சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தே வேண்டாம்.. ரஜினிக்கு ஹீரோயின்.. எனக்கு பொண்ணா?.. சரத்குமார் ஓபன் டாக்!

சென்னை: விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் நடித்துள்ள சரத்குமார் ஜக்குபாய் படம் தனக்கு ஒரு செட்பேக் படம் தான் என பிரத்யேக பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும், அந்த படத்தின் தோல்விக்கு யார் காரணம் என்பது குறித்து பேச விரும்பவில்லை என்றும் ஆரம்பத்திலேயே இந்த படத்தை நான் ஓகே சொல்லியிருக்கக் கூடாது எனக் கூறியுள்ளார்.

நடிகர்களின் படங்கள் தோல்வியை தழுவினாலும் அதனை யாருமே ஓபனாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு சில டாப் நடிகர்கள் மட்டுமே தோல்வியை ஒப்புக் கொண்டு அடுத்து எப்படி வெற்றிப் படங்களை கொடுக்க வேண்டும் என யோசிப்பார்கள்.

Sarathkumar Rajinikanth Mazhai Pidikatha Manithan

நடிகர் சரத்குமாரும் அப்படித்தான். ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்ட ஜக்குபாய் படத்தில் இருந்து ரஜினிகாந்த் வெளியேறிய நிலையில், சரத்குமார் நடித்த அந்த படம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டு கடைசியில் ஏமாற்றத்தை அளித்து விட்டது.

ஜக்குபாய் தோல்விக்கான காரணம்?: 1988ம் ஆண்டு வெளியான கண் சிமிட்டும் நேரம் படத்தை தயாரித்து நடித்து அறிமுகமானவர் சரத்குமார். புலன் விசாரணை படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான சேரன் பாண்டியன், நாட்டாமை மற்றும் நட்புக்காக படங்கள் எல்லாம் சரத்குமாருக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்களாக மாறின. ஏய், அய்யா, பச்சைக்கிளி முத்துச்சரம், வைத்தீஸ்வரன் என ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த சரத்குமாருக்கு ஜக்குபாய் திரைப்படம் மிகப்பெரிய படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தோல்வியை தழுவியது.

Sarathkumar Rajinikanth Mazhai Pidikatha Manithan

ஷ்ரேயாவால் வந்த சிக்கல்: ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார். உடனடியாக எனக்கு ஜக்குபாய் படத்தில் மகளாக நடித்தால் ரசிகர்கள் எப்படி பார்ப்பார்கள்.

அதுவும் ஒரு காரணமாக மாறிவிட்டது. இந்த படத்தை ஆரம்பத்திலேயே தவிர்த்து விட்டு மீண்டும் நாட்டாமை, நட்புக்காக மாதிரி ரவிக்குமாருடன் இணைந்து வில்லேஜ் சப்ஜெக்ட் பண்ணியிருந்தால் நல்லா போயிருக்கும் என்றார்.

சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தே வேண்டாம்: விஜய் அரசியலுக்கு சென்று விட்ட நிலையில், சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தும் ஓய்ந்து விடுமா என்கிற கேள்விக்கு அந்த பஞ்சாயத்தே வேண்டாம். நடிகர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். மக்கள் அதிகம் விரும்பும் நபரும் மாறிக் கொண்டே இருப்பார்கள். யார் அதிகமாக ஹிட் கொடுத்து, பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்கிறார்களோ அவர்களை மக்களும் திரையுலகினரும் கொண்டாடுவார்கள். அவர்கள் சென்று விட்டால், நிச்சயம் அடுத்து ஒருவர் அந்த இடத்துக்கு வரத்தான் போகிறார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X