முறுக்கு வித்தெல்லாம் அவர் படத்தை பார்த்துருக்கேன்.. அடுத்து ரஞ்சித் படம்.. சமுத்திரகனி பேட்டி!
சென்னை: நடிகரும் இயக்குநருமான சமுத்திரகனியுடன் நடத்திய சூப்பரான சாட் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் சமுத்திரகனி நடித்து வருகிறார்.
அந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே எடுக்கப்பட்ட பேட்டியில் ஏகப்பட்ட சுவாரஸ்ய அனுபவங்களை சமுத்திரகனி நம்முடன் பகிர்ந்துள்ளார்.

சமுத்திரகனியின் பிராண்ட்
சினிமாவில் சமுத்திரகனி என்றதும் அட்வைஸ் பண்ணுகிறவர் என்றே பிராண்ட் பண்ணி உள்ளனர். யாராவது யாருக்காவது அட்வைஸ் பண்ணாலும், வந்துட்டாருப்பா சமுத்திரகனி என கிண்டல் பண்ணும் அளவுக்கு சமுத்திரகனி தமிழக ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டார். சமூகத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை சொல்வதில் எப்போதுமே அவர் தயக்கம் காட்டியதே இல்லை.

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில்
தளபதி விஜய்க்கும், அவரது அப்பாவுக்கும் சமீபத்தில் நடந்த பிரச்சனைகளும், எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய் பெயரில் புதிதாக கட்சி ஆரம்பிக்கப்பட்டு நடந்த களேபரங்களும் பரபரப்பை கிளப்பின. அது ஒரு பக்கம் சமரசமாகிவிட்ட நிலையில், எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரகனி ஒரு புதிய புராஜெக்டில் நடித்து வரும் விஷயம் வைரலாகி வருகிறது.

முறுக்கு விற்று பார்த்தேன்
எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தை 60 தடவைக்கு மேல் பார்த்துள்ளேன் என சூப்பரான மேட்டரை ரிவீல் பண்ண சமுத்திரகனி, தான் ஒரு ரஜினி வெறியன் என்றும், காசு இல்லாமல், அந்த படத்தை பார்க்க, முறுக்கெல்லாம் விற்றுப் பார்த்துள்ளேன் என்றும் சிரித்துக் கொண்டே இந்த பேட்டியில் கூறியுள்ளார்.
அடுத்து ரஞ்சித் படம்
அப்படி ரஜினிகாந்தின் தீவிர வெறியனாக இருந்த சமுத்திரகனிக்கு பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் காலா படத்தில் கூடவே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் சும்மாவா விடுவார். ரஞ்சித் கதை சொன்னதும், எப்போ ஷூட்டிங் நடிக்கிறேன் என்று சட்டென சொல்லி விட்டாராம். அடுத்தும் ரஞ்சித் படத்தில் நடிக்க உள்ள தகவலையும் சமுத்திரகனி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











