’மகேஷ் பாபு‘ பட ஆடிஷனில் நடந்தது.. அழுது கொண்டே திரும்பினேன்.. பிரபல நடிகை பேட்டி!
சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை சமீரா ரெட்டி, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தன்னுடைய ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை உணர்ச்சியுடன் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வரணம் ஆயிரம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை சமீரா ரெட்டி, 2000களில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக இருந்தார். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அஜித்துடன் அசல், வெடி, வேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகை என பெயர் எடுத்தார். ஆனால், தான் நடிகை ஆனதற்கு முன்னால் பட வாய்ப்பிற்காக பல்வேறு ஆடிஷன்களில் அவமானங்களையும் மன அழுத்தத்தையும் சந்தித்திருப்பதாக அவர் திறந்த மனதுடன் பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகை சமீரா ரெட்டி: அதில், குறிப்பாக ஒரு சம்பவத்தை நினைவுபடுத்திய சமீரா ரெட்டி, மகேஷ் பாபு நடிக்கும் ஒரு படத்திற்காக ஆடிஷனுக்கு சென்றேன். முதல் முறை கேமிரா முன் நின்றதால் என்னால், சரியாக நடித்து கட்டமுடியவில்லை. அந்த நேரத்தில் தன்னுடைய self-confidence முழுமையாக உடைந்து, செட்-இல் இருந்து வெளியே வந்தவுடனே காரில் அமர்ந்து அழுதேன். சில நாட்களுக்குப் பிறகு, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ஒரு தனியார் ஆல்பத்திற்காக முதல் முறையாக கேமரா முன் நின்றேன். இன்றும் அந்த அனுபவம் எனக்கு நல்ல மன வலியை தந்தது. ஆனால் அதே சம்பவம் தான், "நான் என்னை நிரூபிக்க வேண்டும்" என்ற வலிமையான எண்ணத்தையும் உருவாக்கியது. இன்று என்னை நேசிக்கும் தன்னம்பிக்கை கொண்ட பெண்மணியாக நான் மாறி இருக்கிறேன் என்று அந்த பேட்டியில் சமீரா ரெட்டி பேசி உள்ளார்.
நடிகை சமீரா ரெட்டி, 2014ஆம் ஆண்டு தொழிலதிபர் அக்ஷன் வர்தே என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களின் திருமணம் பாரம்பரிய மஹாராஷ்டிரிய கோலாகலமாக நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். திருமணத்திற்குபின் சினிமாவை விட்டு விலகி இருக்கும் சமீரா, இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











