twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கர்நாடகாவில் காலா ரிலீசுக்கு வாய்ப்பே இல்லை... சாரா கோவிந்து திட்டவட்டம்: ஒன்இந்தியா எக்ஸ்க்ளூசிவ்

    கர்நாடகாவில் காலா ரிலீசுக்கு வாய்ப்பே இல்லை என சா ரா கோவிந்து திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    |

    Recommended Video

    தமிழகத்தில் ரஜினிக்கு எதிர்ப்பு...கர்நாடகத்தில் காலாவிற்கு ஆப்பு!- வீடியோ

    சென்னை: கர்நாடகாவில் ரஜினியின் காலா படம் ரிலீஸ் செய்யப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் சா ரா கோவிந்து ஒன் இந்தியா தமிழ் இணையதளத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் வரும் 7ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கிறது. ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு ரிலீசாகும் படம் இது என்பதால், அவரது ரசிகர்கள் மத்தியில் காலா படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

    ஆனால், ரஜினியின் காவிரி விவகாரம் தொடர்பான பேச்சுக்களால், காலாவை கர்நாடகாவில் திரையிட அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. இது தொடர்பாக இன்று கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.

     காலா வராது

    காலா வராது

    இந்த சூழ்நிலையில், கர்நாடகாவில் காலா திரைப்படம் ரிலீசாக வாய்ப்பே இல்லை என கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் சா ரா கோவிந்து திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழ் இணையதளத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது;

     கர்நாடக மக்கள் கோபம்

    கர்நாடக மக்கள் கோபம்

    ரஜினிகாந்த் அரசியலில் நுழைந்த பிறகு, காவேரி விவகாரம் தொடர்பாக அவர் பேசிய கருத்துக்கள் எதிர்ப்பலைகளை உருவாக்கி இருக்கிறது. இதனால், கர்நாடகாவில் காலா படம் ரிலீசானால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய சூழல் நிலவுகிறது.

     போலீஸை வைத்து ஓட்டுவது கஷ்டம்

    போலீஸை வைத்து ஓட்டுவது கஷ்டம்

    போலீஸ் பாதுகாப்பை வைத்து இங்கு படத்தை ஓட்ட முடியாது. இதனைக் கருத்தில் கொண்டு படத்தை இங்கு ரிலீஸ் செய்வதில்லை என முடிவு செய்திருக்கிறோம்.

     யாருக்கும் ரஜினி மீது அன்பு இல்லை

    யாருக்கும் ரஜினி மீது அன்பு இல்லை

    ரஜினியின் ரசிகர்கள் கர்நாடகாவிலும் இருக்கிறார்கள். இது அவர்களுக்கு ஏமாற்றமாக இருக்காதா? என்ற கேள்விக்கு, இப்போதைக்கு இங்குள்ள மக்கள் ரஜினி மீது கோபத்தில் தான் இருக்கிறார்கள். எனவே, இது பற்றி முடிவெடுப்பது சிரமம் என்றார்.

     வருவதற்கு வாய்ப்பே இல்லை

    வருவதற்கு வாய்ப்பே இல்லை

    ரஜினி மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் கர்நாடகாவில் காலா ரிலீஸ் செய்வது குறித்த நடவடிக்கைகள் பற்றிய கேள்விக்கு சாரா கோவிந்து பதிலளிக்கையில், இப்போதைய சூழலில் இங்கு காலா படத்தை ரிலீஸ் செய்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதில் எந்த மாற்றமும் ஏற்படும் என நான் நினைக்கவில்லை என்றார் கோவிந்து.

    English summary
    In an exclusive interview to OneIndia, the Karnataka Fil Chamber of Commerce President Sa Ra Govindu has said that Rajini's Kaala movie will not be release in Karnataka.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X