»   »  அசத்திய சரிகா!

அசத்திய சரிகா!

Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசனை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வரும் சரிகா நடித்து வெளியாகியுள்ள பர்ஸானியா இந்திப் படத்தில், அவரது நடிப்புக்கு தேசிய விருதுகிடைக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

கமலை விட்டுப் பிரிந்த சரிகா, .ம்பையில் போய் குடியேறிவிட்டார். விளம்பரப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்திப் படங்களிலும்செலக்ட்டிவாக நடிக்க ஆரம்பித்தார். தாணு தயாரித்த தமிழ்ப் படம் ஒன்றில் ஒரு பாட்டுக்கு ஆடினார்.

இந் நிலையில் அவரது நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள பர்ஸானியா படத்தில் சரிகாவின் அபார நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம்உள்ளன.

குஜராத் கலவரத்தின்போது நடந்த ஒரு உண்மைக் கதையின் பின்னணியில் எடுக்கப்பட்ட சோகம் கலந்த, வலி மிகுந்த படம் பர்ஸானியா.

இந்தப் படத்துக்கு கலவர ஸ்பெஷலிஸ்ட் நரேந்திர மோடியின் குஜராத் அரசு தடை விதித்துவிட்டது. ஆனாலும் நாட்டின் பிற பகுதிகளில் படம்வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

படத்தை பார்த்துவிட்டு வருபவர்கள் கண்ணீர் திரை மறைக்கவே தியேட்டர்களை விட்டு வெளியே வருகின்றனர். குஜராத்தில் மதக்கலவரக்காரர்களிடம் சிக்கி ஒரு பார்ஸி குடும்பம் சந்திக்கும் அடி, உதை, அவமானம், பிரிவுகள் தான் கதை.

படம் பல்வேறு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்தபோதும் கூட சரிகாவின் நடிப்பு அபாரம் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த பாராட்டுக்கள் சரிகாவை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது, அவரது தன்னம்பிக்கையையும் அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து நல்லகேரக்டர்களைத் தேர்வு செய்து நடிக்கப் போவதாக கூறுகிறார் சரிகா.

நான் நிறையப் படங்களில் நடிக்க வேண்டும் என தோழிகள், குடும்பத்தினர், உறவினர்கள், நலம் விரும்பிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதைஎன்னால் மறுக்க முடியவில்லை. நல்ல கேரக்டர்களைத் தேர்வு செய்து நடிக்கப் போகிறேன்.

திரைப்படங்களையும், நடிப்பையும் என்னால் அவ்வளவு சீக்கிரம் உதறித் தள்ளி விட முடியாது. அது எனது ரத்தத்தில் ஊறிப் போன ஒன்றுஎன்கிறார் சரிகா.

ஸ்ருதி, அக்ஷரா?

இவர்களை மகள்களாகப் பெற்றது எனது பாக்கியம். இருவரும் திறமைசாலிகள், புத்திசாலிகள், துணிச்சல் மிக்கவர்கள்.

மூத்தவள் ஸ்ருதிக்கு இசையில் பெரிய ஆர்வம். சிறந்த பாடகியாக வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். சின்னவள் அக்ஷராவோ,கால்பந்து வீராங்கனையாக வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார்.

அவர்களுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்ய முழு சுதந்திரம் கொடுத்துள்ளேன். ஒரு தாயாக இருந்து அவர்களது வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ந்துவருகிறேன் என்றார் சரிகா உருக்கமாக.

கமல்?

நோ, கமென்ட்ஸ்!

என்று கூறிவிட்டு நடக்கிறார் சரிகா.

ஸ்ருதியை அமெரிக்காவில் இசைப் பள்ளியில் சேர்த்துவிட்டிருக்கிறார் கமல். அக்ஷரா மும்பைக்கும் சென்னைக்குமாக பறந்து தாய், தந்தையோடுதன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

Read more about: parzania kudos for sarika
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil