கடவுள் ஆப்பு வெச்சிட்டாரு.. எல்லாம் ஒதுங்கிட்டாங்க.. உதவிக்கு யாருமேயில்லை.. ரோபோ சங்கர் மனைவி!
சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர். வியாழக்கிழமை அவரின் உடல்நிலை மேலும் மோசமானதை அடுத்து, சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதையடுத்து, அவரின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின் ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அவரின் மருமகன் அனைத்து ஈமா சடங்குகளையும் செய்து முடித்தார்.
ரோபோ சங்கரின் மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரோபோ சங்கர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தபோது அதிலிருந்து மீண்டார். அப்போது, ரோபோ சங்கரும் அவரது மனைவி பிரியங்காவும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தனர். அதில், திடீரென எடை குறைய ஆரம்பித்தது. அதாவது 110 கிலோ இருந்தவர் திடீரென 90 கிலோவுக்கு வந்துவிட்டார். திடீரென இப்படி உடல் எடை குறைவதற்கு வாய்ப்பில்லை என்று சந்தேகம் வந்ததால், மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அப்போதுதான், அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அனைத்து விஷயங்களிலும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என சொன்னார்.

எல்லாம் ஒதுங்கிட்டாங்க: அதைத்தொடர்ந்து இவரை நான் கண்ட்ரோலாக வைத்து வைத்திருந்தேன். அந்த நேரத்தில் தான் இலங்கைக்கு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். ஊரிலிருந்து வந்தவர் வாந்தி எடுத்தார். அப்போது மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது தான் அவர் மஞ்சள்காமாலை அவரது ரத்தத்தில் கலந்துவிட்டது தெரிந்தது. இதையடுத்து, அவர் பிழைக்கவே மாட்டார் என்று பலரும் நினைத்தார்கள். அந்த இக்கட்டான நேரத்தில், ரோபோ சங்கர், இப்போது உடல்நிலை முடியாமல் இருக்கிறார். அவர், பிழைப்பது கஷ்டம் பணத்தை கேட்டுவிடுவார்களோ என பலர் ஒதுங்கி சென்றதை நான் பார்த்தேன். அதே நேரத்தில் ஒரு சில உறவுகள் என் கூட இருந்தார்கள்.
கடவுள் ஆப்பு வெச்சிட்டாரு: சோசியல் மீடியாவில் வரும் செய்திகளை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. ரோபோ சங்கர் ஓவராக குடித்து ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டார். அதற்காகத்தான் கடவுள் ஆப்பு வெச்சிட்டாரு, அவருக்கு சரியான தண்டனை கொடுத்து இருக்கிறார் என்று பேசுகிறார் என பலரும் சொல்வதை கேட்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. உடல்நிலை சரியல்லாமல் இருக்கும்நேரத்தில் இப்படி எல்லாம் பேசலாமா, இப்படி பேசினால் வீவ்ஸ் வரும் என்பதற்காக இப்படி செய்யலாமா. கடவுளின் புண்ணியத்தால் ஒரு சில நல்லவர்களின் ஒத்துழைப்பால், நான்கு மாதம் போராடி என் கணவனை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறேன் என பிரியங்கா அந்த வீடியோவில் பேசி இருந்தார். மஞ்சள் காமாலையில் இருந்து போராடி ரோபோ சங்கரை மீட்டு வந்தார். ஆனால், கடைசியில் காலம் மீண்டும் அவரை அழைத்துக்கொண்டது தான் வேதனையான விஷயமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications