இந்த மேஜிக் நடக்கும்னு எனக்கு அப்பவே தெரியும்.. விஜய் அரசியல் என்ட்ரி குறித்து சமந்தா பேட்டி!

சென்னை: திரையில் முன்னணி ஹீரோக்களாகக் கோலோச்சி, இன்று மக்களின் பேராதரவோடு அரசியல் களத்தில் அசைக்க முடியாத தலைவர்களாக உருவெடுத்து நிற்பவர்கள் தமிழக முதல்வர் விஜய். விஜய்யுடன் சமந்தா கத்தி, தெறி, மெர்சல் எனத் தமிழில் ஹாட்ரிக் பிளாக்பஸ்டர் படங்களிலும் ஜோடியாக நடித்து அசத்தி இருக்கிறார். தற்போது சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'மா என்டி பங்காரம்' தமிழில் 'எங்கள் தங்கம்' என்கிற பெயரில் வரும் ஜூன் 19-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில், இதன் தெலுங்கு மீடியா பேட்டியில் விஜய் குறித்து சமந்தா பேசி இருக்கிறார்.

மேஜிக் நடக்கும்னு தெரியும்: மக்களின் மனம் கவர்ந்த இரு பெரும் மாஸ் ஹீரோக்களான பவன் கல்யாண் மற்றும் தமிழக முதல்வர் இவர்களுடன் திரையில் ஜோடியாகப் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது? என்ற கேள்விக்குச் சமந்தா மிகவும் வியப்போடு பதிலளித்துள்ளார். இன்று அவர்கள் இருக்கும் உயரத்தைப் பார்க்கும்போது எனக்குள் மிகப்பெரிய வியப்பும் பெருமையும் ஏற்படுகிறது. ஆனால், நிஜத்தைச் சொல்ல வேண்டும் என்றால் இப்படி ஒரு 'மேஜிக்' இவர்களுடைய வாழ்க்கையில் ஒருநாள் கண்டிப்பாக நடக்கும் என்பது, நான் அவர்களுடன் பணியாற்றும் போதே எனக்கு நன்றாகத் தெரியும்.

அவர்கள் இருவருமே மற்ற ஹீரோக்களிடம் இருந்து முற்றிலும் வித்தியாசமானவர்கள், மிகவும் உயரிய பண்புகளைக் கொண்டவர்கள். நிஜ வாழ்க்கையில் ஏதோ ஒரு பெரிய மாற்றத்தை இவர்கள் செய்வார்கள் என்று என்னால் அப்போதே யூகிக்க முடிந்தது. தனிப்பட்ட முறையில் அவர்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும், இருவருமே ஆழமான மனிதாபிமானமும் அற்புதமான குணமும் கொண்டவர்கள். அவர்கள் இன்று மக்களின் தலைவர்களாக நிற்பதை நினைக்கும் போது எனக்கு சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

முதல்வர் விஜய்க்கு வாழ்த்து: தொடர்ந்து தமிழக முதல்வர் விஜய் குறித்துப் பேசிய சமந்தா, விஜய் சார் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அவருடைய பிஸியான அரசியல் வேலைகளால் என்னால் அவரை நேரில் சந்தித்துப் பேச முடியவில்லை. ஆனால், சோசியல் மீடியா மற்றும் தனிப்பட்ட முறையில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்தேமன் என அந்தப் பேட்டியில் சமந்தா கூறியுள்ளார்.

Samantha CM Vijay interview
Photo Credit:

எங்கள் தங்கம்: சமந்தா நடிப்பில் ஜூன் 19 அன்று வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு 'தி ஃபேமிலி மேன்', 'ஃபார்சி' போன்ற டாப் வெப் தொடர்களை இயக்கிய புகழ்பெற்ற இண்டர்நேஷனல் காம்போ ராஜ் மற்றும் டி.கே கதையை உருவாக்கியுள்ளனர். சந்தோஷ் நாராயணனின் துள்ளலான இசையில், ஸ்ரீமுகி, கௌதமி, ஆனந்த் லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X