For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நான் ரசிக்கப்படுபவள் - சதா எனது அம்மா, அப்பா பார்த்து சொல்லும் ஆளைத் தான் மணப்பேன். அவர்கள் இஷ்டப்படி தான் எனது திருமணம் நடக்கும்என்று ஸ்டேட்மெண்ட் விட்டுள்ளார் சதா.ஜெயம் மூலம் அறிமுகமாகி அந்நியனில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சதா, அந்நியனுக்குக் கிடைக்கப் போகும்வரவேற்புக்காக ஆவலுடன் காத்துள்ளார். அந்நியனுக்கு அடுத்து அவர் நடித்து வரும் படம் மாதவனுடன் பிரிய சகி.பிரிய சகி செட்டில் சதாவை சந்தித்தபோது ரொம்ப உற்சாகமாக இருந்தார். மிகப் பெரிய அனுபவத்துடன் அந்நியனைமுடித்துள்ள திருப்தி அவரது முகத்தில் பளிச்சிட்டது. அந்நியன் அனுபவம் எப்படி என்று சதாவின் வாயைக் கிண்டினோம். அய்யோ, அது மிகப் பெரிய அனுபவம். ஷங்கர் சார்போன்ற மிகப் பெரிய இயக்குநருடன் பணி புரிவதே நல்ல அனுபவம் தானே? அவருக்குத் திருப்தி வருகிற வரை அந்தக்காட்சியைஎடுப்பார். அதற்காக பல முறை டேக் வாங்கவும் அவர் தயங்க மாட்டார். படத்தில் ஒரு காட்சி. நான் புன்னகைப்பது போன்ற காட்சி அது. சாதாரண ஒரு சிரிப்பு தான். ஆனால் ஷங்கர் சார் எதிர்பார்த்தமாதிரி நான் சிரிக்கவில்லை. இதனால் அவர் எதிர்பார்ப்பது போல நான் சிரிக்கும் வரை அந்தக் காட்சியை திரும்பத் திரும்பஎடுத்தார். பல முறை சிரித்த பின்னர் தான் அந்தக் காட்சி ஓ.கே. ஆனது. அந்தக் காட்சி எடுக்கப்பட்டு சில மணி நேரங்கள் வரை நான் இயல்பாகவே சிரிக்க முடியவில்லை. அந்த அளவுக்குஅக்காட்சியை மிகவும் ஈடுபாட்டுடன் எடுத்தார் ஷங்கர் சார்.அந்நியனில் மாமி வேடத்தில் நான் நடித்துள்ளேன். ஐயங்கார் வீட்டுப் பெண்ணின் குணாதிசயங்கள், பேச்சு, வழக்கம் எனஅனைத்தையும் அப்சர்வ் செய்து நடித்துள்ளேன். நன்றாக நடித்திருக்கிறேனா என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும். (சதாமாமியை நல்லா இல்லேன்னு யாராவது சொல்வாளோ?)நடிப்பு என்பது இயல்பான விஷயம். அதை சொல்லிக் கொடுத்து பயிற்சி எடுத்துத் தான் செய்ய முடியும் என்று கூற முடியாது.அதுவா வர வேண்டும். அப்படித் தான் எனக்கும். நடிப்புக்காக நான் யாரிடமும் சிறப்புப் பயிற்சி எதையும் பெறவில்லை. கல்லூரியில் படித்தபோது கலை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடியுள்ளேன். அந்தப் புகைப்படங்களைப் பார்த்துத் தான் தெலுங்குஜெயம் பட வாய்ப்பு வந்தது. அப்படியே தமிழுக்கும் வந்து விட்டேன்.என்னிடம் உள்ள சில மேனரிசங்களை இயக்குநர்கள் படங்களிலும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவை ரசிகர்களாலும்ரசிக்கப்படுகிறது. கிளாமராக நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். கேரக்டருக்கு பொருத்தமாகத் தான் நடிக்க முடியும். கிளாமரைதேவையில்லாமல் திணித்தால் அது எடுபடாது, அசிங்கமாகப் போய் விடும். மோனலிஸா என்ற கன்னடப் படத்தில் நான்கிளாமராக நடித்துள்ளதாக கூற முடியாது. அதில் இரண்டு கேரக்டர்கள். ஒரு கேரக்டரை வித்தியாசப்படுத்தத் தான் கிளாமர் சேர்த்தார்கள். அதற்கான காரணம் எனக்குநியாயமாகப் பட்டதால் அதை செய்தேன். அதிலும் கூட அறுவறுப்பு இருக்காது.என்னைப் பொருத்தவரை தாவணியிலும் கிளாமர் காட்ட முடியும், டூ பீஸிலும் கிளாமர் காட்ட முடியும். ஆனால் இரண்டிற்கும்வித்தியாசம் உள்ளது. அந்த வித்தியாசம் எனக்கு தெரியும். அதனால் எனது கிளாமரில் அசிங்கம் இருக்காது.இப்போது செய்து வரும் பிரிய சகி கேரக்டர் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. இதில் மாதவனுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளேன்(முதல் படம் எதிரி). மாதவன் சிறந்த நடிகர். சக நடிகர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி தன்னுடன் போட்டி போட்டுநடிக்குமாறு கூறுவார். பிரிய சகி இந்திப் படத்தின் ரீமேக். இந்தியில் ஷில்பா ஷெட்டி நடித்திருந்த ரோலில் நான் தமிழில் நடிக்கிறேன். கணவன்,மனைவிக்கிடையிலான உறவு, அதில் ஏற்படும் போராட்டங்கள் குறித்த கதை இது. நல்ல நடிப்புக்கு சரியான விருந்தாகஅமைந்துள்ளது.சதாவைப் பார்ப்பதே நல்ல விருந்தாக இருக்கும்போது அவர் நன்றாக நடித்தால் அது டபுள் விருந்தாகத் தான் அமையும்! சரி,சதாவுக்கு கல்யாணம் எப்போ, காதல் வயப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறதே?அதெல்லாம் கிடையாது. இப்போதைக்கு நன்றாக நடித்து பெயர் வாங்க வேண்டும் என்பது மட்டும்தான் எனது ஒரே நோக்கம்.எனது கல்யாணம் குறித்து அப்பா, அம்மாதான் முடிவு செய்வார்கள். எனது நலனில் அவர்களை விட வேறு யாருக்கு அக்கறைஇருந்து விட முடியும்? இன்னும் நான் சின்னப் பொண்ணு தான். அப்பா மடியில் தான் இப்போதும் தூங்குவேன். அப்படி இருக்கும் போது கல்யாணத்தைமட்டும் நானாக டிசைட் செய்து விட முடியுமா? அப்படி செய்தால் அது நியாயமாகுமா? முதலில் வெற்றி பெற வேண்டும். அப்புறம் தான் மத்ததெல்லாம்அதானே, சதாவுக்கு அதுக்குள்ள கல்யாணமாகிட்டா ரசிகர்கள் நிலை என்னாவது?

  By Staff
  |

  எனது அம்மா, அப்பா பார்த்து சொல்லும் ஆளைத் தான் மணப்பேன். அவர்கள் இஷ்டப்படி தான் எனது திருமணம் நடக்கும்என்று ஸ்டேட்மெண்ட் விட்டுள்ளார் சதா.

  ஜெயம் மூலம் அறிமுகமாகி அந்நியனில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சதா, அந்நியனுக்குக் கிடைக்கப் போகும்வரவேற்புக்காக ஆவலுடன் காத்துள்ளார். அந்நியனுக்கு அடுத்து அவர் நடித்து வரும் படம் மாதவனுடன் பிரிய சகி.

  பிரிய சகி செட்டில் சதாவை சந்தித்தபோது ரொம்ப உற்சாகமாக இருந்தார். மிகப் பெரிய அனுபவத்துடன் அந்நியனைமுடித்துள்ள திருப்தி அவரது முகத்தில் பளிச்சிட்டது.

  அந்நியன் அனுபவம் எப்படி என்று சதாவின் வாயைக் கிண்டினோம். அய்யோ, அது மிகப் பெரிய அனுபவம். ஷங்கர் சார்போன்ற மிகப் பெரிய இயக்குநருடன் பணி புரிவதே நல்ல அனுபவம் தானே? அவருக்குத் திருப்தி வருகிற வரை அந்தக்காட்சியைஎடுப்பார். அதற்காக பல முறை டேக் வாங்கவும் அவர் தயங்க மாட்டார்.

  படத்தில் ஒரு காட்சி. நான் புன்னகைப்பது போன்ற காட்சி அது. சாதாரண ஒரு சிரிப்பு தான். ஆனால் ஷங்கர் சார் எதிர்பார்த்தமாதிரி நான் சிரிக்கவில்லை. இதனால் அவர் எதிர்பார்ப்பது போல நான் சிரிக்கும் வரை அந்தக் காட்சியை திரும்பத் திரும்பஎடுத்தார். பல முறை சிரித்த பின்னர் தான் அந்தக் காட்சி ஓ.கே. ஆனது.

  அந்தக் காட்சி எடுக்கப்பட்டு சில மணி நேரங்கள் வரை நான் இயல்பாகவே சிரிக்க முடியவில்லை. அந்த அளவுக்குஅக்காட்சியை மிகவும் ஈடுபாட்டுடன் எடுத்தார் ஷங்கர் சார்.

  அந்நியனில் மாமி வேடத்தில் நான் நடித்துள்ளேன். ஐயங்கார் வீட்டுப் பெண்ணின் குணாதிசயங்கள், பேச்சு, வழக்கம் எனஅனைத்தையும் அப்சர்வ் செய்து நடித்துள்ளேன். நன்றாக நடித்திருக்கிறேனா என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும். (சதாமாமியை நல்லா இல்லேன்னு யாராவது சொல்வாளோ?)

  நடிப்பு என்பது இயல்பான விஷயம். அதை சொல்லிக் கொடுத்து பயிற்சி எடுத்துத் தான் செய்ய முடியும் என்று கூற முடியாது.அதுவா வர வேண்டும். அப்படித் தான் எனக்கும். நடிப்புக்காக நான் யாரிடமும் சிறப்புப் பயிற்சி எதையும் பெறவில்லை.

  கல்லூரியில் படித்தபோது கலை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடியுள்ளேன். அந்தப் புகைப்படங்களைப் பார்த்துத் தான் தெலுங்குஜெயம் பட வாய்ப்பு வந்தது. அப்படியே தமிழுக்கும் வந்து விட்டேன்.

  என்னிடம் உள்ள சில மேனரிசங்களை இயக்குநர்கள் படங்களிலும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவை ரசிகர்களாலும்ரசிக்கப்படுகிறது.

  கிளாமராக நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். கேரக்டருக்கு பொருத்தமாகத் தான் நடிக்க முடியும். கிளாமரைதேவையில்லாமல் திணித்தால் அது எடுபடாது, அசிங்கமாகப் போய் விடும். மோனலிஸா என்ற கன்னடப் படத்தில் நான்கிளாமராக நடித்துள்ளதாக கூற முடியாது.

  அதில் இரண்டு கேரக்டர்கள். ஒரு கேரக்டரை வித்தியாசப்படுத்தத் தான் கிளாமர் சேர்த்தார்கள். அதற்கான காரணம் எனக்குநியாயமாகப் பட்டதால் அதை செய்தேன். அதிலும் கூட அறுவறுப்பு இருக்காது.

  என்னைப் பொருத்தவரை தாவணியிலும் கிளாமர் காட்ட முடியும், டூ பீஸிலும் கிளாமர் காட்ட முடியும். ஆனால் இரண்டிற்கும்வித்தியாசம் உள்ளது. அந்த வித்தியாசம் எனக்கு தெரியும். அதனால் எனது கிளாமரில் அசிங்கம் இருக்காது.

  இப்போது செய்து வரும் பிரிய சகி கேரக்டர் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. இதில் மாதவனுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளேன்(முதல் படம் எதிரி). மாதவன் சிறந்த நடிகர். சக நடிகர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி தன்னுடன் போட்டி போட்டுநடிக்குமாறு கூறுவார்.

  பிரிய சகி இந்திப் படத்தின் ரீமேக். இந்தியில் ஷில்பா ஷெட்டி நடித்திருந்த ரோலில் நான் தமிழில் நடிக்கிறேன். கணவன்,மனைவிக்கிடையிலான உறவு, அதில் ஏற்படும் போராட்டங்கள் குறித்த கதை இது. நல்ல நடிப்புக்கு சரியான விருந்தாகஅமைந்துள்ளது.

  சதாவைப் பார்ப்பதே நல்ல விருந்தாக இருக்கும்போது அவர் நன்றாக நடித்தால் அது டபுள் விருந்தாகத் தான் அமையும்! சரி,சதாவுக்கு கல்யாணம் எப்போ, காதல் வயப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறதே?

  அதெல்லாம் கிடையாது. இப்போதைக்கு நன்றாக நடித்து பெயர் வாங்க வேண்டும் என்பது மட்டும்தான் எனது ஒரே நோக்கம்.எனது கல்யாணம் குறித்து அப்பா, அம்மாதான் முடிவு செய்வார்கள். எனது நலனில் அவர்களை விட வேறு யாருக்கு அக்கறைஇருந்து விட முடியும்?

  இன்னும் நான் சின்னப் பொண்ணு தான். அப்பா மடியில் தான் இப்போதும் தூங்குவேன். அப்படி இருக்கும் போது கல்யாணத்தைமட்டும் நானாக டிசைட் செய்து விட முடியுமா? அப்படி செய்தால் அது நியாயமாகுமா?

  முதலில் வெற்றி பெற வேண்டும். அப்புறம் தான் மத்ததெல்லாம்

  அதானே, சதாவுக்கு அதுக்குள்ள கல்யாணமாகிட்டா ரசிகர்கள் நிலை என்னாவது?


   உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
   Enable
   x
   Notification Settings X
   Time Settings
   Done
   Clear Notification X
   Do you want to clear all the notifications from your inbox?
   Settings X
   X