசையே நான் நிறைவேற்றவில்லை. எனக்கு திருமணம் செய்து வைத்து பார்க்க வேண்டும் என அவர்கள் ஆசைப்பட்டார்கள். அந்த ஆசையே நான் நிறைவேற்றவே இல்லை அந்த வருத்தம் என் மனதில் இருக்கிறது. ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்று தோன்றுகிறது என கண்கலங்கி பேசி இருந்தார்.

Robert Master father interview
Photo Credit:

கதறி அழுதான்: தற்போது ராபர்ட் மாஸ்டரின் தந்தை அளித்திருக்கும் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் ராபர்ட் 18 வயதிலேயே, ஒரு டான்சரை காதலித்து வீட்டை விட்டு ஓடி சென்று திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் வடபழனியில் இருப்பதாக எனக்கு தகவல் வந்தது. நான் அங்கு சென்றேன் இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது தான் நான் ராபர்ட்டை முதன் முதலாக அடித்தேன். அதன் பிறகு இருவரையும் வீட்டுக்கு அழைத்து வந்து இருவரும் நன்றாகத் தான் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்கு ஒன்றரை வயது இருக்கும்போது இருவரும் பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு எங்கள் பேத்தியை நாங்கள் பார்க்கவே இல்லை. ஒருமுறை ராபர்ட் மட்டும் பார்த்து பேசி இருக்கிறார். இருவருமே நன்றாகத்தான் பேசி இருகிறார்கள். ஆனால், கடைசியில் போகும்போது குழந்தையிடம் அங்கிளுக்கு பாய் சொல்லு என்று அந்த பெண் சொல்லி இருக்கிறாள் அதை கேட்ட ராபர்ட் அங்கேயே உடைந்து அழுதுவிட்டான்.

நல்லா இருக்கட்டும்: பெத்த பாசத்தை விட வளர்த்த பாசம் அதிகமாக இருக்கும் என்று சொல்லுவார்கள். இரண்டு வருடம் தான் நாங்க பேத்தியை பார்த்தோம். அதன் பின் அந்த பெண் தான் என் பேத்தியை கண்ணும் கருத்துமாக பார்த்து வளர்க்கிறாள். அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டாள், அவரும் பேத்தியை நான்றாக பார்த்துக்கொள்கிறார், எங்கு இருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X