»   »  சிஸ்டர் சிண்ட்ரோம் சதா!

சிஸ்டர் சிண்ட்ரோம் சதா!

Subscribe to Oneindia Tamil

தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களுக்கு சிஸ்டர் சிண்ட்ரோம் பிடித்துக் கொண்டுள்ளதாகசொல்கிறார் சதா.

எல்லோருமே தன்னை தங்கச்சியாகவே பார்ப்பதாகவும், யாருமே ஐ லவ் யூ சொல்லமாட்டேங்கிறாங்க என்றும் செல்லமாக அலுத்துக் கொள்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிப் படங்களும் அத்து விட, இப்போதுசதா ஆதரவற்றோர் பட்டியலில் பைய பைய சேர்ந்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து எடுத்த சில முயற்சிகளால் அங்கும் இங்குமாக ஓரிரு படங்கள் கையில்உள்ளதாம். சான்ஸ் குறைய ஆரம்பித்து விட்டதால் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கஆரம்பித்து விட்டார்களாம். ஒரு பையனைக் கூட ரெடி செய்து விட்டார்களாம்.ஆனால் சதாதான் இன்னும் சம்மதிக்காமல் உள்ளாராம்.

ஏனாம்? அப்பா வற்புறுத்திக்கொண்டிருக்கிறார், நான் சம்மதித்தால் நாளைக்கேதிருமணம்தான், ஆனால் எனக்கு விருப்பமில்லை. இன்னும் இரண்டு வருடம்போகட்டுமே என்கிறார்.

காதல் திருமணமா என்றால், நான் காதல் திருமணம் செய்துகொண்டால் எங்க வீட்டில்யாரும் தடுக்க மாட்டார்கள். ஏன்னா, அம்மா அஞ்சு ஒரு பிராமின், அப்பா சையத்,முஸ்லீம். அவர்களோடது காதல் திருமணம் தான். அப்புறம் எனக்கு மட்டும் எப்படிபோடுவாங்க தடா என்கிறார் செல்லச் சிணுங்கலுடன்.

சரி, வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும்? நம்பிக்கையுடன் கூடிய,அன்புள்ளம் கொண்ட, மரியாதை தெரிந்த, எனது பெற்றோரை மதிப்பவராக இருக்கவேண்டும் என்று சன் டிவியில் வரும் கல்யாண மாலை நிகழ்ச்சியில் சொல்பவர்போல அடுக்குகிறார்.

தமிழ்நாட்டு பசங்க ஓ.கே.வா என்று கேட்டால், மொழி பாரபட்சம் எல்லாம் பார்க்கமாட்டேன். எல்லா ஊர் ஆண்களும் ஒன்றுதான் என்கிறார்.

கொஞ்ச நாளாக சதா உடம்பு இளைத்துப்போய்க் காணப்படுகிறார். ஊரெல்லாம் வந்துபோன சிக்குன்குனியா, சதாவையும் விட்டு வைக்காமல் சத்தாய்த்து விட்டதாம்.

10 நாட்கள் படுத்த படுக்கையாக கிடந்து, 52 கிலோ தாஜ்மஹாலாக இருந்த சதாஇப்போது 46 கிலோ குதுப்மினாராக மாறி விட்டார்.

உடம்பு மெலியலாம், மார்க்கெட் நலிந்து போய் விடாம பாத்துக்கங்க சதாக்கா!

Read more about: sadha ready for marriage

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil