Don't Miss!
- News
"எலும்புக்கூடா" போச்சே.. குளக்கரையில் காருக்குள் ஜோடி.. திடீர்னு அந்த சம்பவம்.. விக்கித்த காஞ்சிபுரம்
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Automobiles
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
- Technology
ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
- Finance
அதானி-க்கு செக் வைத்த செபி.. தோண்டி துருவி துவங்கியது.. மொத்தம் 17..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
10 நாள் கழிச்சு பாருங்க.. முகமூடிலாம் கிழியும்.. பிக்பாஸ் போட்டியாளர்களை போட்டுத்தாக்கிய சனம்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 நிகழ்ச்சி குறித்து நடிகை சனம் ஷெட்டி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 3ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் நமீதா மாரிமுத்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
அரண்மனை 3 அருமையாக இருப்பதாக பாராட்டினாரு... உதயநிதி குறித்து சுந்தர் சி மகிழ்ச்சி!
தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வெளியேறிதாக பிக்பாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பெரும்பாலான போட்டியாளர்கள் புது முகங்களாகவே உள்ளனர்.

ஒவ்வொரு முகமூடியாய் கிழியும்
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி குறித்து பிரபல நடிகையும் கடந்த சீசன் போட்டியாளருமான சனம் ஷெட்டி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதன்படி பிக்பாஸ் குறித்து கேள்விக்கு பதில் அளித்த சனம் ஷெட்டி, முதல் 10 நாள் யாரையும் ஜட்ஜ் பண்ணாதீர்கள். அதன் பிறகு ஒவ்வொரு முகமூடியாய் கிழியும் என்றார்.

யார் சொன்ன கதை பிடித்தது?
பிக்பாஸ் வீட்டில் யார் சொன்ன கதை பிடித்தது என்ற கேள்விக்கு பதில் கூறிய சனம் ஷெட்டி, நமீதா மாரிமுத்து கூறிய கதை பிடித்திருந்தது என்றார். நம்மால் கற்பனை பண்ண முடியாத கஷ்டங்களை அவர் அனுபவித்துள்ளார்.
பிக்பாஸ் மேடை அவருக்கு பெரிய சாதனை என்று கூறிய சனம் ஷெட்டி, உலகம் முழுக்க உள்ள திருநங்கைகளுக்கு ஒரு ஐகானாக நமீதா மாரிமுத்து உள்ளார் என்றார்.

கமல் சாருக்கு பாராட்டு
மேலும் என்னால் முடிந்த அளவுக்கு நான் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுவேன் என்றும், அவருக்கு வாய்ப்பளித்த
பிக்பாஸ் டீம் மற்றும் கமல் சாருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார் சனம் ஷெட்டி. எப்போவோ நடந்திருக்க வேண்டிய சம்பவம் இப்போவாது நடந்திருக்கே சந்தோஷம் என்றும் நடிகை சனம் தெரிவித்தார்.

கொளுத்தி போடுவாரு
மேலும் நமீதாவுக்கு அடுத்தப்படியாக பிரியங்காவை பிடித்திருக்கிறது என்ற சனம் ஷெட்டி, செம காமெடியா இருக்கு.. நாங்கள் பங்கேற்ற சீசன்தான் சண்டையாக இருந்தது. இந்த சீசனில் எல்லோரும் ஜெல் ஆயிட்டாங்க. பார்க்க நல்லா இருக்கு.. ஆனால் பிக்பாஸ் விட மாட்டாரு.. கொளுத்தி போடுவாரு என்றார்.

அந்த வலி தெரியும்
பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் போவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சனம் ஷெட்டி, பிக்பாஸ் அழைத்தால் செல்வேன்.. ஆனால் அழைப்பதற்கு வாய்ப்பு கம்மி என்றார். பாவனி பேசியதை என்னால் தொடர்பு படுத்தி பார்க்க முடிகிறது. அனுபவிச்சவங்களுக்குதான் அந்த வலி தெரியும்.. இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பாவனிக்கு மனசுக்கு பிடித்தவர் கிடைப்பார் என்ற சனம் அவருக்கு வாழ்த்துக்களையும் கூறினார்.

ஷிவாங்கி புகழ் பிடிக்கும்
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தனக்கு பிடிக்கும் என்றும் தன்னை அந்த நிகழ்ச்சிக்கு அழைத்தால் நிச்சயம் கலந்து கொள்வேன் என்றும் கூறினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கியை பிடிக்கும் என்றும் அவர் சுறுசுறுப்பாக இருப்பார் என்றும் கூறினார். மேலும் புகழ் பிடிக்கும்.. அவருடைய டைம்மிங் பிடிக்கும் என்றும் சனம் ஷெட்டி கூறினார்.