வலிமை படத்தை பார்த்தா அந்த பிரச்சனை வரும்.. எஸ்.ஏ. சந்திரசேகர் செம கூலான பேட்டி!
சென்னை: பிரபல இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் வலிமை படத்தை முதல் நாளிலேயே தியேட்டருக்கு சென்று பார்க்காதது ஏன் என்கிற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
ஆரம்பத்தில் அஜித் ரசிகர்களுக்கான ஆக்ஷன் படமாக வலிமை இருக்கும் என நினைத்த நிலையில், தற்போது தாய்மார்களின் ஆதரவை இந்த படம் பெற்றுள்ளது.

எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி
எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி என்றாலே நடிகர் விஜயை பற்றி புதிதாக என்ன பேசியுள்ளார் என்கிற ஆர்வம் தான் ரசிகர்களுக்கு பெரும்பாலும் எழும், இந்நிலையில், இந்த பேட்டியில் அதையும் தாண்டி நடிகர் அஜித் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை ஷேர் செய்துள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

அஜித்தை பிடிக்கும்
என் மகன் விஜய்க்கு அடுத்து எனக்கு தமிழ் சினிமாவில் ரொம்ப பிடித்த நடிகர் என்றால் அது அஜித் தான். அஜித்தை தொடர்ந்து தனுஷ் எனக்கு ரொம்பவே பிடிக்கும். இவர்கள் அனைவரும் உள்ளத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு உதட்டில் இன்னொன்றை பேசமாட்டார்கள். அந்த பண்பு தான் இவர்களை எனக்கு பிடிக்க வைத்தது எனக் கூறியுள்ளார்.

வலிமை FDFS ஏன் பார்க்கல
அஜித் குமாரின் வலிமை படம் வெளியாகி இருக்கு. அந்த படத்தை முதல் நாளில் தியேட்டரில் போய் ஏன் பார்க்கல என்கிற கேள்வியை யாராவது கேட்டால், என்ன பதில் சொல்வீங்க என கேட்க, ஏற்கனவே நான் ஒரு பேட்டி கொடுத்தால், அதை வேறு ஒரு தலைப்பு போட்டு திரித்து விடுகிறார்கள். வலிமை படத்தை தியேட்டரில் பார்த்தால் வேறுவிதமாக கதை கட்டு விடுவார்கள். அப்படி ஏதும் பிரச்சனைகள் வராமல் இருக்கத் தான் தவிர்த்து விட்டேன் என்றார்.
ஏற்கனவே பார்த்திருக்கிறேன்
அஜித்தின் நடிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஏற்கனவே அவரது முந்தைய படங்களை FDFS ஷோவெல்லாம் போய் பார்த்திருக்கிறேன். நேராகவே அவரது வீட்டுக்கு சென்று அவரது நடிப்பை பாராட்டி இருக்கிறேன் என்றும் ஏகப்பட்ட தகவல்களை நம்முடன் ஷேர் செய்துள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர். விரைவில் அவரது முழுப்பேட்டி தமிழ் பிலிமி பீட் யூடியூப் தளத்தில் வெளியாக காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications