Indraja Shankar: பாப்பாவ Scanல பார்த்தேன்.. உணர்ச்சிவசப்பட்டு பேசிய ரோபோ ஷங்கர்!
சென்னை: ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை தடபுடலாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரைப்பிரபலங்கள், சீரியல் பிரபலங்கள் எனஅனைவரும் கலந்து கொண்டனர்.இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், வீட்டுக்கு வரும் குட்டி பாப்பா குறித்து ரோபோ ஷங்கர் உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.
இந்திரஜாவின் வளைகாப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து youtube சேனலுக்கு பிரியங்கா மற்றும் ரோபோ சங்கர் இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அதில் பேசிய பிரியங்கா, இன்று என் மகளுக்கு ஏழாம் மாத வளைகாப்பு நடைபெறுகிறது. இந்திரஜாவே ஒரு குட்டிப் பாப்பா தான், அவளது வயதில் ஒரு குட்டி பாப்பா வருகிறது என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குழந்தையை பார்க்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.

எல்லையில்லா மகிழ்ச்சி: இந்திரஜா என் வயிற்றில் இருக்கும் போது எங்களுக்கு இந்த அளவுக்கு பொருளாதாரம் இல்லாததால், சங்கர் எப்பொழுதும் வேலை வேலை என்று சென்று கொண்டே இருப்பார். இதனால், குழந்தை வயிற்றில் உதைப்பது, நகர்வதை ஷங்கர் பார்த்தது இல்லை. ஆனால், இப்போது என்னுடைய மகளின் வயிற்றில் வளரும் குழந்தையை பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாகவே இருக்கிறது.சந்தோஷத்திற்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
Scanல பார்த்தேன்: இதைத்தொடர்ந்து பேசிய ரோபோ ஷங்கர், பிரியங்கா கர்ப்பமாக இருக்கும் போது, நான் வீட்டில் இருந்ததே இல்லை, குழந்தையின் வளர்ச்சியை நான் அருகில் இருந்து பார்க்கவில்லை. அந்த வருத்தம் எனக்கு உண்டு. ஆனால் இப்போது, என்னுடைய மகள் இந்திரஜா கர்ப்பமாக இருக்கிறாள். நான் அவளை அருகில் இருந்து கவனித்து கொள்கிறேன்.அவளை நான் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செக்கப்பிற்கு செல்கிறேன். மருத்துவமனையில் ஸ்கேன் பார்த்துவிட்டு நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். ஸ்கேனில் பாப்பா முகத்தில் கையை வைத்துக் கொண்டு இருந்ததை பார்த்து விட்டு, மிகவும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் என்று ரோபோ ஷங்கர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
இந்திரஜாவின் ஜாக்கெட் விலை: இந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை பிரதி எடுத்து இந்திரஜா தனது வளைகாப்பு விழா ஜாக்கெட்டின் பின்புறத்தில் வைத்து டிசைன் செய்துள்ளார். இந்த வளைகாப்பு ஜாக்கெட்டுக்கு மட்டும் 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளார் இந்திரஜா. இதுமட்டுமில்லாமல், ஜடையில், முருகர், கிருஷ்ணர், கருப்பண்ணசாமி, காஞ்சி காமாட்சி என குழந்தை சுவாமிகளின் உருவங்கள் பொதிந்திருந்தன.


Click it and Unblock the Notifications











