twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேப்டன் விஜயகாந்தை அடித்தேனா? உண்மையில் நடந்தது என்ன? இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கம்!

    |

    சென்னை: கேப்டன் விஜயகாந்தை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் அடித்ததாக வெளியான தகவல்களுக்கு சமீபத்திய பேட்டியில் ஆவேசத்துடன் அவர் அளித்துள்ள விளக்கம் வைரலாகி வருகிறது.

    Recommended Video

    Vijay க்காக என்னை மாற்றிக்கொண்டேன் | S. A. Chandrasekhar | Naan kadavul illai | Filmibeat Tamil

    இயக்குநரும் தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை என்கிற படம் உருவாகி உள்ளது.

    பிரபல நடிகையை இரும்பு ராடால் தாக்கிய கும்பல்.. ஆசிட் வீச்சில் இருந்து தப்பியதாக பரபரப்பு வீடியோ!பிரபல நடிகையை இரும்பு ராடால் தாக்கிய கும்பல்.. ஆசிட் வீச்சில் இருந்து தப்பியதாக பரபரப்பு வீடியோ!

    அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எஸ்.ஏ. சந்திரசேகர் ஏகப்பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசி வருகிறார்.

    மகனுடன் மோதல்

    மகனுடன் மோதல்

    எல்லா வீட்டிலும் நடப்பது போலத்தான் எனக்கும் என் மகனுக்கும் இடையேயான மோதல் உள்ளதாகவும், மீடியாக்கள் அதனை பெரிது படுத்த வேண்டாம் என்றும் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார். மேலும், நடிகர் விஜய்யுடன் இப்போது பேச்சுவார்த்தையில் இல்லை என்றும் ஆனால், எப்போது வேண்டுமானாலும் நாங்கள் கூடி பேசிக் கொள்வோம் என்றும் அவர் பதிலளித்துள்ளார்.

    விஜயகாந்த் படங்கள்

    விஜயகாந்த் படங்கள்

    சட்டம் ஒரு இருட்டறை, நெஞ்சிலே துணிவிருந்தால், நீதி பிழைத்தது, பட்டணத்து ராஜாக்கள், ஓம் சக்தி, சாட்சி, வெற்றி, வீட்டுக்கு ஒரு கண்ணகி, குடும்பம், புதுயுகம், நீதியின் மறுபக்கம், எனக்கு நானே நீதிபதி, வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, ராஜநடை, ராஜதுரை, பெரியண்ணா உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் விஜயகாந்தை இயக்கி உள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

    விஜயகாந்தை அடித்தாரா

    விஜயகாந்தை அடித்தாரா

    இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஷூட்டிங் ஸ்பாட்டில் மிகவும் கண்டிப்புடனும் கோபத்துடனும் நடந்து கொள்வார் என்றும் ஒரு முறை கேப்டன் விஜயகாந்தையே ஷூட்டிங் ஸ்பாட்டில் எஸ்.ஏ. சந்திரசேகர் அடித்து விட்டார் என்றும் நடிகை ராதிகா உள்ளிட்ட சில பிரபலங்கள் கூறியதாக எழுந்த கேள்விக்கு சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

    நான் அடித்தேனா

    நான் அடித்தேனா

    அந்த கேள்வியை கேட்ட உடன் கோபப்பட்ட எஸ்.ஏ. சந்திரசேகர் விஜயகாந்துக்கும் எனக்கும் இடையேயான உறவு குரு சிஷ்யனுக்கான உறவு. அவருடன் பல படங்களில் பணியாற்றி உள்ளேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் சில சமயங்களில் கோபப்பட்டு திட்டி இருப்பேனே தவிர விஜயகாந்தை நான் அடிக்கவே இல்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.

    விஜய்யை கூப்பிடமாட்டேன்

    விஜய்யை கூப்பிடமாட்டேன்

    சமுத்திரகனி மற்றும் சாக்‌ஷி அகர்வால் நடிப்பில் உருவாகி உள்ள நான் கடவுள் இல்லை படத்தின் புரமோஷனுக்கு விஜய் ஏன் வரவில்லை என்கிற கேள்விக்கு, இப்போ இல்லை நாங்கள் இருவரும் நன்றாக பேசிக் கொண்டிருக்கும் போதே என் படங்களின் புரமோஷனுக்கு அவரை அழைக்க மாட்டேன் என்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.

    புகையும் பிரச்சனை

    புகையும் பிரச்சனை

    விஜய்யின் செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் செய்ய வேண்டும் என தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் நினைப்பது தான் விஜய்க்கும் அவருக்கும் இடையேயான பிரச்சனைக்கு காரணம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில், என் பெயரையோ புகைப்படத்தையோ அரசியலுக்கு தந்தை, தாய் மற்றும் ரசிகர்கள் யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் விஜய் தரப்பில் இருந்து அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    வித்தியாசமான கதை

    வித்தியாசமான கதை

    இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் சேகர் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான கேப்மாரி திரைப்படத்தில் நடிகர் ஜெய், வைபவி சாண்டில்யா மற்றும் அதுல்யா ரவி உள்ளிட்டோ நடித்திருந்தனர். அடல்ட் காமெடி படமாக உருவான அந்த படம் பெரும் தோல்வியை தழுவிய நிலையில், வித்தியாசமான கதையை கொண்டு நான் கடவுள் இல்லை படத்தை உருவாக்கி இருப்பதாக எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.

    English summary
    Thalapathy Vijay’s father and ace director SA Chandrasekhar opens up about Captain Vijayakanth slapping issue in his recent interview.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X