வெற்றிமாறன் என்னை ரிஜெக்ட் பண்ணாரு.. ராஜேஷ் படம் ஷூட்டிங்லயே ஃபிளாப்னு சொல்லிட்டேன் - சந்தானம்!

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் தனக்காக கதாபாத்திரத்தையே உருவாக்கவில்லை என்றும் அவர் ஆரம்பத்தில் ரிஜெக்ட் செய்தார் என்றும் பொல்லாதவன் படத்தில் தான் இடம்பிடித்தது இப்படித்தான் என்றும் வெளிப்படையாக பேசியுள்ளார் நடிகர் சந்தானம். மேலும், இயக்குநர் ராஜேஷ். எம் இயக்கத்தில் சின்சியாரிட்டி இல்லை என்றும் அந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலேயே இந்த படம் ஃபிளாப் எனக் கூறினேன் என்றும் சந்தானம் ஓபனாக பேசியுள்ளார்.

ராஜேஷ். எம் இயக்கத்தில் சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க என பல படங்களில் சந்தானம் நடித்துள்ளார். ஜீவாவுடன் சிவா மனசுல சக்தி படத்தில் சந்தானம் பண்ண காமெடி எல்லாம் அந்த படம் ரீ ரிலீஸ் ஆனபோது கூட ரசிகர்களை தியேட்டர்களில் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

Santhanam opens up initially Vetrimaaran rejects him in Polladhavan

அதே போல உதயநிதியுடன் ஓகே ஓகே படத்தில் சந்தானம் பார்த்தசாரதி கெட்டப்பில் வந்து காமெடியில் வேறலெவலில் கலக்கியிருப்பார். ஆனால், ஆல் இன் ஆல் அழகுராஜா படம் பெரிதாக ஓடவில்லை. அதற்கு காரணம் இயக்குநர் பார்த்த வேலை தான் என சந்தானம் பேசியுள்ளது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

வெற்றிமாறன் ரிஜெக்ட் பண்ணிட்டாரு: தனுஷ், திவ்யா ஸ்பந்தனா நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தான் இயக்குநராக அறிமுகமானார் வெற்றிமாறன். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். அந்த படத்தில் தனக்கான கதாபாத்திரமே இல்லை என்றும் ஆரம்பத்தில் என்னோட படத்தில் சந்தானத்துக்கு வேலையே இல்லை என ரிஜெக்ட் பண்ணிட்டார். அதன் பின்னர், கருணாஸின் நண்பன் என இருந்த இடத்தில் இந்த மாதிரி எல்லாம் ஒன்லைனர்ஸ் போட்டுக் கொள்ளவா எனக் கேட்டு நானே டெவலப் பண்ணி தான் அந்த படத்தில் நடித்தேன் என்றார். சூரியை ஹீரோவாக்கி விடுதலை படத்தின் மூலம் அவரை காமெடியனில் இருந்து கதையின் நாயகனாக மாற்றியவர் வெற்றிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல பொல்லாதவன் படத்திற்கு பிறகு அவர் எந்தவொரு படத்திலும் சந்தானத்துக்கு சான்ஸ் கொடுக்கவில்லை.

முதல் நாள் ஷூட்டிங் முடிந்தவுடனே சொல்லிட்டேன்: ராஜேஷ். எம் இயக்கத்தில் கார்த்தி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் முதல் நாள் ஷூட்டிங் முடிந்தவுடனே சொல்லிவிட்டேன் இந்த படம் ஃபிளாப் தான் என அந்த படத்தில் எனக்கு பெண் வேடம் கொடுத்திருந்தனர். அதற்கு அவ்வை சண்முகி போல மேக்கப் போட்டு கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் தான் வொர்க்கவுட் ஆகும் என்றேன். ஆனால், ராஜேஷ் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எடுத்தார். அட்வான்ஸ் வாங்கியது மற்றும் ஒப்பந்தம் போட்ட நிலையில், அந்த படத்தில் நடித்தேன் எனக்கூறியுள்ளார்.

டிடி நெக்ஸ்ட் லெவல்: சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான பல படங்கள் ஃபிளாப் ஆகியுள்ளன. தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2, டிடி ரிட்டர்ன்ஸ் படங்கள் அவரை சற்றே காப்பாற்றின. இந்நிலையில், டிடி நெக்ஸ்ட் லெவல் இந்த வாரம் வெளியாக உள்ள நிலையில், எந்தளவுக்கு வெற்றியை கொடுக்கும் என்பதை வெயிட் பண்ணி பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். சூரியின் மாமன், யோகி பாபுவின் ஜோரா கைய தட்டுங்க உள்ளிட்ட படங்களும் போட்டியாக மே 16ம் தேதி வெளியாகின்றன.

FAQs
நடிகர் சந்தானம் எந்த தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானார்?

நடிகர் சந்தானம் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா தொடர் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக மாறினார்.

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X