10 வருஷம் வயசு வித்தியாசம் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. விஷாலின் வருங்கால மனைவி சாய் தன்ஷிகா ‘நச்’!

சென்னை: நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா இருவரும் நிச்சயம் செய்துக் கொண்ட நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இருவரும் திருமணம் செய்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் சாய் தன்ஷிகா நடித்த யோகி டா படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி திரைக்கு வருகிறது.

தனது படத்தை புரமோஷன் செய்யும் விதமாக யூடியூப் சேனல்களுக்கு தொடர்ந்து பேட்டியளித்து வருகிறார் சாய் தன்ஷிகா. அவரிடம் சமீபத்தில், உங்களுக்கும் விஷாலுக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் குறித்த கேள்விக்கு அவர் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

Sai Dhanshika opens up about 10 plus years age difference with Vishal

மேலும், சினிமாவில் தனக்கு பெரிதாக நண்பர்களே இல்லை என்றும் சுமார் 15 வருடங்கள் நானும் விஷாலும் நல்ல நண்பர்கள் என்றும் பேசியுள்ளார்.

சாய் தன்ஷிகா வயது

1989ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி தஞ்சாவூரில் பிறந்த தன்ஷிகா 2006ம் ஆண்டு வெளியான 'மனதோடு மழைக்காலம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மறந்தேன் மெய் மறந்தேன், திருடி, பேராண்மை, மாஞ்சா வேலு, அரவான், பரதேசி, கபாலி, சோலோ, விழித்திரு, இருட்டு, லாபம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஜீ5 தமிழில் வெளியான ஐந்தாம் வேதம் வெப்சீரிஸ் சமீபத்தில் அவருக்கு நல்ல வெற்றியைத் தேடி தந்தது. இந்த வாரம் சாய் தன்ஷிகா நடித்துள்ள யோகி டா படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. 36 வயதாகும் சாய் தன்ஷிகா நடிகர் விஷாலை காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நிச்சயம் செய்துக் கொண்டார். கூடிய விரைவில் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள போகின்றனர்.

விஷால் வயது

1977ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி சென்னையில் பிறந்த நடிகர் விஷால், 2004ம் ஆண்டு செல்லமே படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானார். சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை என ஏகப்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்த விஷால் கடந்த ஆண்டு மத கஜ ராஜா படத்தின் மூலம் வெற்றியை ருசித்தார். மீண்டும் சுந்தர். சி உடன் இணைந்து புருஷன் படத்தில் நடித்து வருகிறார். தனியாக மகுடம் படத்தையும் இயக்கி வருகிறார். நடிகர் விஷாலுக்கு 48 வயதாகிறது.

வயது வித்தியாசம் பெரிய விஷயமல்ல

விஷாலுக்கும் சாய் தன்ஷிகாவுக்கும் சுமார் 12 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ள நிலையில், வயது வித்தியாசம் குறித்து பேட்டி எடுத்தவர் எழுப்பிய கேள்விக்கு, "10 வருஷம் கேப்லாம் ஒரு பெரிய விஷயமல்ல, நானும் மெச்சூரான பொண்ணு, அவரும் ரொம்ப மெசூர் ஆனவர் என பதிலளித்தார். விழித்திரு பட விழாவில் டி. ராஜேந்தர் தன்ஷிகா என்னை மதிக்கவில்லை என்று பேசியதும் மேடையில், தன்ஷிகா கண் கலங்கிய போது தனக்கு ஆதரவாக யாருமே வரவில்லை என்றும் சினிமாவில் தனக்கு பெரிதாக நண்பர்கள் என யாருமே கிடையாது என்றும் பேசினார். யோகி டா திரைப்படம் தன்ஷிகாவுக்கு திருப்புமுனையாக அமையுமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X