Exclusive: குணா ஹீரோயின் சினிமாவில் இருந்து விலகியது ஏன்?.. உண்மையை போட்டு உடைத்த சந்தான பாரதி!

சென்னை: மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படம் உருவாக காரணமான குணா படத்தை இயக்கிய சந்தான பாரதி பல யூடியூப் சேனலுக்கு பேட்டி எடுத்து வருகிறார். தமிழ் பிலிமி பீட்டுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், குணா படம் உருவான விதம் குறித்தும் குணா படத்தில் நடித்த நடிகை ரோஷினி என்ன ஆனார் என்பது குறித்தும் விளக்கமாக கூறியுள்ளார்.

மலையாள இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டி உள்ளது. இந்த ஆண்டு வெளியான மலையாள திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் மாறி இருக்கிறது.

Santhana Bharathi reveals why Guna movie heroine Roshini left cinema

வெறும் ஏஜென்ட் உப்பிலியப்பன் நினைச்சியா: நடிகர் சந்தானம் பாரதியை ரசிகர்கள் விக்ரம் படத்தில் பார்த்துவிட்டு ஏஜென்ட் உப்பிலியப்பன் நினைத்துக் கொண்டிருந்தனர். கமல்ஹாசன் நடித்து வெளியான சந்தித்த குணா படத்தின் இயக்குநர் என்பது பல 2கே கிட்ஸ்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் கமல்ஹாசன் நடித்து வெளியான மகாநதி படத்தையும் இயக்கியவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பிலிமி பீட் யூடியூப் சேனலுக்கு அவர் பிரத்யேகமாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

குணா படத்துக்கு புதுமுகம் ஏன்?: தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென குணா படத்திற்கு புதுமுக நடிகையை கொண்டுவந்தது ஏன் என்கிற கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் சந்தான பாரதி, தேவதை மாதிரி ஒரு பொண்ணு வேணும் ஆனால் ஏற்கனவே ரசிகர்கள் பார்த்த முகமாக இருக்கக் கூடாது என நினைத்து தான் மும்பையிலிருந்து ரோஷினி குணா படத்தில் நடிக்க அழைத்து வந்தோம் என்றார்.

Santhana Bharathi reveals why Guna movie heroine Roshini left cinema

ரேகாவுக்கு துணை கதாபாத்திரம்: புன்னகை மன்னன் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து லிப் லாக் எல்லாம் அடித்து நடித்த ரேகாவுக்கு குணா படத்தில் ரோசி என்னும் துணை கதாபாத்திரம் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். அபிராமி அபிராமி என கமல்ஹாசனை போல ரசிகர்களும் ரோஷினி பார்த்து அந்த படம் வெளியான சமயத்தில் உருகிப் போனார்கள்.

Santhana Bharathi reveals why Guna movie heroine Roshini left cinema

ரோஷினி சினிமாவில் இருந்து விலகியது ஏன்?: குணா படத்தில் நடித்த ரோஷினி அதன் பின்னர் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் சினிமாவை விட்டே விலகி விட்டாரே அதற்கு என்ன காரணம் எனக்கு ஒரு கேள்விக்கு பதில் அளித்த சந்தானபாரதி,” ரோஷினி இயல்பிலேயே பணக்கார வீட்டு பெண் தான். சினிமாவில் நடிப்பது அவரது குடும்பத்திற்கு பெரிதாக விருப்பமில்லை. ஆனாலும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்ட நிலையில், இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனால், அதன் பின்னர் ஒரு கட்டுப்பாட்டுடன் சினிமாவில் நடிப்பது அவருக்கு செட் ஆகாத காரணத்தினால் குணா படத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார் என உண்மையை ஓப்பனாக போட்டு உடைத்துள்ளார் சந்தான பாரதி.

Santhana Bharathi reveals why Guna movie heroine Roshini left cinema

தளபதி: குணா படம் தோல்வியை சந்திக்க காரணமே ரஜினிகாந்தின் தளபதி தான் என்றும் சந்தான பாரதி தனது பேட்டிகளில் வெளிப்படையாக பேசி வருகிறார். ஆரம்பத்தில் குணா குகையை பார்த்து விட்டு இங்கே ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றேன் எனக் கூறினேன். ஆனால், கமல்ஹாசன் தான் இந்த குகையில் தான் குணா படம் எடுக்க வேண்டும் என்றார். டெவில்ஸ் கிட்சன் என அழைக்கப்பட்டு வந்த அந்த குகை குணா குகையாக மாறிவிட்டது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X