பள்ளி, கல்லூரி நாட்களில் நானும் காதலித்தேன் - சமந்தா

By Shankar

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கனவுக் கன்னி என்று ஒரு வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவார்கள் (இப்போது சினிமா பற்றிய கொஞ்சம் உண்மை வெளியில் தெரிவதால் பயன்படுத்துவதில்லை போலிருக்கிறது!!).

இன்றைய தேதிக்கு அந்த வார்த்தையை யாருக்காவது பயன்படுத்த வேண்டும் என்றால், அது சமந்தாவுக்குதான்.

ரொம்ப நாளைக்குப் பின் ஒரு நடிகைக்காக இளைஞர்கள் படம்பார்ப்பதை கவனிக்க முடிகிறது.

க்யூட் சமந்தா...

க்யூட் சமந்தா...

ஆள் பார்க்க அப்படியொன்றும் பேரழகி இல்லை என்றாலும், மற்ற நடிகைகளிடம் இல்லாத ஏதோ ஒரு கூடுதல் ஈர்ப்பு அவர் சிரிப்பிலும், உதட்டுச் சுழிப்பிலும், உடல் மொழியிலும் இருக்கிறது. அதை விட முக்கியம், எத்தனை வயது வேடம் போட்டாலும் கச்சிதமாகப் பொருந்துவது.

நான் ஈ

நான் ஈ

மாஸ்கோவின் காவேரி என்ற படத்தில்தான் முதல்முதலில் அவர் அறிமுகமானார். அந்தப் படம் படுகேவலமாக தோற்றுப் போனது. அடுத்த படம் பாணா காத்தாடி. அதில் பரவாயில்லை என்று பெயர் வாங்கினார். விண்ணைத்தாண்டி வருவாயாவில் சின்ன வேடத்தில் நடித்தார். அதே படத்தின் தெலுங்குப் பதிப்பில் அவர்தான் நாயகி. நான் ஈ வந்த பிறகு சமந்தாவுக்கு தனி மவுசு வந்துவிட்டது.

நீதானே என் பொன்வசந்தம்

நீதானே என் பொன்வசந்தம்

நீதானே என் பொன்வசந்தம் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், அந்தப் படத்தின் நாயகியான சமந்தாவுக்கு மட்டும் பாராட்டுகள் குவிகின்றன. ரசிகர்கள், விமர்சகர்கள், மீடியா என எல்லோருமே சமந்தாவைக் கொண்டாடுகிறார்கள்.

அந்த மகிழ்ச்சியோடு செய்தியாளர்களைச் சந்திக்க வந்திருந்தார் சமந்தா. பத்திரிகையாளர்களிலேயே தனக்கு இவ்வளவு ரசிகர்களா என்று அவரே ஆச்சர்யப்படும் அளவுக்கு அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.

நல்ல கதைகள் அமையவில்லை

நல்ல கதைகள் அமையவில்லை

"தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், ஆரம்பம் நான் சந்தோஷப்படும் அளவுக்கு இல்லை. காரணம் எனக்கு சினிமா புரியவில்லை. நல்ல கதைகளைத் தேர்வு செய்யவும் தெரியவில்லை.

தெலுங்குக்கு ஏன் முக்கியத்துவம்?

தெலுங்குக்கு ஏன் முக்கியத்துவம்?

எனக்கான நல்ல வேடங்கள் கிடைத்தது தெலுங்கில்தான். அதனால்தான் இப்போதும் தெலுங்குக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். இதுபற்றி யார் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை.

நீதானே என் பொன்வசந்தம் படம் குறித்து வந்த, வருகின்ற வி்மர்சனங்களை நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். என் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தது சந்தோஷமாக இருந்தது.

எதோ வெளிப்போயிந்தி மனசு

எதோ வெளிப்போயிந்தி மனசு

இங்கு எப்படியோ, தெலுங்கில் எதோ வெளிப்போயிந்தி மனசு நன்றாகத்தான் போகிறது. பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தொடர்ந்து, 'விண்ணைத்தாண்டி வருவாயா'(தெலுங்கு) படத்திலும், 'நீதானே என் பொன் வசந்தம்' படத்திலும் நடித்ததற்கு, அந்த வேடங்கள் எனக்கு பொருத்தமாக இருந்ததுதான் காரணம். அதைத்தவிர வேறு எதுவும் இல்லை.

நானும் காதலித்தேன்...

நானும் காதலித்தேன்...

பள்ளிக்கூட பருவத்திலும், கல்லூரி பருவத்திலும் நான் காதலித்து இருக்கிறேன். ஆனால் அது 'சீரியஸ்'ஆன காதல் இல்லை. அந்த சமயங்களில் என் மனதுக்கு பிடித்து இருந்தது. அவ்வளவுதான். இப்போது யாரையும் காதலிக்கவில்லை.

கடல், ஐ...

கடல், ஐ...

மணிரத்னத்தின் 'கடல்,'ஷங்கரின் 'ஐ'ஆகிய இரண்டு படங்களையும் நான் தவறவிட்டு விட்டேன். அந்த நேரத்தில், நோய் எதிர்ப்பு சக்தி எனக்கு குறைவாக இருந்ததால், இரண்டு மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டியதாகி விட்டது. அதற்காக வருத்தப்படவில்லை. எப்போதுமே நடந்து முடிந்ததை நினைத்து நான் வருத்தப்படுவதில்லை. நடக்கப்போவது பற்றியே சிந்திப்பேன்.

இந்தி வேண்டாம்

இந்தி வேண்டாம்

மணிரத்னம் படத்திலும், ஷங்கர் படத்திலும் வருங்காலத்தில் நடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தி படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு வந்தது. விருப்பம் இல்லாததால், நடிக்கவில்லை. நான் தென்னிந்திய மொழிப் படங்களில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X