»   »  சிம்பு ஏமாத்திட்டாரு: சந்தியா புலம்பல்!

சிம்பு ஏமாத்திட்டாரு: சந்தியா புலம்பல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நல்ல வேடம் என்று கூறி வல்லவன் படத்தில் எனக்கு சின்ன ரோலைக் கொடுத்து சிம்பு ஏமாற்றி விட்டார்.கிளாமர் இல்லாமல் நடிக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து நடித்தால் இப்படியா ஏமாற்றுவது என்று காதல்சந்தியா மூக்கைச் சிந்தியுள்ளார்.

மொடா மூக்கு சந்தியாவுக்கு காதல் படம் கொடுத்த பிரேக்கால் ஏக டிமாண்ட் ஏற்பட்டது. இதனால் அவர்சடசடவென நிறைய படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காதலுக்குப் பிறகு அவர் டிஷ்யூம்படத்தில் மட்டுமே நடித்தார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வல்லவன் வந்தது.

மொத்தமே மூன்று படங்களில்தான் இதுவரை சந்தியா நடித்துள்ளார். இப்போது கூடல் நகர், மாலை நேரத்துமயக்கம் என சில படங்களில் சந்தியா நடித்து வருகிறார். இரண்டு இடையே போதிய இடைவெளி தேவைஎன்பது சரிதான். அதற்காக ஏன் இத்தாம் பெரிய இடைவெளி என்று சந்தியாவிடம் கேட்டோம்.

நான் கிளாமராக நடிக்க மாட்டேன் என்ற பாலிஸியுடன் நடித்து வருகிறேன். எனக்கேற்ற, நல்லகேரக்டர்களைத்தான் நான் ஒத்துக் கொண்டு நடிக்கிறேன். காதல் படமும் அப்படித்தான், டிஷ்யூ.ம் அப்படித்தான்.பிறகு வந்த வல்லவன் படத்திலும் அப்படித்தான்.

வல்லவன் படம் பற்றி எனக்கு பெரிய ஏமாற்றம் உண்டு. அதில் எனக்கு நல்ல கேரக்டர் என்று சொல்லித்தான்நடிக்க அழைத்தார்கள். நானும் நல்ல பெயர் கிடைக்குமே என்பதற்காக கூப்பிட்டபோதெல்லாம் போய் நடித்துக்கொடுத்தேன்.

கடைசியில் பார்த்தால் நான் நடித்த பல காட்சிகளை படத்தில் காணோம். வெட்டி எறிந்து விட்டார்கள். இதனால்நான் மிகவும் மனம் நொந்து போய் விட்டேன். என்னை வல்லவன் யூனிட் ஏமாற்றி விட்டது.

அதேபோல தெலுங்கிலும் அன்னாவரம் படத்திலும் நான் ஹீரோவின் தங்கச்சியாக நடித்துள்ளேன். உண்மையில்இந்த கேரக்டரை நான் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் எனது பெற்றோர் கமிட் செய்து விட்டதால் தட்டமுடியாமல் நடித்துக் கொடுத்தேன்.

நல்ல கேரக்டர்களாக, கிளாமர் இல்லாமல் நடிக்க வேண்டும் என்று நான் காத்திருந்து பார்த்துப் பார்த்துநடிக்கிறேன். அதற்காக என்னை ஏமாற்றுவது நியாயமா?

எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிளாமராக மட்டும் நடிக்க மாட்டேன். எனக்கு கதைதான் முக்கியம், சதைகாட்டுவது அல்ல என்று மூச்சு வாங்க பேசி நிறுத்தினார் சந்தியா.

கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டேன் என்று கூறுகிறார் சந்தியா. ஆனால் கூடல் நகர் படத்தில் அவருக்கு சிலகவர்ச்சியான காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளதாம். இதற்குக் காரணம், இன்னொரு ஹீரோயினாக நடிக்கும்பாவனாவுக்கு கிளாமரான காட்சிகள் வைக்கப்பட்டதால் போட்டியை சமாளிக்க தனக்கும் கிளாமர் காட்சிகளைவைக்க நோ அப்ஜெக்ஷன் சொல்லி விட்டாராம் சந்தியா.

அது!

Read more about: sandhya blames simbu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil