Vijay - Trisha: விஜய் த்ரிஷா குறித்து தெரிந்துதான் பேசினேன்.. வருத்தமெல்லாம் இல்லை.. சமுத்திரக்கனி ஓபன்

சென்னை: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இணைந்து திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றனர். இது பெரும் பேசு பொருளாக மாறியது. அதற்கு காரணம், விஜய்யின் மனைவி குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விவாகரத்து மனு குறித்த தகவல்கள் பரவிய சில தினங்களுக்குள்ளாக விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து திருமண நிகழ்ச்சிக்குச் சென்றது தான். விஜய்யின் மனைவி சங்கீதா தனது விவாகரத்து மனுவில், நடிகர் விஜய் திருமணத்தை மீறிய உறவில் நடிகை ஒருவருடன் பழகி வருகிறார். கண்டித்தும் கேட்காமல் அதையே செய்கிறார் என்று எல்லாம் குறிப்பிட்டிருந்தார்.

இப்படி இருக்கையில் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் குடும்பத்தின் இல்லத் திருமண விழாவில் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இணைந்து கலந்து கொண்டனர். இதில் இருவரும் ஒரே மாதிரியான மேட்சிங் ஆடைகள் அணிந்து சென்றது பெரும் பேசு பொருளாக மாறியது. இது தொடர்பாக பலரும் பல கருத்துக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லி வந்தனர்.

Samuthirakani Breaks Silence on Vijay Trisha Krishnan Controversy I Spoke What I Felt No Regrets

விஜய் ரசிகர்கள் பலருமே விஜய்யை காட்டமாக விமர்சித்தனர்.நடிகர் சமுத்திரக்கனி தனது சினிமா நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருக்கும்போது, " இது என்ன விளையாட்டா? இவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கிறது. அவங்களை வெளியே கூட்டிட்டு போகிறீங்க. நான்கு சுவற்றுக்குள்ள வைத்துக் கொள்ள வேண்டியதுதானே? யாரை நீ பழி வாங்குற? எல்லாம் நல்லபடியாக வந்து கொண்டிருந்தது. கட்சிக்காரனே இனிமேல் நம்மால் முடியாது என்று சொல்கிறான்" என்று தெரிவித்திருந்தார்.

சர்ச்சை: இவரது இந்த பேச்சு பெரும் கவனத்தை ஈர்த்தது. இது மட்டுமல்லாமல் பெரும் சர்ச்சையாக மாறியது. ஆனால் நடிகர் பார்த்திபன் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்த நடிகை த்ரிஷா அவரது பேச்சுக்கு எந்தவிதமான பதிலடியும் கொடுக்கவில்லை. இப்படி இருக்கையில் இந்த விவகாரம் தொடர்பாக, நடிகர் சமுத்திரக்கனி சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

Samuthirakani Breaks Silence on Vijay Trisha Krishnan Controversy I Spoke What I Felt No Regrets
Photo Credit:

தெரிந்துதான்: அதாவது, "வீடியோவுக்கு மானே தேனே போட்டு தம்பிகள் வேற வேலைய பாத்துட்டாங்க. வீடியோ எடுக்கும் போது எனக்கு தெரியும், தெரிந்துதான் பேசினேன். அங்கு அந்த தம்பி மட்டும் தான் வீடியோ எடுத்தான். எனக்கு மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியே ஒன்று பேசத் தெரியாது.

மானே தேனே: சந்தோஷமாக இருந்தாலும் சரி, வலியாக இருந்தாலும் சரி, வேதனையாக இருந்தாலும் சரி அது அப்படியே பிரதிபலிச்சு கொண்டு போயிடனும். அந்த வீடியோவுக்கு மானே தேனே போட்டு நம்ம தம்பிகள் வேற வேலைய பாத்துட்டாங்க. அதை நான் ஒன்னும் குற்றமாக நினைக்கவில்லை, பேசி விட்டு வருத்தப்படவும் இல்லை. அது ஒரு அக்கறை, ஒரு வலி, என் மனதில் பட்டது தான் நான் பார்க்கிறேன்" என்று பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X