»   »  நான் சின்ன பொண்ணா?-சந்தியா

நான் சின்ன பொண்ணா?-சந்தியா

Subscribe to Oneindia Tamil

என்னை எல்லோரும் இன்னும் சின்னப் பெண்ணாகவே, ஐஸ்வர்யாவாகவே பார்க்கிறார்கள் என்று சலித்துக் கொள்கிறார் சந்தியா.

காதல் மூலம் தென்றல் போல தமிழ் ரசிகர்களைக் கவர வந்த சந்தியா, தென்றலை விடவும் படு மெதுவாக கோலிவுட்டில் நிலை கொண்டுவருகிறார். மிக மிக மெதுவாகப் போய்க் கொண்டிருக்கும் அவரது திரையுலக வாழ்க்கையில் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளார்.

செல்வராகவனின் இயக்கத்தில் மாலை நேரத்து மயக்கம் படத்தில் நடித்து வரும் சந்தியா, விரைவில் வெளியாகவுள்ள கூடல் நகர் தனக்குஇன்னொரு வெற்றிப் படமாக அமையும், கே>யருக்கு உதவும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

காதலும், டிஷ்யூமும் சந்தியாவுக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தன. வல்லவனில் சந்தியாவை ஊறுகாயைப் போல பயன்படுத்தியிருந்தார் சிம்பு.

அடுத்த வரும் கூடல் நகரும், அதைத் தொடர்ந்து வரவுள்ல இது மாலை நேரத்து மயக்கமும் சந்தியாவுக்கு தெம்பு கொடுக்கும் படங்களாகஅமையுமாம்.

தமிழிலில்தான் சந்தியா, ஸ்லோ கேர்ள். ஆனால் தாய் மொழியான மலையாளத்தில் 4 படங்களை முடித்து விட்டார். அந்தப் படங்களும் ஓரளவுக்குவசூல் ரீதியாக வெற்றிப் படங்கள்தான்.

இன்னும் ஒரு ஆணித்தரமான ஹீரோயினாக தான் வரவில்லை என்ற ஆதங்கம் சந்தியாவிடம் உள்ளது. அந்த ஆதங்கத்தை, ஒரு சாயங்காலநேரத்தில் சந்தியாவை சந்தித்தபோது பகிர்ந்து கொண்டார்.

இன்னும் உங்களை ஐஸ்வர்யாவாகவே (காதல் பட கேரக்டர்) ரசிகர்கள் பார்க்கிறார்களே, அதிலிருந்து எப்படி உங்களால் மீண்டு வர முடிந்தது?

எங்கே மீண்டு வந்தேன். இன்னும் கூட ஐஸ்வர்யாகவாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் அதை மறக்கடிக்கிற மாதிரி, அடுத்தடுத்த படங்களைபார்த்துச் செய்யவுள்ளேன். கூடல் நகரும், மாலை நேரத்து மயக்கமும் இந்த ஐஸ்வர்யா இமேஜை மாற்றும் என்று நம்புகிறேன்.

சின்ன வயதிலேயே வந்து விட்டீர்கள். எப்படி வெற்றியின் சுமையை உங்களால் தாங்க முடிகிறது?

இப்படி ஒரு வெற்றி கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. பெரிய பெரிய கலைஞர்கள் இருக்கும் இடம் இது. அவர்களை மீறி புகழ்அடைவது என்பது சுலபமானதல்ல. வெற்றியால் நான் மிதப்பில் மூழ்கவில்லை. அது என்னையும் பாதிக்கவில்லை.

மலையாளப் பொண்ணாக இருப்பதால் தமிழில் தடுமாற்றம் வந்ததா?

நான் பிறப்பில் மலையாளியாக இருந்தாலும், பிறந்து, வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில்தான், சென்னையில்தான். எனவே நல்லா தமிழ் பேசுவேன்,தமிழ் கலாச்சாரம் நன்கு தெ>யும். நீங்க இப்ப ரெடின்னா பி.சுசீலாவின் பாட்டு ஒன்றை பாடட்டுமா? (காதுக்கு இன்ஷூர் பண்ணாததால் வேண்டாம்என்று அன்போடு மறுதலித்து விட்டோம்!)

தன்னை எல்லோரும் இன்னும் சின்னப் பெண்ணாகவே பார்ப்பதாக அலுத்துக் கொள்கிறார் சந்தியா (நாங்க அப்படி நெனக்கவே இல்லீங்க சேச்சி!)ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட அனைவரிலும் மிகவும் இளையவராக சந்தியாதான் இருப்பாராம். இதனால் குட்டிப் பொண்ணுப்பா என்று யாரும்இவ>டம் கலாட்டா, கேலி, கிண்டல் செய்வதில்லையாம்.

இது ஒரு வகையில் பாதுகாப்பாகவும் இருக்கிறதாம். அதேசமயம், தனது கேரியரைப் பாதிக்கும் வகையில் தனது வயது இல்லை என்றும்திருப்திப்பட்டுக் கொள்கிறார் சந்தியா.

Read more about: interview with sandhya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil