Don't Miss!
- News
கீமோ போர்ட்..புற்று நோயாளிகளுக்கு வலியில்லாத சிகிச்சை..மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வரப்பிரசாதம்
- Technology
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு February 14 எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- Automobiles
ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து...
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Finance
Adani Group: ரூ.9 லட்சம் கோடி இழப்பு.. RBI சொல்வது என்ன..?! முதலீட்டாளர்களே கவனிங்க..!
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சூப்பர்ஸ்டாருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம்... வசந்த் ரவியின் வேற லெவல் பேட்டி!
சென்னை : நடிகர் வசந்த் ரவி, ரவீனா ரவி, பாரதிராஜா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் 23ம் தேதி ரிலீசாக உள்ள படம் ராக்கி.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை நயன்தாரா -விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
இந்நிலையில் பில்மி பீட்டிற்காக கொடுத்துள்ள பேட்டியில் படத்தின் பல்வேறு விஷயங்கள் மற்றும் சூப்பர்ஸ்டாருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார் வசந்த் ரவி.
பா ரஞ்சித்துடன் இணையும் அனிருத்? மீண்டும் இயக்கத்தில் இறங்கும் நடிகர்.. டாப் 5 பீட்டிஸில்!

ராக்கி படம்
நடிகர் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ராக்கி. இந்தப் படம் வரும் 23ம் தேதி கிறிஸ்துமசையொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பிரமோஷன் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ட்ரெயிலர்கள் வரவேற்பு
படத்தின் அனைத்து உரிமைகளையும் நயன்தாரா -விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ள நிலையில், படத்தின் டீசர், மற்றும் இரண்டு ட்ரெயிலர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. இவை உலக தரத்தில் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதிகரித்துள்ள எதிர்பார்ப்பு
ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. தரமணி படத்தில் நடித்து சிறந்த புதுமுக நடிகர் என்ற விருதைப் பெற்ற வசந்த் ரவி, தற்போது ராக்கி படம் குறித்து பிலிமிபீட் ரசிகர்களிடையே பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

வித்தியாசமான கேரக்டருக்கு காத்திருப்பு
தரமணி படத்தை முடித்துவிட்டு அதிலிருந்து முற்றிலும் வித்தியாசமான கேரக்டருக்காக தான் காத்திருந்தபோது அதேவகையில் ராக்கி படம் தனக்கு அமைந்ததாகவும் அந்த கேரக்டர் சிறப்பான முறையில் தற்போது வெளியாக உள்ளதாகவும் வசந்த் ரவி குறிப்பிட்டுள்ளார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கம்
தியாகராஜன் குமாரராஜாவின் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், சென்னையில் அதிகமாக பயன்படுத்தப்படாத தளங்களில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முற்றிலும் அருண் மாதேஸ்வரன் மட்டுமே காரணம் என்று வசந்த் ரவி பாராட்டியுள்ளார்.

தீவிரமான ராக்கி கேரக்டர்
ராக்கி கேரக்டரின் தீவிரம் குறித்து முன்னதாகவே டைரக்டர் தனக்கு சிறப்பாக தெரிவித்ததாகவும் அது தற்போது அந்த கேரக்டரில் ரசிகர்கள் உணரும்வகையில் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் படத்தில் ரவீனா ரவி தன்னுடைய தங்கையாக நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

சர்ப்பிரைஸ் கேரக்டர்
அதேபோல ராக்கி படத்தில் சர்ப்பிரைசாக ஒரு கேரக்டர் உள்ளதாகவும் அது படம் வெளியானவுடன் ரசிகர்களுக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார். இதேபோல ரவுடி பிக்சர்சை போலவே மற்றொரு பிரபல இயக்குநரும் இந்தப் படத்தை வாங்க போட்டியிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறப்பான பாரதிராஜா
படத்தில் பாரதிராஜா மிகவும் சிறப்பாக தன்னுடைய கேரக்டரை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவரது கெட்டப்புகள் சிற்பபாக பேசப்படும் என்றும் வசந்த் தெரிவித்துள்ளார். படத்தில் மெய்சிலிர்க்க வைக்கும் பல காட்சிகளில் அவர் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர் ஊக்கம்
படத்தில் அவர் தனது கேரக்டரை தொடர்ந்து அவர் பாராட்டியதாகவும் தொடர்ந்து ஊக்குவித்ததாகவும் வசந்த் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல இசையமைப்பாளர் தர்புகா சிவா தனது சிறப்பான உலகத்தில் இருந்து வெளிவராமல் சிறப்பான இசையமைப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இயக்குநர் ராம் பாராட்டு
தென் அமெரிக்க இசைக்கருவிகளை அவர் தனது இசையில் பயன்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இயக்குநர் ராம், தனது படத்தை பார்த்து தனக்கும் இயக்குநருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் அவர் விருப்பப்படியே படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாகவும் வசந்த் ரவி கூறியுள்ளார்.

2.O படத்தில் பின்னணி
இதனிடையே ஷங்கரின் 2.0 படத்திற்காக தான் சயின்டிஸ்ட் போராவின் மகன் கேரக்டருக்காக தான் பின்னணி குரல் கொடுத்துள்ளதாகவும் ரஜினியுடன் இணைந்து தான் டப்பிங் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராட்டிய சூப்பர்ஸ்டார்
சூப்பர்ஸ்டார் தன்னுடைய நடிப்பை தரமணியில் பார்த்துவிட்டு சில காட்சிகளில் தன்னுடைய குரல் ரகுவரனை நினைப்படுத்தியதாக பாராட்டு தெரிவித்ததையும் வசந்த் ரவி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தான் அடுத்ததாக வித்தியாசமான கதைக்களத்தில் நடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.