»   »  எதிரியுடன் சதா லீலை!

எதிரியுடன் சதா லீலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மீண்டும் சொல்லிக் கொள்ளும்படியாக படங்கள் கையில் இருப்பதால் உற்சமாக இருக்கிறார் சதா.

ஜெயம் வந்த புதிதில் இருந்து சதாவுக்கும், அந்நியனுக்குப் பிறகு உள்ள சதாவுக்கும் இடையே 12 வித்தியாசங்களை காணலாம். அந்த அளவுக்குசத்தத்தைக் குறைத்து விட்டு நிசப்தமாகி விட்டார் சதா.

அந்நியனுக்குப் பிறகு திரையுலகுக்கு அன்னியமானவராகி விட்டார் சதா. படங்கள் எதுவும் இல்லாமல் வீட்டு விட்டத்தை வெறிச்சிட்டபடி இருந்தசதாவுக்கு இப்போது கையில் சில படங்கள் இருப்பதால் புதிய உற்சாகம் பிறந்துள்ளதாம்.

பந்தாக்களை மூட்டை கட்டி வைத்து விட்டு சந்தோஷமாக நடித்துக் கொண்டிருக்கிறார். மாதவனுடன் லீலை என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சதாவிடம், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓரங்கட்டி பேசினோம்.

மாதவனுடன் நடிப்பது இது மூன்றாவது படம் எனக்கு. முதல் படம் எதிரி. அடுத்து பிரியசகி. எதி>யில் நடித்தபோது அவருடன் அதிக பழக்கம்இல்லை. பிரியசகியில் நடித்தபோதுதான் அவருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. இப்போது லீலையில் அது இறுகியுள்ளது.

லீலை படப்பிடிப்பின்போது எனது பிறந்த நாளை மாதவனும், இயக்குநரும் வெகு விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர். எனக்குஇன்ப அதிர்ச்சியாகப் போய் விட்டது.

இப்போது தமிழில் உன்னாலே உன்னாலே, லீலை, தெலுங்கில் கிளாஸ்மேட்ஸ் என மூன்று படங்களில் நடித்து வருகிறேன்.

தொடர்ந்து சில படங்களில் நடிக்க பேச்சு நடந்து கொண்டிருக்கிறது. எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக இருந்தால் ஒத்துக்கொள்கிறேன். அது இரு ஹீரோயின் கதையாக இருந்தாலும் பரவாயில்லை.

இரு ஹீரோயின் சப்ஜெக்ட்டில் நடிக்க எனக்கு தயக்கம் இல்லை. கேரக்டர் வலுவாக இருக்கிறதா என்பதை மட்டுமே பார்க்கிறேன் என்றார் சதா.

உன்னாலே உன்னாலே படத்தில் உங்களை விட தனிஷாக்கு (கஜோலின் தங்கச்சி) முக்கியத்துவம் அதிகமாமே, கிளாமர் கூட ஜாஸ்தி என்கிறார்கள்என்று வதந்திக்கு வாய்ப்பு அடிக்கல் நாட்டினோம்.

அப்படியெல்லாம் இல்லை. இருவருக்கும் சமமான பாத்திரங்கள்தான். எனக்கு ஆரம்பத்திலிருந்தே கிளாமரில் இஷ்டம் கிடையாது. எனவே இந்தப்படத்திலும் அப்படியேதான் நடித்துள்ளேன். மற்றவர்கள் கிளாமராக நடிப்பதைப் பற்றி நமக்கு என்ன கவலை என்றார்.வாஸ்தவமான பேச்சு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil