ரஜினியுடன் நடிக்கணும்!-இது சமீராவின் ஆசை

By Staff

Sameera Reddy
வாரணம் ஆயிரம், அசல் படங்களின் நாயகி சமீரா ரெட்டிக்கு புதிதாக ஒரு ஆசை பிறந்திருக்கிறது... அது... எப்படியாவது ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதுதானாம்!

ஏன் இந்த ஆசை?

"சினிமாவில் எனக்கு பிடிக்காதவர்கள் என்று யாருமில்லை. ஆனாலும் ரஜினி சாரை ரொம்பப் பிடிக்கும். அவருடன் எப்படியாவது ஒரு படம் நடித்துவிடும் ஆசை இருக்கிறது. மும்பையில் உள்ள பல நாயகிகளுக்கு இந்த ஆசை உண்டு. அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் வடக்கிலும். நைஸ் மேன்... வாய்ப்பு கிடைக்குமா பார்க்கலாம்.

சினிமாவில் என்னைக் கவர்ந்த ஜென்டில்மேன் அஜீத் குமார். அஜித்திடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். எளிமை, தன்னடக்கம் என அவரின் பாதைகள் தனித்துவம் பெற்றதாக இருக்கிறது. அஜித்துடன் நடிக்க எப்போதும் ஆவலாக இருக்கிறேன். அடுத்து பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் மோகன்லால் ஜோடியாக நடிக்கிறேன்.

வாரணம் ஆயிரம் தமிழில் எனக்கு பெரிய ஓப்பனிங்காக அமைந்தது. ஆனால் அசல் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன்..." என்கிறார் சமீரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X