பப்பி படத்துல நான் கவர்ச்சியா நடிக்கலை… சம்யுக்தா ஹெக்டே எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

Recommended Video

கல்யாணத்துக்கு முன்னாடி கசமுசா தப்பில்ல !! | SAMYUKTHA HEDGE | V-CONNECT | FILMIBEAT TAMIL

சென்னை: பப்பி படத்துக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செஞ்சசேன். எனக்கு முன்னாடி கேமரா ஓடிக்கிட்டிருக்கு. அவங்க என்ன சூட் பண்ணனுமோ அதை மட்டுமே செஞ்சாங்க என்று நடிகை சம்யுக்தா ஹெக்டே கூறியுள்ளார். என்னோட வேலை நடிக்கிறது. அதை மட்டுமே நான் செஞ்சேன் என்று தனது பப்பி பட சினிமா அனுபவங்களை ஃபிலிமிபீட் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் நடிகை சம்யுக்தா ஹெக்டே.

கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் சம்யுக்தா ஹெக்டே. தொடர்ந்து சில கன்னட படங்களிலும் தெலுங்கு படத்திலும் நடித்து வந்தார். தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடிக்கும் அனைவருக்கும் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விருப்பப்படுவது போல் சம்யுக்தா ஹெக்டெவும் விருப்பப்பட்டார்.

அது தற்போது நிறைவேறியுள்ளது. தமிழில் கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கால்பதித்துள்ளார். அந்த படத்தில் இவருடைய நடிப்பு அதிகமாக பேசப்பட்டது. தற்போது நாயகன் வருண் மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் பப்பி படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

சம்யுக்தா ஹெக்டே

சம்யுக்தா ஹெக்டே

முதன் முதலில் சம்யுக்தாவும் நாயகன் வருணும் பைக்கில் போகும்போது, நாயகன் திரும்பி சம்யுக்தா ஹெக்டேவை லிப் டு லிப் முத்தமிடும் காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சியை ரீ டேக் எடுக்காமல் ஒரே ஷாட்டில் எடுத்தது பற்றி பெருமையாக சொன்னார் சம்யுக்தா ஹெக்டே.

லிப் டூ லிப் காட்சி

லிப் டூ லிப் காட்சி

அந்த காட்சியை விளக்கும் போது, நீங்க ரெண்டுபேரும் பைக்கில் போகும்போது ரொம்ப நெருக்கமா (Intimacy) இருக்கணும்னு சொன்னார். வேற எதுவும் சொல்லவில்லை. நாங்களாகவே டிசைட் பண்ணி கிஸ் பண்ணிக்கிட்டோம். ஒரே டேக் ஒரே ஷாட் சீன் கச்சிதமா வந்தது என்று மகிழ்ச்சியோடு சொன்னார் சம்யுக்தா.

பாடிய ஃபிட்டா வச்சிக்குவேன்

பாடிய ஃபிட்டா வச்சிக்குவேன்

எனக்கு சின்ன வயசுல இருந்து ஸ்போர்ஸ்ன ரொம்ப இஷ்டம். அதனால் ஸ்போர்ட்ஸுல இருக்குற சீனியர் பசங்கன்னா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். நான் லைக் பண்றதும் ஸ்போர்ட்ஸ் பையனைத்தான். கல்யாணம் பண்ணினாலும், ஆக்டிவா இருக்குற பாடிய ஃபிட்டா வச்சிக்கிறவறைத்தான் கட்டிக்குவேன் என்கிறார் சம்யுக்தா.

இது வேற சம்யுக்தா

இது வேற சம்யுக்தா

பப்பி படத்துல ரொம்ப ஜாஸ்தியா மேக்கப் எதுவும் போடலை. நார்மலா இருக்குறது மாதிரிதான் படத்திலேயும் நடிச்சிருக்கோம். மேக்கப் போடுறதுக்கு மேக்ஸிமம் பத்து நிமிஷந்தான் ஆனது. அதே மாதிரி, கோமாளி படத்துல நடிச்ச சம்யுக்தா பப்பில கிடையாது. இதுல டோட்டலா டிஃப்ரண்ட்டான கேரக்டர். நான் மதுரை பொண்ணா நடிச்சிருக்கேன். அதுக்கேத்த மாதிரி இந்த படத்துல கொஞ்சம் டார்க்கா மேக்கப் போட்டிருக்கேன். வருணும் அதே மாதிரி டார்க் மேக்கப் போட்டிருக்கார்.

கவர்ச்சி காட்டலை

கவர்ச்சி காட்டலை

இந்த படத்துல செக்ஸியா நடிச்சதா எல்லோரும் சொல்றாங்க. ஆனா, வெளிப்படையா சொல்லணும்னா, இந்த படத்துல கவர்ச்சியா ஒண்ணும் நடிக்கலே. படத்துக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செஞ்சசேன். எனக்கு முன்னாடி கேமரா ஓடிக்கிட்டிருக்கு. அவங்க என்ன சூட் பண்ணனுமோ அதை மட்டுமே செஞ்சாங்க. என்னோட வேலை நடிக்கிறது. அதை மட்டுமே செஞ்சேன்.

முதல் படம் பப்பிதான்

முதல் படம் பப்பிதான்

பப்பி என்னோட முதல் படம். இதை பாத்துட்டு தான் கோமாளி டீம் என்னை நடிக்க கூப்பிட்டாங்க. ஒரு ஸ்வல் பொண்ணு கேரக்டருக்கு தேவைப்பட்டதுனால என்னை செலக்ட் பண்ணாங்க. ஆனால் அது தான் மொதல்ல ரிலீஸானது. பப்பி லேட்டாறதுக்கு காரணம், இதுல அனிமல் இருக்கு. பெர்மிஷன் வாங்கணும். அதனால் இது கொஞ்சம் லேட்டாகுது என்றார் சம்யுக்தா ஹெக்டே.

மொரட்டு சிங்கிள்ஸ்

மொரட்டு சிங்கிள்ஸ்

பப்பி படத்தைப் பற்றி பேசிய நாயகன் வருண், இந்த படம் முழுக்க முழுக்க கல்யாணம் ஆகாத கட்டை பிரம்மச்சாரிகளுக்காகவே எடுக்கப்பட்டுள்ளது என்று சொன்னார். ஏன்னா, சிங்கிளா இருக்குறவங்க தான் ரொம்ப லைக் பண்ணுவாங்க. அவங்க எதிர்பாக்குறது வேற மாதிரியான படம். அவங்க படம் பாக்க வரும்போது கொஞ்சம் ஜாலியா இருக்கணும்னு நினைச்சி வருவாங்க.

என்ஜாய்

என்ஜாய்

அவங்க வேற லெவல்ல என்ஜாய் பண்ணனும்னு நினைச்சி வருவாங்க. அவங்களுக்காகவே இந்த படத்தை எடுத்துட்டு வர்றோம். நீங்க ட்ரெய்லர்ல பாக்கும்போது எந்த அளவுக்கு என்ஜாய் பண்ணீங்களோ அதை விட டபுள் மடங்கு படத்தை பாக்கும்போது என்ஜாய் பண்ணுவீங்க. இப்ப உதாரணத்துக்கு இந்த கிளாஸ் ரூம் சீனை பாக்குறீங்கன்னா, அது அந்த சீனோட கடைசி சீன் தான். படத்துல இன்னும் டீப்பா காட்டியிருப்போம். ஆனா, அதுக்காக ரொம்ப வல்கரா எதுவும் இருக்காது. மேக்ஸிமம் எந்த அளவுக்கு காட்ட முடியுமோ அந்த அளவுக்கு காட்டியிருக்கோம்.

குடும்பத்தோட பார்க்கலாமா

குடும்பத்தோட பார்க்கலாமா

இந்த படத்தை ஃபேமிலியோட வந்து பாக்கலாம். ஆனா என்ஜாய் பண்ணி பாக்கமுடியாது. முதல்ல வேற மாதிரி தான் படத்தை எடுத்தோம். அப்புறம் ஃபேமிலியோட வந்து பாக்கமுடியாதேன்னு நினைச்சிகிட்டு தான் வேற மாதிரி எடுத்தோம். ஐய்யய்யோ நம்ம தனியா வந்து பாத்திருக்கலாமேன்னு நினைக்க தோணும். மொத்தத்துல பப்பி ஒரு மெஸேஜ் உள்ள நல்ல படமா இருக்கும் என்றார் வருண்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X