யாரோடும் கல்யாணம் இல்ல... சாந்தனுவும் நானும் நண்பர்கள்தான்! - சந்தியா
காதல் படத்தில் அறிமுகமான சந்தியாவும் பாக்யராஜ் மகன் சாந்தனுவும் காதலிப்பதாகவும், இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாகவும் திரை உலக வட்டாரங்கள் கிசுகிசுத்தன. இதற்கேற்றார்போல தமிழ்நாட்டிலும் சந்தியாவிற்கு சரியான பட வாய்ப்புகள் இல்லை. இதனால் மார்க்கெட் சரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சந்தியா பதிலளித்துள்ளார்.
காதல் இல்லை நட்புதான்
அவர் கூறுகையில், "எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. அவற்றில் நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்கிறேன். எனக்கு மார்க்கெட் சரிந்து விட்டதாக கூறுவது தவறு. மலையாளத்தில் சிறந்த படங்களில் நடித்து வருகிறேன்.
எனக்கும், சாந்தனுக்கும் காதல் என்று தொடர்ந்து கிசுகிசுக்கள் வருகிறது. நாங்கள் இருவரும் நண்பர்கள். எங்களுக்குள் காதல் இல்லை. நேரம் வரும்போது திருமணம் பற்றி எனது பெற்றோர் முடிவு எடுப்பார்கள்," என்று சந்தியா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications












