விஜய்யாக இருந்தாலும் ஏற்க முடியாது: கவுதமி கோபம்

By Siva

சென்னை: உச்சம் தொட்ட நடிகராக இருந்தாலும் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதை ஏற்கவே முடியாது என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் பட போஸ்டரில் அவர் தம்மடிப்பது போன்று போஸ் கொடுத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது.

Sarkar poster issue: Gautami says it is not acceptable

விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் ஆகியோர் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து நடிகை கவுதமி கூறியதாவது,

உச்சம் தொட்ட நடிகராக இருந்தாலும் சரி புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. சிகரெட் பிடிப்பவருக்கு மட்டும் அல்ல அவர் அருகில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

நான் புகைப்பிடிப்பதால் எனக்கு தானே கேடு என்று சொல்ல முடியாது. அவர் விடும் புகையை சுவாசிக்கும் நபர்களுக்கும் கேடு. இது கொடூரமான விஷயம் என்றார்.

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த கவுதமி தன்னை போன்றே அந்த நோயை எதிர்த்து போராடி வெற்றி பெறுபவர்களை கவுரவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X