ஜீவானந்தம், செங்கொடி, புரட்சி... 'நாடோடிகள் 2' கம்யூனிஷ படமா? நடிகர் சசிகுமார் ஸ்பெஷல் பேட்டி

By

சென்னை: இந்தப் படத்துக்கும் நாடோடிகள் படத்துக்கும் கதையாக எந்த சம்பந்தமும் இல்லை என்று சொன்னார் நடிகர் சசிகுமார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது 'நாடோடிகள் 2'. சமுத்திரக்கனி இயக்கியுள்ள இந்தப் படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில், எஸ்.நந்தகோபால் தயாரித்திருக்கிறார்.

அஞ்சலி, அதுல்யா ரவி, விக்ரம் ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர், கு.ஞானசம்பந்தம் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம். படம் பற்றி நடிகர் இயக்குனர் சசிகுமாரிடம் பேசினோம்.

ஜீவானந்தம்

ஜீவானந்தம்

இதுல என்ன கேரக்டர்ல வர்றீங்க?

'இது டோட்டலா வேற கதை. முதல் பார்ட்ல காதல், நட்புன்னு கதை போகும். இதுலயும் அதெல்லாம் இருக்கு. இருந்தாலும் வேற மாதிரியான கதை. அந்த விஷயங்களோட கூடவே புரட்சியும் இருக்கும். இதுல ஜீவானந்தம்ங்கற கேரக்டர்ல நடிக்கிறேன். ஹீரோயினா அஞ்சலி நடிக்கிறாங்க. அவங்க பெயர் செங்கொடி' என்கிறார் சசிகுமார்.

 அதுல்யா ரவி

அதுல்யா ரவி

ஜீவானந்தம், செங்கொடி... கம்யூனிச கதை மாதிரி தெரியுதே?

இல்ல. நாடோடிகள் படத்துல பார்த்த நண்பர்கள், சோஷியல் ஒர்கர்ஸா இருந்தா எப்படியிருக்கும் அப்படிங்கறதுதான் கதை. அந்த நண்பர்கள் சந்திக்கிற பிரச்னைகள், அதுக்கு அவங்க என்ன பண்றாங்க, அவங்களோட புரட்சி என்ன அப்படின்னு போகும். அந்தப் பெயர்களை கேரக்டர்களுக்கு வச்சது, ஞாபகார்த்தமா இருக்கட்டும்னுதான்.

 கு.ஞானசம்பந்தம்

கு.ஞானசம்பந்தம்

முதல் பார்ட்ல இருந்தவங்கள்ல நிறைய பேர் இதுல இல்லையே?

பரணி மட்டும் நடிச்சிருக்கார். படம் பூரா என்னோடயே வர்ற கேரக்டர். முதல் பார்ட் மாதிரி, இந்தப் படமும் அவருக்கு பெயர் சொல்ற மாதிரி இருக்கும். இதுக்குப் பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் வரலாம். வேற யாரும் முந்தைய படத்துல நடிச்சவங்க இல்லை. இதுல அதுல்யா ரவி ஒரு கேரக்டர் பண்ணியிருக்காங்க. துளசி என் அம்மாவா வர்றாங்க. கு.ஞானசம்பந்தம் என் தாய்மாமாவா நடிச்சிருக்கார். அவர் வர்ற காட்சி எல்லாம் சிரிப்பா இருக்கும். என் நண்பரா விக்ரம் ஆனந்த் நடிச்சிருக்கார். படம் வேற மாதிரி இருக்கும்.

 அந்த கெமிஸ்ட்ரி

அந்த கெமிஸ்ட்ரி

வழக்கமா உங்களுக்கும் சமுத்திரக்கனிக்கும் ஒரு கெமிஸ்ட்ரி இருக்குன்னு சொல்வாங்க...

இதுலயும் இருக்கு. படம் பார்க்கும்போது அந்த கெமிஸ்ட்ரியை பார்க்க முடியும். என்னை எப்படி காண்பிக்கணும்னு அவருக்ந்த் தெரியும். அவர் எப்படி என்னை காட்டுவார்னு எனக்குத் தெரியும். எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு. அது இந்தப் படத்துலயும் தெரியும். இதை டிரைலர்லயே பார்த்திருக்க முடியும். டிரைலர்ல இருந்த அதே வேகம், படத்துலயும் இருக்கும்.

 இன்னும் சூடுதான்

இன்னும் சூடுதான்

படம் தாமதமா வர்றது...

கொஞ்சம் காலதாமதம் ஆயிடுச்சு. படம் ரெடியானப்ப என்ன ரெஸ்பான்ஸ் இருந்ததோ, அதே ரெஸ்பான்ஸ் இப்பவும் இருக்கு. இன்னும் சூடோடதான் படம் இருக்கு. ஹாட் பாக்ஸ்ல வச்சிருந்தோம். அப்படியே எடுத்து இப்ப தர்றோம். லேட்டானாலும் கதைதானே முக்கியம். அதனால படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.

 கொஞ்சம் வேகமா

கொஞ்சம் வேகமா

சமீபகாலமா அதிக படங்கள்ல நடிக்கிற ஹீரோ நீங்கதான்னு சொல்றாங்க...

அப்படிலாம் இல்லை. நான் நடிச்ச ரெண்டு, மூணு படங்கள் போன வருஷமே ரிலீஸ் ஆகி இருக்கணும். அப்படி ரிலீஸ் ஆகியிருந்தா இந்த மாதிரி தெரிஞ்சிருக்காது. ரிலீஸ் தள்ளிப் போனதால அப்படித் தெரியுது. அதோட நான் கொஞ்சம் வேகமா ஓட வேண்டி இருந்தது. இப்ப அதெல்லாம் இல்லை.

 கண்டிப்பா இயக்குவேன்

கண்டிப்பா இயக்குவேன்

இயக்குனர் சசிகுமாரை எப்ப பார்க்கலாம்?

கண்டிப்பா. ஒவ்வொரு வருஷமும் நானும் நினைச்சுட்டே இருக்கேன். அது தள்ளிப் போய்ட்டே இருக்கு. கதை ரெடி பண்ணிட்டேன். இப்ப இருக்கிற கமிட்மென்ட்ஸ் முடியணும். அதை முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. அதுக்குப் பிறகு கண்டிப்பா படம் இயக்கணும். இந்த வருடமே கூட அது நடக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X