twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "கலர், உயரம் இல்ல.. நிராகரிப்பால் நிலைகுலைந்தேன்".. சந்தித்த சங்கடங்களை பகிர்ந்த சார்பட்டா சரவணவேல்!

    |

    சென்னை: அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஆர்யா நடித்த "சார்பட்டா பரம்பரை" திரைப்படம் வெளியானது.

    Recommended Video

    ரஜினி சார் ரசிகன்னா மலேசியா தமிழர்கள்தான் | Still Photographer R. S. Raja chat p-01 |Filmibeat Tamil

    வெளியான நாளில் இருந்து இந்த படம், ரசிகர்கள் இடையே பெரும் வரப்பேற்பை பெற்று, பாராட்டுக்களை குவித்து வருகிறது. படத்தில் ஒவ்வொரு நடிகரின் சிறப்பான நடிப்பால் விமர்சகர்கள், மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    நடிச்ச படத்தக்கூட ரிலீஸ் பண்ண முடியல.. நெல்லை அதிசய பனிமாதா ஆலயத்தில் வழிபாடு செய்த அமலா பால்!நடிச்ச படத்தக்கூட ரிலீஸ் பண்ண முடியல.. நெல்லை அதிசய பனிமாதா ஆலயத்தில் வழிபாடு செய்த அமலா பால்!

    அந்த படத்தில் கௌதமன் கதாப்பாத்திரத்தில் ஆர்யாவின் நண்பராக நடித்த இந்த சரவணவேல் தான் சந்தித்த அவமானங்களையும், போராட்டங்களையும் பற்றி பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார்.

    சார்பட்டா பரம்பரை கதாப்பாத்திரங்கள்

    சார்பட்டா பரம்பரை கதாப்பாத்திரங்கள்

    சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் மக்களிடையே பெரும் பேசு பொருளாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பிட்டு சொல்லப்போனால், கபிலனாக நடித்த ஆர்யா, வேம்புலியாக நடித்த ஜான் கோக்கன், ஷபீர் கல்லரக்கல் நடித்த டான்சிங் ரோஸ் கதாபாத்திரம், கௌதமன் கதாப்பாத்திரத்தில் ஆர்யா நண்பனாக நடித்த சரவண வேல், டாடி கதாப்பாத்திரத்தில் நடித்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதி என படத்தின் பல கதாபாத்திரங்கள் லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது.

    முக்கிய கதாபாத்திரத்தில் சரவணவேல்

    முக்கிய கதாபாத்திரத்தில் சரவணவேல்

    சார்பாட்ட பரம்பரை படத்தில் இடம்பெற்ற "ஏறி அடி கபிலா, இனிமே நம்ம காலம்" , என்ற வசனம், நமக்கு இப்படி பிரண்ட் இல்லையே என ஏங்கவைக்கும் வகையில் ஆர்யாவை ஊக்கப்படுத்தும் நண்பராக நடித்திருப்பார் சரவண வேல். இந்நிலையில் சரவணவேல் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அதில் இனி வரும் காலங்களில் தான் எதிர்கொள்ள வேண்டிய போராட்டங்கள் என்னென்ன மற்றும் தான் இழந்த அனைத்து வாய்ப்புகளையும், அவமானங்களையும் பற்றி உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

    தவறவிடப்பட்ட காலா வாய்ப்பு

    தவறவிடப்பட்ட காலா வாய்ப்பு

    கபிலனுக்கும் கவுதமனுக்கும் இடையிலான நட்பு இந்த படத்தில் அதிகம் பேசப்பட்ட தலைப்புகளில் ஒன்றாகும். இந்த சார்பட்டா பரம்பரை படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், அதே சமயம் தன்னுடைய நிறம், உயரம், உடை என பல்வேறு காரணங்களால் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டதாக கூறியுள்ளார். மேலும், காலாவில் ரஜினிகாந்தின் இளைய மகன் வேடத்தில் நடிக்க இருந்ததாகவும், ஆனால் அதை தவற விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார் சரவண வேல்.

    காரணமே இல்லாமல் ரிஜெக்ட்

    காரணமே இல்லாமல் ரிஜெக்ட்

    தன் திரை அனுபவத்தை பகிர்ந்த இவர், பல்வேறு நிராகரிப்புகளை சந்தித்துள்ளதாகவும், ஆனால் சில நிராகரிப்புகள் ஏற்றுக்கொள்ள முடியாத காரணமாகவும், சில சமயங்களில் காமெடியாகவும் இருந்ததாகவும் கூறியுள்ளார். நிறத்திற்காகவும் உயரத்திற்காகவும் உடைக்காகவும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள சரவண வேல், ரிஜெக்ட் செய்தால் ஒரு நல்ல காரணமாவது இருக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால், அதன் பின்னால் சினிமா அரசியல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் உள்ளது என்று பின்னர் தான் புரிந்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.

    தட்டி கொடுத்து தான் பழக்கம்

    தட்டி கொடுத்து தான் பழக்கம்

    நிராகரிப்பையும் தாண்டி ஒரு சிலர் தன்னிடம் வந்து, உனக்கெல்லாம் எப்படி வாய்ப்பு கிடைத்தது என்று கேட்கும் போது மன வருத்தத்தில் இருந்ததாகவும் , ஆனால் எனக்கு அந்த புத்தி இல்லை என்றும், தான் பிறரை தட்டி கொடுத்து தான் பழக்கம் என்றும் உருக்கமாக கூறியுள்ளார்.

    ரொம்ப வருத்தப்பட்ட வாய்ப்பு

    ரொம்ப வருத்தப்பட்ட வாய்ப்பு

    மேலும் அவர் கூறுகையில் "நான் தவறவிட்ட வாய்ப்புக்கள் என்று சொல்லுவதை விட, வாய்ப்புக்கு போன இடங்களில் என்னை பிறர் தவறவிட்டதாக தான் நினைப்பேன்.. நான் நடித்த படங்களை விட தவறவிட்டு நடிக்காமல் போன படங்கள் தான் ஜாஸ்தி.." என்றும், நான் ரொம்ப வருத்தப்பட்ட வாய்ப்பு என்று சொன்ன போனால், காலா படம்தான் என்றும் கூறியுள்ளார்.

    ரஜினியுடன் நடிக்க ஆசை

    ரஜினியுடன் நடிக்க ஆசை

    காலா திரைப்படத்தில் ரஜினியின் இளையமகனாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது தான் பெரும் வருத்தம் என்று கூறியுள்ள சரவண வேல், ரஜினி சார் என்றால், எல்லாருக்கும் பிடித்த மாதிரி எனக்கும் அவரை ரொம்ப பிடிக்கும். அவருடன் நடிக்க மிகவும் ஆசை பட்டேன்.. ஆனால் நடிக்க முடியாமல் போனது வருத்தம்", என்று கூறியுள்ளார்.

    நல்லா நடிச்சா போதும்

    நல்லா நடிச்சா போதும்

    முதலில் நான் என் முகத்தை ரசிகர்களிடம் ரிஜிஸ்டர் செய்ய பெரிய ஹீரோக்களோடு நடித்தால் மட்டுமே சாத்தியம் என்று நினைத்தேன்.. ஆனால், இன்று அந்த எண்ணத்தை, தவிடுப்பொடியாக்கியுள்ளது இந்த சார்பட்டா பரம்பரையின் கௌதமன் கதாபாத்திரம்.. "நல்லா நடிச்சா மட்டும் போதும்", ரசிகர்கள் மனசுல நல்ல இடம் கிடைக்கும்கும்னு இப்போ புரிஞ்சுக்கிட்டேன் என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் சரவண வேல்.

    பத்து வருட பழக்கம்

    பத்து வருட பழக்கம்

    மேலும் தொடர்ந்த அவர், சார்பட்டா பரம்பரை வெளியான பின்பு, என்னிடம் நிறைய பேர் வந்து உன்னை எப்படி டைரக்டர் frame -க்குள் கொண்டு வந்தார்? முன்பே டைரக்டரை தெரியுமா? என்று கேட்டனர். உண்மையை சொல்ல போனால், இயக்குநர் பா ரஞ்சித் எனக்கு 10 வருடங்களுக்கு முன்பே பரீட்சியம். அட்டகத்தி திரைப்படத்தில் ஹீரோவாகவும் வாய்ப்பு கிடைத்தது. ஆனா அப்பவும் அந்த வாய்ப்பு தவறியது என்றும் கூறியுள்ளார் சரவண வேல்

    என் மீது தான் தவறு

    என் மீது தான் தவறு

    உன்னால் முடியும் என்று சொன்ன ஆட்களை விட, உன்னால முடியாது என்று சொன்ன ஆட்கள் தான் அதிகம். என் அப்பா அம்மா உட்பட நண்பர்கள் சிலரால் நான் புறக்கணிக்கப்பட்டுள்ளேன். ஏகப்பட்ட நிராகரிப்புகளை சந்தித்துள்ளேன். அப்பொழுது தான் புரிந்து கொண்டேன், தவறு அவர்களுடையது இல்லை; என் மீது தான் என்று; நமக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், அந்த வாய்ப்பினை மீறி நாம தான் உழைக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.

    15 படங்கள் நடிச்சுருக்கேன்

    15 படங்கள் நடிச்சுருக்கேன்

    மேலும், எனக்கு சினிமா பட வாய்ப்புகள் வராதோ என்ற பயம் இருந்தது. ஆனால் பா ரஞ்சித் அண்ணா எப்பவும் அதை உடைச்சுருவாரு. அவர் என்கிட்ட, எப்பவும் சொல்லுவாரு, இது ஒரு வேலை, வேலை செஞ்சா சம்பளம் கிடைக்கும், ஏன் dull-லா இருக்கன்னு சொல்லி வருத்தத்துல நான் இருக்கும் போதெல்லாம் என்னை உற்சாகப்படுத்துவார். என்னை பொறுத்த வரையில் சின்ன வாய்ப்பு பெரிய வாய்ப்பு என்றெல்லாம் கிடையாது. ஒரு 15 படங்களுக்கு மேல் பண்ணியிருக்கேன். அது இப்போ நான் சொன்னா தான் மத்தவங்களுக்கு தெரியும்.

    உழைப்பை மட்டுமே மூலதனமாக

    உழைப்பை மட்டுமே மூலதனமாக

    இனி வரும் காலங்களில், அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற ஒரு பயமும் இருக்கு. ஏன் என்றால் எனக்கு பெரிய பின்புலம் எதுவும் கிடையாது. உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டுள்ளேன். ஒரு சின்ன பயம் இருந்தும் சரி உழைப்பு இருக்குல்ல, தோற்க மாட்டோம்ங்கிற ஒரு நம்பிக்கையும் இருக்கு. அவ்ளோ தான்.. என்றார் சார்பட்டா சரவணவேல்...

    சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் கௌதமன் கத்பாத்திரத்தில் நடித்த இந்த சரவணவேல் பற்றி உங்கள் கருது என்ன என்பதை கமெண்ட் மூலம் தெரிவியுங்கள்..

    English summary
    Pa.Ranjith's Sarpatta Actor Saravana Vel, Who acted Arya's Friend gouthaman shares the struggles and experience in his carrer in an interview.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X